1589
ஆண்டு 1589 (MDLXXXIX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1582 இற்குப் பின்னரும் உலகின் பல நாடுகளில் யூலியன் நாட்காட்டி 1929 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1589 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1589 MDLXXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1620 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2342 |
அர்மீனிய நாட்காட்டி | 1038 ԹՎ ՌԼԸ |
சீன நாட்காட்டி | 4285-4286 |
எபிரேய நாட்காட்டி | 5348-5349 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1644-1645 1511-1512 4690-4691 |
இரானிய நாட்காட்டி | 967-968 |
இசுலாமிய நாட்காட்டி | 997 – 998 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 17 (天正17年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1839 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3922 |
நிகழ்வுகள்
தொகு- மூன்றி என்றிகளின் போர்: 1588 டிசம்பரில் இடம்பெற்ற முதலாம் என்றி இளவரசரின் படுகொலைக்கு வஞ்சம் தீர்க்கும் பொருட்டு பிரான்சில் கத்தோலிக்க முன்னணி பிரான்சு மன்னன் மூன்றாம் என்றியை எதிர்த்துக் கிளர்ச்சியில் இறங்கியது. மூன்றாம் என்றி தனது பழைய எதிரியான நான்காம் என்றியுடன் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருவருமாக இணைந்து பாரீசைக் கைப்பற்றினர்.
- ஆகத்து 1 – பிரான்சின் மூன்றாம் என்றி மன்னன் தொமினிக்கன் சபையைச் சேர்ந்த துறவி யாக் கிளெமென்டினால் கத்திக்குத்துக்கிலக்காகினார். கிளெமென்டு உடனேயே கொல்லப்பட்டார்.
- ஆகத்து 2 – கத்திக்குத்துக்கு இலக்கான பிரான்சின் மூன்றாம் என்றி இறந்தார்.
பிறப்புகள்
தொகுபிறப்புகள்
தொகு- அக்டோபர் 8 – தோடர் மால், பேரரசர் அக்பரின் நிதியமைச்சர்
- தான்சேன், பேரரசர் அக்பரின் அரசவைக் கலைஞர் (பி. 1506)