1630
1630 (MDCXXX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1630 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1630 MDCXXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1661 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2383 |
அர்மீனிய நாட்காட்டி | 1079 ԹՎ ՌՀԹ |
சீன நாட்காட்டி | 4326-4327 |
எபிரேய நாட்காட்டி | 5389-5390 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1685-1686 1552-1553 4731-4732 |
இரானிய நாட்காட்டி | 1008-1009 |
இசுலாமிய நாட்காட்டி | 1039 – 1040 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 7 (寛永7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1880 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3963 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 22 - அமெரிக்கத் தொல்குடியினர் ஆங்கிலேயக் குடியேறிகளுக்கு சோளப்பொரியை அறிமுகப்படுத்தினர்.
- மார்ச் 3 - டச்சு மேற்கிந்தியக் கம்பனியின் கப்பற்படையினர் ரெசிஃபி நகரைப் போர்த்துக்கீசரிடம் இருந்து கைப்பற்றினர். டச்சு பிரேசில் நிறுவப்பட்டது.
- மார்ச் 22 - மாசச்சூசெட்ஸ் குடா குடியேற்றத் திட்டத்தில் விளையாட்டுச் சீட்டுக்கட்டுகள், தாயக் கட்டைகள் போன்றவை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டது.
- சூலை - இத்தாலியில் பரவிய கொள்ளை நோய் வெனிசு நகரை அடைந்தது.
- செப்டம்பர் 7 - பாஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.[1]
- பிரித்தானியர் பரமாரிபோவில் (சுரிநாம்) குடியேறினர்.
- இரண்டு மில்லியன் மக்கள் இறப்புக்குக் காரணமான தக்காணப் பஞ்சம் இந்தியாவில் ஆரம்பமாகியது. இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது.
- மாலாயாவின் அசாகான் சுல்தானகம் ஆரம்பம்.
பிறப்புகள்
தொகு- பெப்ரவரி 19 - பேரரசர் சிவாஜி, மராட்டியப் பேரரசை உருவாக்கியவர் (இ. 1680)
இறப்புகள்
தொகு- நவம்பர் 15 - யோகான்னசு கெப்லர், செருமானிய வானியலாளர் (பி. 1571)
- வில்லெம் ஜான்சூன், டச்சு கடற்பயணி, குடியேற்ற ஆளுநர் (பி. 1570)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Historical note". Archives Guide - Town of Boston. City of Boston. பார்க்கப்பட்ட நாள் 2013-03-20.