லீமா நகர ரோஸ்

லீமா நகர புனித ரோஸ் (Saint Rose of Lima, ஏப்ரல் 20, 1586 - ஆகத்து 24, 1617) அமெரிக்காக்களின் முதல் புனிதர் ஆவார்[1]. இவர் பெரு நாட்டில் உள்ள லீமா நகரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் இசபெல் பிலோரேஸ் ஒலிவியா. இவர் சிறு குழந்தையாய் இருந்தபோது, இவரின் முகம் ரோசா மலர் போல மாறியதை இவர் வீட்டுப் பணியாளர் பார்த்தார் என்பர். ஆகவே இவர் பெயர் ரோஸ் (Rose) என வழங்கலாயிற்று.

லீமா நகர புனித ரோஸ்
Saint Rose of Lima
லீமா நகர புனித ரோஸ்
கன்னியர்
அமெரிக்காக்களின் முதல் புனிதர்
பிறப்பு(1586-04-20)ஏப்ரல் 20, 1586
லீமா நகரம், பெரு
இறப்புஆகத்து 24, 1617(1617-08-24) (அகவை 31)
லீமா நகரம், பெரு
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கம்
அருளாளர் பட்டம்ஏப்ரல் 15 1668[மேற்கோள் தேவை], ரோம் by ஒன்பதாம் கிளமெண்ட்
புனிதர் பட்டம்ஏப்ரல் 2 1671, ரோம் by பத்தாம் கிளமெண்ட்
முக்கிய திருத்தலங்கள்லீமா நகரில் உள்ள புனித தொமினிக் மடம், பெரு
திருவிழாஆகத்து 20
சித்தரிக்கப்படும் வகைநங்கூரம், ரோசா மலர், குழந்தை இயேசு
பாதுகாவல்இந்தியா, தோட்டப்பணியர், மலர் விற்பனையாளர், தையலர், இலத்தீன் அமெரிக்கா, அமெரிக்காக்களின் பழங்குடியினர்

இவர் கடும் தவ முயற்சிகளை மேற்கொண்டார்[2]. தன் அழகால் பிறருக்கு பாவ சோதனை வராமல் இருக்க தன் முகத்தில் கடுங்கார நீருடன் மிளகையும் தடவிக் கொண்டு, தன் நீண்டக் கூந்தலை வெட்டினார். தன் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக டொமினிகன் (Dominican) கன்னியர் சபையில் 1602-ஆம் ஆண்டு சேர்ந்தார். அதன் பின் 11-வருடங்களாக கடும் தவமும், பரவச அனுபவங்களும் (ecstasy) பெற்றார்.

தாம் முன்னறிவித்த படியே ஆகத்து 24, 1617 அன்று மரித்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் அம்மறைமாவட்ட பேராயர் இரங்கல் உரை நிகழ்த்தினார்.

குறிப்புகள்

தொகு
  1. Patron Saints Index: Saint Rose of Lima பரணிடப்பட்டது 2010-05-27 at the வந்தவழி இயந்திரம் Retrieved on 2008-08-23.
  2. புனித லீமா நகர ரோஸின் வரலாறும் பாடுகளும்


"https://ta.wikipedia.org/w/index.php?title=லீமா_நகர_ரோஸ்&oldid=3816138" இலிருந்து மீள்விக்கப்பட்டது