1632
1632 (MDCXXXII) வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1632 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1632 MDCXXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1663 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2385 |
அர்மீனிய நாட்காட்டி | 1081 ԹՎ ՌՁԱ |
சீன நாட்காட்டி | 4328-4329 |
எபிரேய நாட்காட்டி | 5391-5392 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1687-1688 1554-1555 4733-4734 |
இரானிய நாட்காட்டி | 1010-1011 |
இசுலாமிய நாட்காட்டி | 1041 – 1042 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 9 (寛永9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1882 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3965 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 29 - ஆங்கிலேயர் 1629 இல் கைப்பற்றிய கியூபெக் மாநிலம் மீண்டும் பிரெஞ்சுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உடன்பாடு கையெழுத்தாகியது.
- மார்ச் - முப்பதாண்டுப் போர்: சுவீடன் பவேரியாவை முற்றுகையிட்டது.
- மே - முப்பதாண்டுப் போர்: மியூனிக் நகரம் சுவீடியப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
- சூன் 25 - எதியோப்பியாவின் பாசிலிடெசு பேரரசன் எதியோப்பிய பழமைவாதக் கிறித்தவத்தை அரச மதமாக அறிவித்தான். இயேசு சபையின் உடைமைகளைக் கைப்பற்றினான்.
- செப்டம்பர் 1 - பிரான்சின் பதின்மூன்றாம் லூயி மன்னனுக்கெதிரான கிளர்ச்சி அடக்கப்பட்டது. கிளர்ச்சியாளர்களின் தலைவர், பதின்மூன்றாம் லூயியின் சகோதரன், சரணடைந்தான்.
- அக்டோபர் 30 - பிரான்சின் பதின்மூன்றாம் லூயிக்கு எதிரான கிளர்ச்சியில் பங்குபற்றியமைக்காக மொண்டொமொரென்சி இளவரசர் இரண்டாம் என்றி தூக்கிலிடப்பட்டார்.
- நவம்பர் 16 - முப்பதாண்டுப் போர்: லூட்சனில் இடம்பெற்ற போரில் சுவீடன் மன்னன் இரண்டாம் குஸ்தாவுசு அடோல்பசு கொல்லப்பட்டார். அவரது 6-வயது மகள் கிறிஸ்டீனா அரசியாக அறிவிக்கப்பட்டாள்.
- அன்டிகுவா பர்புடாவில் ஆங்கிலேயர் குடியேறினர்.
- விஜய நகரப் பேரரசன் பெத்த வெங்கடராயனின் ஆட்சிக் காலம் ஆரம்பம்.
- ஆறு பிரெஞ்சு கப்புச்சின் துறவிகள் இந்தியாவில் முதன் முறையாக புதுச்சேரி வந்திறங்கினர்.
- யாழ்ப்பாணக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.[1]
பிறப்புகள்
தொகு- ஆகத்து 29 - ஜான் லாக், ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1704)
- அக்டோபர் 20 - சர் கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேய கட்டிடக் கலைஞர், வானியலாளர், கணிதவியலர் (இ. 1723)
- அக்டோபர் 24 - ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு அறிவியலாளர் (இ. 1723)
- அக்டோபர் 31 - யொஹான்னெஸ் வெர்மீர், டச்சு ஓவியர் (இ. 1675)
இறப்புகள்
தொகு- மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி, வடமொழிக் கவிஞர் (பி. 1560)
மேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 3