ஆபீரதேசம்
ஆபீரதேசம் சிந்துதேசத்தின் கிழக்கிலும், குந்தி, குந்தல தேசங்களுக்கு நேர்மேற்கிலும், திரிகூட மலைக்கு வடக்கிலும்,அகன்று பரவி இருந்த தேசம்.[1]
இருப்பிடம்
தொகுஇந்த தேசத்தின் மேற்குப்பாகத்தில் கொஞ்ச பூமிதான் விவசாயத்திற்கு ஏற்ற பூமி, சால்வதேசம் வரை மணல்கலந்த பூமியும், மற்ற பாகங்களில் குன்றுகளும், கற்பாறை கலந்தபூமியாய் இருக்கும்.[2]
மலை, காடு, விலங்குகள்
தொகுஇந்த தேசத்தின் தென்கிழக்கிலும், தெற்கிலும் ஆதர்சாவளி (ஆரவல்லி) என்னும் பெரிய மலைத்தொடர் இந்த தேசம் முழுதும் பரவியுள்ளது. இதை ஒட்டி பெரிய பாழைவனமும் சிறிய காடுகளும், அவைகளில் கொடிய விலங்குகள் அதிகமாக இருக்கும்.
நதிகள்
தொகுஇந்த தேசத்தின் மேற்கு எல்லையில் ஓடும் சிந்து நதியே முக்கிய நதியாகும். ஆதர்சாவளி (ஆரவல்லி) உருவாகும் சிறு,சிறு ஓடைகள் சிந்துநதியுடன் இணைகிறது. சில நதிகள் கிழக்குமுகமாய் ஓடி சர்மண்வதீ நதியுடன் இணைகிறது.
கருவி நூல்
தொகு- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009