சீக்கியக் குருக்கள்
1469-இல் குரு நானக் தொடங்கி அடுத்த நூற்றாண்டுகளில் தொடர்ந்த குரு பரம்பரை பரப்பியுரைத்த புனித அறிவுரைகள் படிப்படியாக தனிச் சமயமாக உருவானது. இந்தப் பரம்பரையில் வந்த குருக்கள் சீக்கிய குருக்கள் எனப்படுகின்றனர்.[1] முதல் குருவான குரு நானக்கை அடுத்தடுத்து பத்தாவது குரு குரு கோவிந்த் சிங் வரை மனிதர்களாக இருந்தனர்; குரு நானக்கின் வழிகாட்டுதலைக் கொண்ட புனித நூலாகிய ஆதி கிரந்தம் அல்லது கிரந்த சாகிப் குரு கோவிந்த் சிங்கால் குரு கிரந்த் சாகிப் என உயர்த்தப்பட்டு இறுதியான மற்றும் நிரந்தரமான பதினொன்றாவது குருவாக வழிமொழியப்பட்டது. அது முதல் சீக்கியர்களின் சமயகுருவாக குரு கிரந்த சாகிப் நிலைத்துள்ளது.
பட்டியல்
தொகு# | பெயர் | பிறந்தநாள் | குருவாகப் பொறுப்பேற்றது | மறைவு நாள் | அகவை |
---|---|---|---|---|---|
1 | குரு குருநானக் தேவ் | ஏப்ரல் 15 1469 | ஆகஸ்டு 20 1507 | 22 செப்டம்பர் 1539 | 69 |
2 | குரு அங்கது தேவ் | மார்ச் 31 1504 | 7 செப்டம்பர் 1539 | மார்ச் 29 1552 | 48 |
3 | குரு அமர் தாஸ் | மே 5 1479 | மார்ச் 26 1552 | 1 திசம்பர் 1574 | 95 |
4 | குரு ராம் தாஸ் | 24 செப்டம்பர் 1534 | 1 செப்டம்பர் 1574 | 1 செப்டம்பர் 1581 | 46 |
5 | குரு அர்ஜன் தேவ் | ஏப்ரல் 15 1563 | 1 செப்டம்பர் 1581 | மே 30 1606 | 43 |
6 | குரு அர்கோவிந்த் சிங் | ஜூன் 19 1595 | மே 25 1606 | பெப்ரவரி 28 1644 | 48 |
7 | குரு அர் ராய் | ஜனவரி 16 1630 | மார்ச் 3 1644 | அக்டோபர் 6 1661 | 31 |
8 | குரு அர் கிருசன் சிங் | சூலை 7 1656 | அக்டோபர் 6 1661 | மார்ச் 30 1664 | 7 |
9 | குரு தேக் பகதூர் சிங் | ஏப்ரல் 1 1621 | மார்ச் 20 1665 | நவம்பர் 11 1675 | 54 |
10 | குரு கோவிந்த் சிங் | 22 திசம்பர் 1666 | நவம்பர் 11 1675 | அக்டோபர் 7 1708 | 41 |
11 | குரு கிரந்த் சாகிப் | அக்டோபர் 7 1708 | நிலைத்த/ வாழும் குரு |
காலக்கோடு
தொகுமேற்சான்றுகள்
தொகு- ↑ Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 186–187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.