1590கள்
பத்தாண்டு
1590கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1590ஆம் ஆண்டு துவங்கி 1599-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1590
- மார்ச் 14 – பிரான்சின் நான்காம் என்றியின் தலைமையிலான படையினர் கத்தோலிக்க முன்னணிப் படைகளை மீண்டும் தோற்கடித்தனர்.
- மே–ஆகத்து – பிரான்சின் நான்காம் என்றி பாரிசு நகரைக் கைப்பற்றும் முயற்சியில் தோல்வி அடைந்தான். பின்னர் எசுப்பானியப் படையினரின் உதவியுடன் கைப்பற்றினான்.
- ஆகத்து 18 – வடக்கு கரோலினாவின் ரோனோக் குடியேற்றத்தின் ஆளுநர் ஜோன் வைட் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்த போது அக்குடியேற்றப் பகுதியில் மக்கல் எவரும் காணப்படவில்லை. பின்னர் அக்டோபர் 24 இல் இங்கிலாந்து திரும்பினார்.
- செப்டம்பர் 15 – ஏழாம் அர்பன் 228வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 12 நாட்களின் பின்னர் இவர் மலேரியா நோயால் இறந்தார்.
- செப்டம்பர் 15 – ஆத்திரியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் வியன்னாவில் பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
- டிசம்பர் 5 – பதினான்காம் கிரெகோரி 229வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இலங்கையில் போர்த்துக்கீசரின் மல்வானைக் கோட்டை கட்டப்பட்டது.
1591
- மே 15 – உருசியாவின் நான்காம் இவான் மன்னனின் மகன் இளவரசன் திமீத்ரி இவனோவிச் ஊகிளிச் அரண்மனையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டான்.
- மே 30 – மாலியின் திம்பக்து நகரம் மொரோக்கோ மன்னரினால் அனுப்பப்பட்ட ஆர்மா மக்களினால் கைப்பற்றப்பட்டது.
- அக்டோபர் 29 – ஒன்பதாம் இனசென்ட் 230வது திருத்தந்தையாகத் தேர்தெடுக்கப்பட்டார்.
- ஐதராபாது நகரம் அமைக்கப்பட்டது.
- போர்த்துக்கீச இராணுவத் தளபதி அந்திரே புர்த்தாடோ டி மென்டோன்கா யாழ்ப்பாணத்தை ஊடுருவினான். பல உள்ளூர் மக்கள் கத்தோலிக்கத்தைத் தழுவினர்.[1]
- யாழ்ப்பாண இராச்சியத்தின் புவிராஜ பண்டாரம் போர்த்துக்கீசரினால் கொல்லப்பட்டார். எதிர்மன்னசிங்கம் ஆட்சியேறினார்.
1592
- சனவரி 30 – எட்டாம் கிளமெண்ட் 231வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஏப்ரல் 13 – சப்பானியரின் கொரியா மீதான ஊடுருவல் ஆரம்பமானது.
- சூலை 8 – ஆன்சென் தீவில் கொரியக் கடற்படைத் தளபதி யீ சுன்-சின் 60 சப்பானியக் கப்பல்களைக் கைப்பற்றினான்.
- சூலை 20 – சப்பானியர் கொரியத் தலைநகர் பியொங்யாங்கைக் கைப்பற்றினர். சீனாவின் மிங் படையின் உதவியுடன் கொரியர்கள் அடுத்த ஆண்டில் தலைநகரை மீண்டும் கைப்பற்றினர்.
- ஆகத்து 9 – ஆங்கிலேயக் கப்பல் தளபதி ஜோன் டேவிசு போக்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- டிசம்பர் 3 - இங்கிலாந்தின் முதலாவது கப்பல் எட்வர்டு பொனவென்ச்சர் இலங்கையில் காலித் துறைமுகத்தை வந்தடைந்தது.[1]
- கண்டி அரசன் முதலாம் ராஜசிங்கன். கண்ணப்பு பண்டாரம் என்பவன் தன்னை விமல தர்மா என்ற பெயரில் கண்டி அரசனாக அறிவித்தான்.[1]
- அழகிய தேசிகரின் மாணாக்கருள் ஒருவராகிய அளகைச் சம்பந்தர் திருவையாற்றுப் புராணம் பாடினார்.
1593
- சனவரி – சப்பானியரின் பியொங்யாங் மீதான தாக்குதல் கொரிய, மற்றும் மிங் படையினரால் முறியடிக்கப்பட்டது.
- சனவரி 18 – சியாமிய அரசன் நரேசுவான் தனது யானைப் படையின் உதவியுடன் பர்மிய இளவரசன் மிங்கி சுவாவைக் கொன்றார். இந்நாள் தாய்லாந்தில் இராணுவப் படைகளின் நாளாக பொது விடுமுறை நாள் அறிவிக்கப்பட்டது.
- சூன் 22 – குரோவாசியாவில் ஆப்சுபர்கு ஆட்சியாளர் உதுமானியரைத் தோற்கடித்தனர்.
- கோவாவிலிருந்து டொன் பேதுரு டி சொயுசா என்பவனின் தலைமையில் கண்டிக்கு படைகள் அனுப்பப்பட்டன. கண்டியின் தலைவனாகத் தன்னையும் கண்டியின் முன்னைய அரசனின் மகளான டொனா கத்தரீனா என்பவளை அரசியாகவும் அறிவித்தான்.[1]
- கண்டியின் விமல தர்மா டி சொயுசாவைத் தோற்கடித்து டொனா கத்தரீனாவை சிறைப்பிடித்தான். அவளையே பின்னர் மணமுடித்தான்.[1]
1594
- பெப்ரவரி 27 – நான்காம் என்றி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
- மே – உதுமானியர்களுக்கு எதிரான செர்பியர்களின் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
- சூன் 11 – எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு பிலிப்பீன்சில் உள்ளூர் உயர்குடி, மற்றும் தலைவர்களின் உரிமைகளை அங்கீகரித்தார்.
- சூலை 3 – அயூத்தியா-கம்போடியப் போர் (1591-1594) முடிவுக்கு வந்தது.
- சூலை 22 – நெதர்லாந்தின் வடக்குப் பகுதி முழுவதும் டச்சுக் குடியரசின் கீழ் வந்தது.
- அக்டோபர் 9 – இலங்கையை முற்றிலும் கைப்பற்றுவதற்கான போர்த்துக்கீசரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. கண்டி படையினர் டாஞ்ச்சர் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையில் போர்த்துக்கீசரைத் தோற்கடித்தனர்.
- இலங்கையில் போர்த்துக்கேயப் படையினர் களுத்துறை நகரைக் கைப்பற்றினர்.
1595
- மே 18 – உருசிய-சுவீடன் போர் (1590–95) முடிவுக்கு வந்தது.
- சூலை 21 – பொலினீசியாவில் முதன் முதலாக ஐரோப்பியர் (எசுப்பானியர்) மார்க்கெசசுத் தீவுகளில் வந்திறங்கினர்.
- சூலை 23 – இங்கிலாந்து, கோர்ன்வால் மீது எசுப்பானியர் தாக்கினர்[2]
- ஆகத்து 28 – சர் பிரான்சிஸ் டிரேக், சர் ஜோன் ஆக்கின்சு ஆகியோரின் அமெரிக்காக்களுக்கான கடைசிப் பயணம் இங்கிலாந்தில் இருந்து ஆரம்பமானது.[3]
- டிசம்பர் 9 – சேக்சுபியரின் முதலாவது நாடகம் இரண்டாம் ரிச்சார்டு இலண்டனில் இடம்பெற்றது.
- மாத்தறைக் கோட்டை போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது.
1596
- ஏப்ரல் 9 – எசுப்பானியப் படைகள் கலே நகரைக் கைப்பற்றினர்.
- சூலை 14 – இலங்கை, கோட்டை அரசன் டொமினிக்கசு கொரெயா (எதிரில்லே பண்டார) போர்த்துக்கீசரினால் கொழும்பில் தூக்கிலிடப்பட்டான்.
- ஆகத்து – டேவிட் பாப்ரிசியசு, மிரா என்ற முதலாவது அலைவியல்பு மாறியல்பு விண்மீனைக் கண்டுபிடித்தார்.
- உணவுப் பற்றாக்குறையினால் அனைத்து ஆப்பிரிக்கர்களும் பிர்த்தானியாவில் இருந்து அகற்றப்பட வேண்டும் என இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் ஆணையிட்டார்.[4]
- போலந்தின் தலைநகர் கிராக்கோவ்வில் இருந்து வார்சாவாவுக்கு மாற்றப்பட்டது.
- ஐரோப்பாவின் பல பகுதிகளை கறுப்புச் சாவு தாக்கியது.
- டச்சுக் கப்பல்கள் முதற்தடவையாக சுமாத்திரா, சாவகத்தை அடைந்தன.
1597
- பெப்ரவரி 8 – "இங்கிலாந்தின் மிகவும் படித்த கடற்கொள்ளையர்" எனக் கூறப்படும் சேர் அந்தோனி செர்லி யமெய்க்காவைக் கொள்ளையடித்தார்.
- பாலி டச்சுப் பயனி கோர்னேலிசு ஊட்மனினால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 12 மில்லியன் பெசோக்கள் பெறுமதியான வெள்ளி மணிலாவில் இருந்து அமைதிப் பெருங்கடல் வழியாக சீனாவின் மிங் ஆட்சியாளரை அடைந்தது.
- மலுக்குத் தீவுகளுக்கு வெற்றிகரமாக சென்ற பிரெடெரிக் டி ஊட்மன் தலைமையிலான டச்சுக் கப்பல்கள் ஆம்ஸ்டர்டாமை வந்தடைந்தன.
1598
- சனவரி 7 – உருசியாவின் பேரரசர் முதலாம் பியோதர் இறந்ததை அடுத்து அவரது மைத்துனர் போரிசு கொடூநொவ் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- ஏப்ரல் 13 – பிரான்சில் கூகனொட்டுகளுக்கு கத்தோலிக்கர்களுக்கு இணையான உரிமைகள் வழங்கப்பட்டன. பிரான்சின் சமயப் போர் முடிவுக்கு வந்தது.
- மே – டைக்கோ பிராகியின் 1,004 விண்மீன்களின் அட்டவணை வெளியிடப்பட்டது.[5]
- மே 2 – பிரான்சுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- மூன்று டச்சுக் கப்பல்கள் யாக்கோபு வான் நெக் தலைமையில் மொரிசியசு தீவுக்கு சென்றடைந்தன.
- மெய்யியலாளர் தொம்மாசோ கம்பனெல்லா எசுப்பானியரின் ஆட்சிக்கு எதிராக கலபிரியாவில் கொளர்ச்சியை ஆரம்பித்தார். இவர் பின்னர் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கு சிறை வைக்கப்பட்டார்.
- குற்றவாளிகளை குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் சட்டமூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1599
- ஜூலை 24 - சுவீடன் மன்னர் மூன்றாம் சிகிஸ்மண்ட் அவரது மாமன் சார்ல்சினால் (பின்னர் ஒன்பதாம் சார்ல்ஸ் மன்னர்) முடிதுறக்கப்பட்டார்.
- ஆகஸ்ட் 15 - ஆங்கிலப் படைகளுக்கும் அயர்லாந்துப் படைகளுக்கும் இடையில் கேர்ளியூ மலைகளில் இடம்பெற்ற சமரில் ஐரிஷ் படைகள் வென்றன.
- டிசம்பர் 31 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.
பிறப்புகள்
தொகு1590
1591
- ஆகத்து 12 – லுயீஸ் டி மரிலாக், அகத்தோலிக்கப் புனிதர் (இ. 1660)
1592
- சனவரி 15 – ஷாஜகான், முகலாயப் பேரரசர் (இ. 1666)
- ஆகத்து 28 – முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு (இ. 1628)
1593
- செப்டம்பர் 1 – மும்தாசு மகால், முகலாயப் பேரரசர் சாஜகானின் மனைவி (இ. 1631)
1594
- சூன் 15 – நிக்கோலா போசின், செவ்வியல் நடை பிரெஞ்சு ஓவியர் (இ. 1665)
- அந்தோனியோ பொக்காரோ, போர்த்துக்கேயரின் கிழக்கிந்திய அரசின் வரலாற்று எழுத்தர் (இ. 1642 / 1643)
1595
- சூன் 19 – குரு அர்கோவிந்த், 6வது சீக்கியக் குரு (இ. 1644)
- இராகவேந்திர சுவாமிகள், இந்திய வைணவ குரு (இ. 1671)
1596
- மார்ச் 31 – ரெனே டேக்கார்ட், பிரெஞ்சு மெய்யியலாளர், கணிதவியலாளர் (இ. 1650)
1598
- ஏப்ரல் 17 – ஜியோவானி ரிக்கியொலி, இத்தாலிய வானியலாளர் (இ. 1671)
1599
- ஏப்ரல் 25 - ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர் (இ. 1658)
இறப்புகள்
தொகு1590
1591
- சூன் 21 – அலோசியுஸ் கொன்சாகா, இத்தாலியப் புனிதர் (பி. 1568)
- டிசம்பர் 14 – சிலுவையின் புனித யோவான், எசுப்பானியக் கவிஞர் (பி. 1542)
- புவிராஜ பண்டாரம், யாழ்ப்பாண அரசன்
1593
- மே 30 – கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1564)
- அப்பைய தீட்சிதர், அத்வைத வேதாந்த பண்டிதர் (பி. 1520)
1595
- மே 26 – பிலிப்பு நேரி, இத்தாலிய மதப்பரப்புனர் (பி. 1515)
1596
- சனவரி 27 – பிரான்சிஸ் டிரேக், ஆங்கிலேயக் கப்பல் தலைவர், அரசியல்வாதி (பி. 1540)
1597
- ஜனவரி 19 – மகாராணா பிரதாப், இந்திய மேவார் மாகாண அரசர் (பி. 1540)
- பெப்ரவரி 5 - கொன்சாலோ கார்சியா, உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதர் (பி. 1556)
- டிசம்பர் 21 – பீட்டர் கனிசியு, டச்சு இயேசு சபை போதகர் (பி. 1521)
1598
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 3
- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 163–165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 233–238. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ Emily C. Bartels (April 2006). Too Many Blackamoors: Deportation, Discrimination, and Elizabeth I. Studies in English Literature, 1500–1900. 46. Rice University. பக். 305–322. http://www.jstor.org/stable/3844644.
- ↑ Astronomiæ instauratæ mechanica