புரு
மன்னர் புரு (King Puru) பண்டைய பரத கண்டத்தின் வடக்கில் அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்ட குரு நாட்டை ஆண்ட புராண கால மன்னர்.
யயாதி-தேவயானிக்கும் பிறந்த மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்கள் யாதவர்கள் என்றும்; இரண்டாவது மகன் துர்வசுவின் வழித்தோன்றல்கள் யவனர்கள் என்றும்; யயாதி-சர்மித்தைக்கு பிறந்த மூன்றாவது மகன் திரஹ்யுவின் வழித்தோன்றல்கள் போஜர்கள் என்றும், நான்காவது மகன், அனுவின் வழித்தோன்றல்கள் மிலேச்சர்கள் என்றும், ஐந்தாவது மகன் புரு வின் வழித்தோன்றல்கள் பௌரவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.[1]
புருவின் பௌரவ குலத்தில் தோன்றியவர்களே பாண்டவர் மற்றும் கௌரவர் ஆவார்.
மன்னர் புரு குறித்த செய்திகள் பாகவத புராணத்திலும், மகாபாரத்திலும்[2] குறிக்கப்பட்டுள்ளது.
பௌரவ அரச மரபில் தோன்றிய பஞ்சாப் பகுதியின் மன்னர் போரஸ், கி மு 326இல் நடந்த போரில் அலெக்சாண்டர் தோல்வி அடைந்தார். மன்னர் போரசின் போர் வீரத்தைப் பாராட்டி, அலெக்சாண்டர் தாம் வென்ற இந்தியப் பகுதிகளுக்கு, போரசையே தமது பிரதிநிதியாக நியமித்து கௌரவித்தார்.
இதனையும் காண்க
தொகுமேலும் படிக்க
தொகு- Mahabharata, Adiparva, verse. 71-80.
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section149.html#more
- ↑ Krishna-Dwaipayana Vyasa (31 March 2008). The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa First Book Adi Parva. Echo Library. pp. 214–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4068-7045-9. பார்க்கப்பட்ட நாள் 4 October 2012.
மேற்கோள்கள்
தொகு- Dowson, John (1888). A Classical Dictionary of Hindu Mythology and Religion, Geography, History, and Literature. Trubner & Co., London.
- Mani, Vettam (1964). Puranic Encyclopaedia. Motilal Banarsidas, Delhi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-842-60822-2.