1658
1658 (MDCLVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1658 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1658 MDCLVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1689 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2411 |
அர்மீனிய நாட்காட்டி | 1107 ԹՎ ՌՃԷ |
சீன நாட்காட்டி | 4354-4355 |
எபிரேய நாட்காட்டி | 5417-5418 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1713-1714 1580-1581 4759-4760 |
இரானிய நாட்காட்டி | 1036-1037 |
இசுலாமிய நாட்காட்டி | 1068 – 1069 |
சப்பானிய நாட்காட்டி | Meireki 4Manji 1 (万治元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1908 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3991 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 13 - இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வார்ட் செக்ஸ்பி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான்.
- பெப்ரவரி 6 - சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தனர்.
- பெப்ரவரி 22 - டச்சுக்காரரினால் மன்னார் கைப்பற்றப்பட்டது.
- பெப்ரவரி 26 - சுவீடனுக்கும் டென்மார்க்கிற்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
- ஏப்ரல் 10 - யாழ்ப்பாணத்தில், ஊர்காவற்துறைக் கோட்டை டச்சுக்காரரினால் கைப்பற்றப்பட்டது.
- ஜூன் 23 - இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் ஆக்கிரமித்தனர்.
- ஆகஸ்ட் 29 - புரொட்டஸ்தாந்து சீரமைப்பு (reformed religion) யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக வண. டாக்டர் பால்டியஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- செப்டம்பர் - யாழ்ப்பாணத்தில் டச்சுக்காரருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக டொன் மனுவேல் டி அண்டிராடோ முதலியார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுக் குற்றம் சாட்டப்பட்ட டொன் லூயிசு பூத்தம்பி மற்றும் சில போர்த்துக்கீசர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
- செப்டம்பர் - டொன் லூயிசு பூத்தம்பியின் போர்த்துக்கீசர்களுடனான தொடர்புகளை அறிந்திருந்தமைக்காக யாழ்ப்பாணம் இயேசு சபையைச் சேர்ந்த வண. கல்டெய்ரோ என்பவர் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- செப்டம்பர் 19 - யாழ்ப்பாணத்தில் ரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.
- நவம்பர் 20 - இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் டச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
நாள் அறியப்படாதவை
தொகு- ஸ்பெயினுக்கெதிரான போரில் பிரான்ஸ் இங்கிலாந்துடன் இணைந்து போரிட்டது. ஜூனில் ஸ்பெயின் தோற்றது.
- போத்துக்கீச வணிகர்கள் இலங்கையில் இருந்து டச்சுக்காரரினால் துரத்தப்பட்டனர்.
- ஷாஜகான் தாஜ் மகாலைக் கட்டி முடித்ததும் அவனது மகன் அவுரங்கசீப் தனது தந்தையை முகாலாயப் பேரரசின் அரசுப் பதவியில் இருந்து அகற்றினான்.
- தென்னாபிரிக்காவில் கேப் காலனியில் டச்சுக்காரர் இந்தியாவில் இருந்து அடிமைத் தொழிலாளரை வரவழைத்தனர்.
- இலங்கையில் கத்தோலிக்க மதகுருக்கள் தடை செய்யப்பட்டனர்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- செப்டம்பர் 3 - ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர் (பி 1599)