குந்திதேசம்
குந்திதேசம் குந்தலதேசத்திற்கு நேர்வடக்கிலும், ஆபீரதேசத்திற்கு கிழக்கிலும், சூரசேனதேசத்திற்கு தெற்கிலும், நைமிசாரண்யத்தின் மேற்குதிசையில் யமுனாநதியின் ஓரத்தில் சதுரமாகப் பரவி இருந்த தேசம்.[1]
இருப்பிடம்
தொகுஇந்த குந்திதேசத்தின் பூமி அமைப்பானது மேடு பள்ளம் இல்லாமல் சமமாகவே இருக்கும். இந்த தேசத்தின் தெற்கில் ஓடும் சர்மண்வதி ஆறு யமுனா நதியுடன் சேரும் பூமிகள் மட்டும் கொஞ்சம் தாழ்ந்து செழித்து இருக்கும்.[2]
பருவ நிலை
தொகுஇந்த தேசத்தில் குளிர், பனி அதிகமாக இருக்காது, மழை மாத்திரம் சித்திரை, வைகாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் முடிய விடாமல் பெய்துகொண்டே இருக்கும்.
மலை, காடு, மிருகங்கள்
தொகுஇந்த தேசத்தின் வடக்கேயும், மேற்கேயும் பெரிய மலைகள் உண்டு, மலையின் அடிவாரத்திலிருந்து பரந்து விரிந்த காடுகளும், அவைகளில் யானை, கரடி, புலி முதலிய மிருகங்கள் அதிகமாக இருக்கும்.
நதிகள்
தொகுஇந்த தேசத்தின் வடக்கு பக்கத்தில் இருக்கும் மலைகளிலிருந்தும், மேற்கில் இருக்கும் சேநாமலையிலிருந்தும் குந்தி தேசத்தின் கிழக்கு முகமாய் ஓடி, ஜீவ நதியான யமுனையுடன் இணைந்துவடுகிறது.
விளைபொருள்
தொகுஇந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.
கருவி நூல்
தொகு- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009