மலுக்கு தீவுகள்

மலுக்கு தீவுகள் (Maluku Islands) எனப்படுபவை இந்தோனேசியாவில், குறிப்பாக மலே தீவுக்கூட்டத்தில் காணப்படும் தீவுகள் ஆகும். இவை மொலுக்காஸ், மொலுக்கன் தீவுகள், ஸ்பைஸ் தீவுகள் அல்லது மலுக்கு எனவும் அழைக்கப்படுகின்றன. இத்தீவுக் கூட்டம் ஆஸ்திரேலியப் புவித்தட்டில் சுலவேசிக்கு கிழக்கே, நியூ கினிக்கு மேற்கே, திமோரிக்கு வடக்கே அமைந்துள்ளன. வரலாற்று ரீதியாக சீனர்களாலும், ஐரோப்பியர்களாலும் இது இவை ஸ்பைஸ் தீவுகள் என அழைக்கப்பட்டு வந்தன.

மலுக்கு
Maluku
Moluccas
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்3°9′S 129°23′E / 3.150°S 129.383°E / -3.150; 129.383
மொத்தத் தீவுகள்~1000
முக்கிய தீவுகள்அல்மகேரா, சேரம், புரு, அம்போன், தெர்னேட்டு, டைடோர், ஆரு தீவுகள், காய் தீவுகள்
பரப்பளவு74,505 km2 (28,767 sq mi)
உயர்ந்த ஏற்றம்3,027 m (9,931 ft)
உயர்ந்த புள்ளிபினையா மலை
நிர்வாகம்
இந்தோனேசியா
மாகாணங்கள்மலுக்கு, வட மலுக்கு
பெரிய குடியிருப்புஅம்போன்
மக்கள்
மக்கள்தொகை1,895,000 (2000)
இனக்குழுக்கள்அல்பூர், நுவாவுலு, மனுசேலா
Map by Willem Blaeu (1630)

இங்குள்ள பெரும்பாலான தீவுகள் மலைகளையும் குமுறும் எரிமலைகளையும் கொண்டுள்ளன. ஈரப்பாங்கானவை. மழைக்காடுகள் பல உள்ளன. உணவு வாசனைப் பொருட்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன. இவற்றில் மெலனீசியர்கள் ஆரம்ப காலத்தில் வாழ்ந்திருந்தாலும், பல தீவுப்பகுதி மக்கள், குறிப்பாக பண்டா தீவுகளில் வாழ்ந்த மக்கள் 17ம் நூற்றாண்டுப் பகுதியில் கொல்லப்பட்டனர். ஆஸ்திரனேசியர்கள் இங்கு 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டச்சு ஆட்சிக் காலத்தில் குடியேறினர். இக்குடியேற்றம் பின்னர் இந்தோனீசிய ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்தது.

1950 ஆம் ஆண்டில் மலுக்கு தீவுகள் இந்தோனீசியாவின் ஒரு மாகாணமாக உருவாக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டில் இது இரண்டாகப் பிரிக்கப்பட்டு மலுக்கு, வடக்கு மலுக்கு என இரண்டு இந்தோனீசீய மாகாணங்களாக்கப்பட்டன. 1999 - 2002 காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் இங்கு கருத்து வேறுபாடு காரணமாகக் கலவரங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் தற்போது அங்கு அமைதி நிலவுகிறது.

புவியியல்

தொகு

மலுக்கு தீவுகளில் மொத்தம் 999 தீவுகள் உள்ளன. 77,990 கிமீ2 நிலப்பகுதியையும், 776,500 கிமீ2 கடற் பரப்பையும் கொண்டுள்ளன.

வடக்கு மலுக்கு மாகாணம்
மலுக்கு மாகாணம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலுக்கு_தீவுகள்&oldid=3361090" இலிருந்து மீள்விக்கப்பட்டது