விடுமுறை நாள்

விடுமுறை நாட்கள் என்பன தனிப்பட்ட மனிதர், அரசுகள் அல்லது சமய அமைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதும் சிறப்பு நாட்கள் ஆகும். ”விடுமுறை நாள்” என்னும் தொடருக்கு உலகின் பல நாடுகளில் பல பொருள் கொள்ளப்படுகிறது. ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் விடுமுறை என்றால் வழக்கமான பணி அல்லது கல்வி கற்கையில் ஈடுபடாமல் ஓய்வு எடுக்கும் நாளாகும். ஐக்கிய அமெரிக்காவில் “விடுமுறை” என்பது ஏதேனும் பண்டிகை அல்லது விழாவைக் கொண்டாடக் குறிக்கும் நாள் எனக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில் விடுமுறை என்பது நிறுவனங்கள் பண்பாடு, அரசியல், சமூக, சமய காரணங்களால் மூடப்பட்டிருக்கும் நாட்களைக் குறிக்கிறது.

சிறப்பு நாட்களில் பணியிலிருந்து விடுப்பு தரப்படுவது மட்டுமன்றி பணி/கல்வி அட்டவணையின் ஒரு இயல்பு அங்கமாகவும் விடுப்பு அளிக்கப்படலாம். வாரத்தின் ஆறு நாட்கள் பணிபுரிந்தவர்களுக்கு, ஒரு நாள் ஓய்வெடுப்பதற்காகவும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

வார விடுமுறை நாள்

தொகு

பல சமயங்களில் வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஒரு நாள் கட்டாய ஓய்வு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக யூதத்தில் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஷபாத் என்னும் கட்டாய ஒய்வு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. கிறித்தவத்தில் ஞாயிற்றுக்கிழமையும் பல இசுலாமிய நாடுகள் வெள்ளிக்கிழமையும் இவ்வாறு வார விடுமுறையாகக் கொண்டாடப்படுகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகளில் (கிறித்தவ நாடுகள் இல்லையெனினும்) ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் தொழிலாளர்களுக்கான விடுமுறை

தொகு

இந்தியாவில் தொழிலாளர்களுக்கு வார விடுமுறை, ஆண்டு விடுமுறை, தேசிய விடுமுறை, மாநில விடுமுறை, தற்செயல் விடுமுறை, மருத்துவ விடுமுறை போன்றவைகளை அளிக்க வேண்டும் என இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் 1948 இல் கூறப்பட்டுள்ளது. இதுபோல் பெண்களுக்கு பேறுகால விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்திய பேறு கால நலச் சட்டம் 1961இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார விடுமுறை

தொகு

இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 52இன் கீழ் வார விடுமுறை குறித்த விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை,

  1. வாரத்தின் முதல் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை சாதாரணமாக விடுமுறை நாளாகும்.
  2. தொழிற்சாலை நிர்வாகி, ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக அதற்கு முன்னுள்ள அல்லது பின்னுள்ள மூன்று கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளை விடுமுறை நாளாக அறிவிக்கலாம்.
  3. ஒருவரது வார விடுமுறை நாள் என்பது அவரது மாற்றுமுறை வேலை நேரம் முடிந்த நிமிடத்திலிருந்து தொடங்கி அடுத்த 24 மணி நேரத்தைக் குறிக்கும்.
  4. வார விடுமுறை நாள் இல்லாமல் ஒருவர் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு மேல் வேலை பார்க்கக் கூடாது.
  5. வார விடுமுறை வழங்க மறுத்து தொடர்ந்து வேலை செய்யுமாறு வற்புறுத்தப்படும்போது தொழிலாளி இழப்பீடு கோரிப் பெற உரிமையுடையவராகிறார்.

தேசிய விடுமுறை

தொகு

தேசிய விடுமுறை நாட்களாக மூன்று நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

  1. குடியரசு நாள் - சனவரி 26
  2. இந்திய விடுதலை நாள் - ஆகத்து 15
  3. காந்தியடிகள் பிறந்த நாள் - அக்டோபர் 2

இந்நாட்களில் அனைத்து அமைப்புககளும் கட்டாயமாக விடுமுறை வழங்குமாறு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளன. நடுவண் அரசின் பல்வேறு அமைச்சகங்களும், அரசுடைமை நிறுவனங்களும் அவை அமைந்துள்ள மாநில அரசு விடுமுறைகளைத் தழுவியும் அம்மாநில ஊழியர் சம்மேளனங்களின் பரிந்துரையின்படியும் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டுக்குரிய விடுமுறைகளை அறிவிக்கின்றன.

மாநில விடுமுறை

தொகு

தமிழ்நாட்டில் உள்ள விடுமுறை நாட்கள்

  • புத்தாண்டு தினம் (ஜனவரி 1)
  • பொங்கல்
  • திருவள்ளுவர் தினம்
  • உழவர் திருநாள்
  • குடியரசு தினம் (ஜனவரி 15)
  • மிலாடி நபி
  • தெலுங்கு வருட பிறப்பு
  • வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிப்பு
  • மகாவீர் ஜெயந்தி
  • புனித வெள்ளி
  • புத்தாண்டு தினம்
  • டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினம்
  • மே தினம் (மே 1)
  • சுதந்திர தினம் (ஆகஸ்டு 15)
  • ரம்ஜான் ஆகஸ்டு
  • கிருஷ்ண ஜெயந்தி
  • விநாயகர் சதுர்த்தி
  • வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பு
  • காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2)
  • ஆயுத பூஜை
  • விஜய தசமி
  • பக்ரீத்
  • தீபாவளி
  • மொகரம்
  • கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25)

பணி விடுப்புகள்

தொகு

இந்த விடுமுறை நாட்களைத் தவிர பணியாளர்களின் தனிப்பட்டத் தேவைகளுக்காக "பணி விடுப்புக்கள்" கொடுக்கப்படுகின்றன. இவை தற்செயல் நிகழ்வுகள், பேறு காலத் தேவைகள், உடல்நலக்குறைவுகள் போன்றவற்றிற்காக ஆண்டுக்கு இவ்வளவு நாட்கள் என ஒவ்வொரு அமைப்பாலும் வரையறுக்கப்பட்டு ஊழியர் நியமன உத்தரவில் குறிப்பிடப்படுகின்றன. தவிர நடுவண் மற்றும் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் பதினோரு வேலை நாட்களுக்கு ஒருநாள் என ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது.

இலங்கையில் பொது விடுமுறை நாட்கள்

தொகு
  • முழுமதி நாட்கள் (மாதம் தோறும்)
  • தைப்பொங்கல்
  • தேசிய தினம் பெப்ரவரி 4
  • மகா சிவராத்திரி
  • பெரிய வெள்ளி
  • புத்தாண்டு தினத்திற்கு முந்திய நாள்
  • புத்தாண்டு தினம்
  • மே தினம் மே1
  • ரம்ஜான் ஆகஸ்டு
  • தீபாவளி
  • கிறிஸ்துமஸ்

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுமுறை_நாள்&oldid=3814473" இலிருந்து மீள்விக்கப்பட்டது