யது, யயாதி - தேவயானி இணையரின் மூத்த மகன் ஆவார். தன் மகள் தேவயானிக்கு, யயாதி துரோகம் செய்த காரணத்தினால் சுக்கிராச்சாரியால் சபிக்கப்பட்டு கிழத்தன்மை அடைந்தான். யயாதியின் கிழத்தன்மையை ஏற்க மறுத்த காரணத்தினால், யதுவும், அவனது வழித்தோன்றல்களும் இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது என யயாதி அளித்த சாபத்தால், யதுவின் வழித்தோன்றல்கள் நாட்டை ஆள இயலாது ஆடு, மாடுகள் மேய்த்து பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்யும் இடைத் தொழில் செய்து வாழ்ந்தனர். அவர்களை யாதவர்கள் என்பர்.[1] காலப்போக்கில் யதுவின் குலத்தில் விருஷ்ணிகள், அந்தகர்கள்', போஜர்கள், குகுரர்கள் என நான்கு உட்பிரிவுகள் கிளைத்தன.[2][3] யதுவின் வழித்தோன்றல்களான இக்குலத்தினர் வடமதுரை, விதர்ப்பம், சேதிதேசம், குந்திதேசம், துவாரகை, மகததேசம் போன்ற நாடுகளை ஆண்ட அரசர்கள் ஆவார். கம்சன், கண்ணன், ருக்மணி, ருக்மி, சத்தியபாமா, பலராமர், சிசுபாலன், குந்தி, கிருதவர்மன், சாத்தியகி, பூரிசிரவஸ், உத்தவர், தேவகி, வசுதேவர், நந்தகோபன், யசோதை ஆகியோர் யது குலத்தில் பிறந்தவர்களில் சிலர்.

யது குலத் தோன்றல் ஸ்ரீகிருஷ்ணர்

யது குலத்தின் மொத்த அழிவுக்கு கிருஷ்ணரின் மகன்களில் ஒருவரான சாம்பனும் ஒரு வகையில் காரணமானார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யது&oldid=4056279" இலிருந்து மீள்விக்கப்பட்டது