புத்தாண்டு நாள்

புத்தாண்டு நாள் (புத்தாண்டு தினம்; புதுவருடப் பிறப்பு; வருடப் பிறப்பு; New Year's Day) சனவரி 1 அன்று உரோமானியப் பேரரசில் கிமு 45 இலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் நவீன கிரெகோரியின் நாட்காட்டி, மற்றும் யூலியன் நாட்காட்டி ஆகியவற்றின் முதல் நாளாகும்.[1] உரோமானியர்கள் இந்தப் புத்தாண்டு நாளினை ஜானுஸ் என அழைக்கப்படும் வாயில்களின், கதவுகளின் கடவுளுக்காகவே வழங்கிவந்தனர். அந்தக் கடவுளின் பெயரைக் கொண்டே ஆண்டின் முதல் மாதமான இது ஜனவரி (சனவரி) என்று அழைக்கப்படுகிறது. இயேசுவின் விருத்த சேதன விழா நாளும் இந்நாளிலேயே ஆங்கிலிக்கன் தேவாலயம், லுத்தரன் தேவாலயம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது.[2][3] இந்நாட்களில் பல உலக நாடுகளும் கிரெகோரிய நாட்காட்டியையே தங்களது பொதுவான நாட்காட்டியாகப் பயன்படுத்துகின்றனர். மேலும், இந்தப் புத்தாண்டு நாளே உலகின் அதிகமாகக் கொண்டாடப்படும் பொது விடுமுறை நாளாகும். இது ஒவ்வொரு கால மண்டலத்திலும் நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கும்போது வாணவெடிகள் வெடித்துக் கொண்டாடப்படுகிறது.

புத்தாண்டு நாள் (New Year's Day)
Mexico City New Years 2013! (8333128248).jpg
புத்தாண்டு நாளின் நள்ளிரவில் மெக்சிகோ நகரத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
கடைபிடிப்போர்கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துபவர்கள்
முக்கியத்துவம்கிரிகோரியன் ஆண்டின் முதல் நாள்
கொண்டாட்டங்கள்புத்தாண்டுத் தீர்வுகளை எடுத்தல், பேரணிகள், விளையாட்டு நிகழ்வுகள், பட்டாசு வெடித்தல்
நாள்சனவரி 1
நிகழ்வுஆண்டுதோறும்

மேற்கோள்கள்தொகு

  1. பண்டைய (குடியரசுக்கால) உரோமானிய நாட்காட்டியில், புத்தாண்டு சனவரி 1 ஆம் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னர், டிசம்பர் 23 அல்லது 25 இற்குக் கிட்டவாக, சட்டர்னாலியா என்ற உரோமைப் பெருவிளழாவின் இறுதில், ஆரம்பித்தது.
  2. McKim, Donald K. (1996). Dictionary of Theological Terms. Westminster John Knox Press. பக். 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0664255116. https://archive.org/details/westminsterdicti0000mcki. 
  3. Hobart, John Henry (1840). A Companion for the festivals and fasts of the Protestant Episcopal Church. Stanford & Co.. பக். 284. https://archive.org/details/acompanionforfe01hobagoog. 

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தாண்டு_நாள்&oldid=3582811" இருந்து மீள்விக்கப்பட்டது