1580கள்
பத்தாண்டு
1580கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1580ஆம் ஆண்டு துவங்கி 1589-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1580
- சனவரி 31 – போர்த்துகல்லின் மன்னர் என்றி வாரிசு இல்லாமல் இறந்தார்.
- மார்ச் 25 – போர்த்துக்கலின் என்றி வாரிசின்றி இறந்ததை அடுத்து, இரு அரசுகளின் விரும்பிய ஒன்றிணைப்பின் மூலம் எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு போர்த்துகல்லின் அரசராக முதலாம் பிலிப்பு என்ற பெயரில் முடி சூடினார்.
- ஏப்ரல் 6 – இங்கிலாந்து, பிரான்சு நாடுகளில் டோவர் நீரிணைப் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.[1]
- சூன் – இங்கிலாந்து, உதுமானியப் பேரரசுடன் வணிக உடன்பாட்டை ஏற்படுத்தியது.[2]
- சூன் 11 – புவெனஸ் ஐரிஸ் நகரம் உருவானது.
- இயேசு சபை மதப்பரப்புனர்கள் முகலாயப் பேரரசர் அக்பரின் அவைக்கு வந்தனர்.[3]
- தமிழ் அச்சிடல் வரலாறு: என்றிக்கே என்றிக்கசின் பாவ அறிக்கை நூல் (Confessionario) 214 பக்கங்களில் வெளியானது.
1581
- மார்ச் - கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு கடுமையான தண்டம் விதிக்கும் சட்டத்தை இங்கிலாந்தின் நாடாளுமன்றம் கொண்டுவந்தது.[1]
- மார்ச் 25 எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு போர்த்துகலின் முதலாம் பிலிப்பு மன்னனாக ஆட்சியில் அமர்ந்தார்.
- ஏப்ரல் 4 - உலகை சுற்றி வந்ததை அடுத்து பிரான்சிஸ் டிரேக் முதலாம் எலிசபெத் மகாராணியால் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.[4]
- சூலை 26 - வடக்கு நெதர்லாந்து எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- சூலை 26 - ரோமில் துரிங்கியா என்ற இடத்தில் விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது.[5]
- செப்டம்பர் - சுவீடனின் கூலிப் படை ஒன்று உருசியாவிடம் இருந்து (இன்றைய எசுத்தோனியாவில் உள்ள) நார்வா நகரைக் கைப்பற்றியது..
- டிசம்பர் 1 - இயேசு சபையைச் சேர்ந்த எட்மன்ட் காம்பியன் என்ற மதகுரு தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்காக இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்டார்.[2]
- முதலாம் ராஜசிங்கன் இலங்கையின் சீதாவக்கை அரசின் மன்னனாக முடி சூடினான்.
1582
- சனவரி 15 – லிவோனியா, மற்றும் தெற்கு எசுத்தோனியா ஆகிய பகுதிகளை உருசியா போலந்து-இலித்துவேனியாவிடம் இழந்தது.
- பெப்ரவரி 24 – திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார்.
- அக்டோபர் 4 – இத்தாலி, போலந்து, ஐபீரிய மூவலந்தீவு ஆகியன அடுத்த நாளான வெள்ளிக்கிழமையை 10 நாட்கள் பின்தள்ளி அக்டோபர் 15 ஆக மாற்றி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தின.
- டிசம்பர் 9 – பிரான்சு அடுத்த நாளான திங்கட்கிழமையை டிசம்பர் 20 ஆக அறிவித்து கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
- இயேசு சபை மத்தேயோ ரீச்சி சீனாவிற்குள் வர மிங் ஆட்சியாளரால் அனுமதிக்கப்பட்டார்.
- யாழ்ப்பாணத்தின் ஆட்சி புவிராஜ பண்டாரம் என்பவனுக்கு மாறியது.
- கோட்டை இராச்சியத்தின் தர்மபால மன்னன் நாட்டை போர்த்துக்கேயரிடம் ஒப்படைத்தான்.[6]
- யாழ்ப்பாணத்தில் பிரான்சிசுக்கன் தேவாலயத்தைக் கட்டுவதற்கு போர்த்துக்கீசருக்கு யாழ்ப்பாண மன்னன் அனுமதி வழங்கினான்.[6]
1583
- சூலை 25 – குங்கோலிம் கிளர்ச்சி: கோவாவில் போர்த்துக்கீச ஆட்சிக்கு எதிரான இந்துக்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. 5 இயேசு சபை மதகுருமார், ஒரு ஐரோப்பியர், 14 இந்தியக் கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்கள் பலர் பின்னர் அரசினால் படுகொலை செய்யப்பட்டனர்.
- ஆகத்து 5 – சர் அம்பிரி கில்பர்ட் நியூபவுண்ட்லாந்து தீவை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார்.
- அலகாபாத் கோட்டை முகலாயப் பேரரசர் அக்பரால் கட்டப்பட்ட்டது.
1584
- மார்ச் 18 (புதிய நாட்காட்டி மார்ச் 28) – 1533 முதல் உருசியாவை ஆண்டு வந்த நான்காம் இவான் இறந்தான். அவரது மகன் முதலாம் பியோதர் பேரரசனானான்.
- சூலை 10 – ஒரேஞ்சு இளவரசர் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டார்.
1585
- சனவரி 12 – நெதர்லாந்து கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
- பெப்ரவரி – எசுப்பானியர் பிரசெல்சு நகரைக் கைப்பற்றினர்.
- ஏப்ரல் 24 – ஐந்தாம் சிக்சுடசு 227வது திருத்தந்தையானார்.
- மே 19 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: எசுப்பானியா எசுப்பானியத் துறைமுகங்களில் நின்றிருந்த ஆங்கிலேயக் கப்பல்களைக் கைப்பற்றினர்.[1] ஆங்கிலோ-எசுப்பானியப் போர் (1585–1604) ஆரம்பம்.
- ஆகத்து 17 – ஆண்ட்வெர்ப் எசுப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
- ஆகத்து 20 – இங்கிலாந்து டச்சுக் கிளர்ச்சியை ஆதரிக்க முடிவெடுத்தது. இங்கிலாந்து இதன் மூலம் எண்பதாண்டுப் போரில் நுழைந்தது.[2]
- ஐரோப்பாவில் சாக்கலேட் வணிக முறையில் அறிமுகமானது.
1586
- சூன் 16 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி தனது வாரிசாக எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னரை அறிவித்தார்.
- செப்டம்பர் 20–21 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தைக் கொலை செய்து மேரி ஸ்டுவர்டை அரசியாக்கத் திட்டமிட்டிருந்த 14 பேர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டனர்.
- பிளம்மியர் கணிதவியலாளர் சிமொன் இசுட்டெவின் வெவ்வேறு திணிவுடைய இரு பொருட்கள் ஒரே வேகத்தில் வீழ்கின்றன என்பதை செய்து காண்பித்தார்.
- புளோரிடாவின் செயின்ட் ஆகத்தீன் நகர், டொமினிக்கன் குடியரசின் சான்டோ டொமிங்கோ நகரங்கள் ஆங்கிலேயக் கடற்படைத்தலைவர் பிரான்சிஸ் டிரேக்கினால் தீக்கிரையாக்கப்பட்டன.
- முதலாவது ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல் வான்கார்டு இங்கிலாந்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- ஆங்கிலேயர் தோமசு கவென்டிசு உலகைச் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார்.
- என்றீக்கே என்றீக்கசு அடியார் வரலாறு என்ற நூலை வெளியிட்டார்.
1587
- பெப்ரவரி 1 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தமைக்காக ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கு எலிசபெத் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.
- பெப்ரவரி 8 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டார்.
- சீனாவில் மிங் ஆட்சிக் காலத்தில் கடும் பட்டினி நிலவியது.
1588
- பெப்ரவரி - இலங்கையின் தலைநகர் கொழும்பை போர்த்துக்கீசரிடம் இருந்து கைப்பற்றும் தமது எண்ணத்தை சிங்களவர்கள் கைவிட்டனர்.
- மே 28 - 30,000 பேர்களுடன் ஸ்பானிய அர்மாடா எனப்படும் 130 ஸ்பானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன. மே 30இலேயே கப்பல்கள் முழுவதும் துறைமுகத்தை விட்டுப் அகன்றன.
- ஜூலை 31 - எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது கடற்படைச் சமரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
- ஆகஸ்ட் 6 - எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் கிரேவ்லைன்ஸ் என்ற இடத்தில் (தற்போது பிரான்சில்) இடம்பெற்ற சமரில் மீண்டும் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
1589
- மூன்றி என்றிகளின் போர்: 1588 டிசம்பரில் இடம்பெற்ற முதலாம் என்றி இளவரசரின் படுகொலைக்கு வஞ்சம் தீர்க்கும் பொருட்டு பிரான்சில் கத்தோலிக்க முன்னணி பிரான்சு மன்னன் மூன்றாம் என்றியை எதிர்த்துக் கிளர்ச்சியில் இறங்கியது. மூன்றாம் என்றி தனது பழைய எதிரியான நான்காம் என்றியுடன் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருவருமாக இணைந்து பாரீசைக் கைப்பற்றினர்.
- ஆகத்து 1 – பிரான்சின் மூன்றாம் என்றி மன்னன் தொமினிக்கன் சபையைச் சேர்ந்த துறவி யாக் கிளெமென்டினால் கத்திக்குத்துக்கிலக்காகினார். கிளெமென்டு உடனேயே கொல்லப்பட்டார்.
- ஆகத்து 2 – கத்திக்குத்துக்கு இலக்கான பிரான்சின் மூன்றாம் என்றி இறந்தார்.
பிறப்புகள்
தொகு1580
- சனவரி – ஜோன் சிமித், ஆங்கிலேயத் தேடலறிஞர் (இ. 1631)
- ஏப்ரல் 24 – வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சு புனிதர் (இ. 1660)
1581
- ஏப்ரல் 24 - வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சு மதகுரு (இ. 1660)
1584
- திருமலை நாயக்கர், மதுரை நாயக்க மன்னர் (இ. 1659)
1585
- யூரியெல் த காசுட்டா, போர்த்துக்கீச யூத மெய்யியலாளர் (இ. 1640)
- மிகேல் டி நோரொன்யா, லின்யாரெசின் நாலாம் கவுன்ட்டு, போர்த்துக்கேயப் போர் வீரர் (இ. 1647)
1586
- ஏப்ரல் 20 – லீமா நகர ரோஸ், எசுப்பானியப் புனிதர் (இ. 1617)
இறப்புகள்
தொகு1580
- சூன் 10 – லூயிஸ் டி கமோஸ், போர்த்துக்கீசக் கவிஞர் (பி. 1524)
1581
- செப்டம்பர் 1 - குரு ராம் தாஸ், நான்காவது சீக்கிய குரு (பி. 1534)
- சூர்தாசர், சமயபரப்புநர் (பி. 1478)
1582
- அக்டோபர் 4 – அவிலாவின் புனித தெரேசா, எசுப்பானியப் புனிதர் (பி. 1515)
1584
- மார்ச் 18 – உருசியாவின் நான்காம் இவான் (பி. 1530)
- நவம்பர் 4 – சார்லஸ் பொரோமெயோ, இத்தாலியக் கருதினால் (பி. 1538)
1585
1587
- பெப்ரவரி 8 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (பி. 1542)
- மே 18 - கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ், இத்தாலியப் பினிதர் (பி. 1515)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 160–162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ 2.0 2.1 2.2 Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 230–233. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ Roberts, J. (1994). History of the World. Penguin.
- ↑ Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102715-0.
- ↑ "Catalogue of aërolites and Bolides, from A.D. 2 to A.D. 1860". Meteoritehistory.info. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
- ↑ 6.0 6.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 2