யோகான்னசு கெப்லர்

யோகான்னசு கெப்லர் (Johannes Kepler, ஜோகான்னஸ் கெப்லர், டிசம்பர் 27, 1571நவம்பர் 15, 1630), ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானிய)க் கணிதவியலாளர். அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவர். இவர் ஒரு வானியலாளராகவும், ஒரு சோதிடராகவும் கூடப் பெயர் பெற்றவர். இவர் எழுதிய Astronomia nova (ஆசுட்ரோனோமியா நோவா) மற்றும் Harmonice Mundi (ஆர்மோனிசெ முண்டி) ஆகிய நூல்களினூடு முன்வைக்கப்பட்ட கோள்களின் இயக்க விதிகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர்.

ஜொஹான்னெஸ் கெப்லர்
1610ல் வரையப்பெற்ற ஜொஹான்னெஸ் கெப்லரின் தனியுருவப் படம்
பிறப்பு(1571-12-27)திசம்பர் 27, 1571
Free Imperial City of Weil der Stadt, புனித உரோமைப் பேரரசு
இறப்புநவம்பர் 15, 1630(1630-11-15) (அகவை 58)
ரெஜென்ஸ்பர்க், Electorate of Bavaria, Holy Roman Empire
வாழிடம்Württemberg; Styria; Bohemia; Upper Austria
தேசியம்ஜெர்மன்
துறைவானியல், ஜோதிடம், கணிதம் and இயல் மெய்யியல்
பணியிடங்கள்University of Linz
கல்வி கற்ற இடங்கள்Tübinger Stift, University of Tübingen
அறியப்படுவதுகெப்லரின் கோள் இயக்க விதிகள்
Kepler conjecture
கையொப்பம்
ஜொஹான்னெஸ் கெப்லர்

கெப்லர், கிராசு பல்கலைக் கழகத்தில் (University of Graz) கணிதப் பேராசிரியராகவும், இரண்டாவது உருடோல்பு (Rudolf II) பேரரசரின் அரசவைக் கணிதவியலாளராகவும், செனெரல் வாலென்சுட்டைனுக்கு (General Wallenstein) அரசவைச் சோதிடராகவும் பணியாற்றியவர். இவரது தொழிலின் ஆரம்பகாலத்தில் டைக்கோ பிராகி (Tycho Brahe) என்பவருக்கு உதவியாளராக இருந்தார். இவர் கலிலியோ கலிலியின் சமகாலத்தவராவார்.

இவர் சிலவேளைகளில் "முதலாவது கோட்பாட்டு வானியற்பியலாளர்" எனக் குறிப்பிடப் படுகிறார். கார்ல் சேகன் (Carl Sagan) இவரைக் கடைசி அறிவியற் சோதிடன் எனக் குறிப்பிட்டார்.

வாழ்க்கை

தொகு
 
வைல் தெர் இசுடாட்டு (Weil der Stadt) என்னும் இடத்தில் உள்ள யோகான்னசு கெப்லரின் பிறப்பிடம்
 
1577ன் பெரும் வால்வெள்ளி, சிறுவயதில் கெப்லர் கண்ட வால்வெள்ளியும், ஐரோப்பாவிலுள்ள பல வானியலாளர்களின் அவதானத்தை பெற்றதும்.

யோகான்னசு கெப்லர் திசம்பர் 27, 1571 -இல் வைல் தெர் இசுடாட்டு (Weil der Stadt) என்னு இடத்தில் பிரைய இரைசிட்டாட்டு (Freie Reichsstadt) (விடுதலைப் பேரரசின் நகரம் எனப்பொருள் கொண்டது; இது இப்போது செருமனிய மாநிலமான பாடென் வுட்டம்பெர்க்கின் இசுட்டட்கார்ட்டுப் பகுதியில் அமைந்துள்ளது) பிறந்தார். கெப்லரின் பாட்டனாரான செபால்ட் கெப்லர் அந்நகர மேயராக இருந்தார். எனினும் கெப்லருடன் பிறந்த இரண்டு உடன்பிறந்தான்களும் ஒரு உடன்பிறந்தாளும் சேர்ந்து அவர்களது குடும்பம் வறுமையில் வாடியது. கெப்லரின் தந்தையாரான என்றிக்குக் கெப்லர் ஒரு வணிகராவார். யோகான்னசு கெப்லருக்கு ஐந்து வயதானபோது அவரது தந்தையார் குடும்பத்தைப் பிரிந்து சென்றார். இவர் நெதர்லாந்தில் நடந்த எண்பதாண்டுப் போரில் இறந்திருக்கலாமென நம்பப்படுகிறது. யோகான்னசு கெப்லர் பிறந்தபோது அவர் ஒரு உடல்வலுக் குறைந்த குழந்தையாக இருந்தார்.[1]

சிறு வயதிலேயே இவர் வானியல் துறையில் ஈடுபட்டார். தனது ஆறாம் வயதில் 1577ல் பெரும் வால்வெள்ளியை அவதானித்தார். இதனை அவதானிப்பதற்காக அவரது தாயாரால் உயரமான இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.[2] ஒன்பது வயதில், இன்னொரு வானியல் நிகழ்வான 1580 -இன் சந்திர கிரகணத்தை அவதானித்தார். இதன் போது, அதனை அவதானிப்பதற்காக அவர் வெளியில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன்போது சந்திரன் சிறிது சிவப்பு நிறமாகத் தென்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[2] எவ்வாறாயினும் சிறுவயதில் ஏற்பட்ட சின்னம்மை நோயினால், பார்வைக் குறைபாடுள்ளவராயும், வலுவிழந்த கைகளையுடையவராயும் ஆனார். இதனால் வானியல் அவதானிப்புக்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டார்.[3]

1589ல், இலக்கணப் பாடசாலை, லியோன்பெர்கில் இலத்தீன் பாடசாலை மற்றும் மவுல்புரோன் குருத்துவப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்ற பின்பு, தூபிங்கர் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, விட்டஸ் முல்லரின்[4] கீழ் தத்துவமும், யாக்கோபு ஈபிரான்டின் (Jacob Heerbrand) கீழ் இறையியலையும் கற்றார்.[5] இவர் ஒரு சிறந்த கணிதவியலாளராயும், திறமையான வானியலாளராயும் தம்மை நிலைநாட்டினார். மிக்கல் மைசுத்திலீன் என்பவரின் வழிகாட்டலின் கீழ், 1583 -இலிருந்து 1631வரை[5] கோள்களின் இயக்கங்களுக்கான தொலமியின் முறைமையையும், கோப்பர்நிக்கசின் முறைமையையும் கற்றார். மாணவப் பருவத்தில், சூரிய மையக் கொள்கையை எதிர்த்தார். எனினும், சூரியனே அகிலத்தின் முதன்மைச் சக்தி முதலென அவர் ஏற்றுக்கொண்டார்.[6] ஒரு அமைச்சராக வரவேண்டுமென அவர் விரும்பினாலும், அவரது கற்கைகளின் நிறைவில், கணிதம் மற்றும் வானியலைக் கற்பிக்கும் ஆசிரியராக, கிராசிலுள்ள (பின்னர் கிராசு பல்கலைக்கழகம்) கிறித்துவ சீர்திருத்தப் பாடசாலையில் நியமிக்கப்பட்டார். அவர் தனது 23ம் வயதில், ஏப்ரல் 1594ல் அவ்வேலையில் சேர்ந்தார்.[7]

கிராசு (1594–1600)

தொகு

மைஸ்டிரியம் கோஸ்மோகிராபிகம்

தொகு
 
கெப்லரின் சூரிய மண்டலத்தின் பிளாட்டோனியத் திண்ம மாதிரியுரு, மைஸ்டிரியம் கோஸ்மோகிராபிகம் (1600) நூலிலிருந்து

யோகான்னசு கெப்லரின் முதல் பெரிய வானியல் புத்தகம் மைஸ்டிரியம் கோஸ்மோகிராபிகம் (அகிலத்தின் புதிர்) என்பதாகும். இதுவே கொப்பர்நிகசின் முறைமையை எதிர்த்த முதல் புத்தகமாகும். கெப்லர் சூலை 19, 1595ல் ஒரு ஆச்சரியமான அனுபவத்தைப் பெற்றார். கிராசில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, இராசி வட்டத்தில் சனிக் கோளினதும், வியாழக் கோளினதும் ஆவர்த்தனப் பொருந்துகையை விளக்கும் போது, ஒழுங்கான பல்கோணியொன்று குறித்த விகிதத்தில் வெளி வட்டமொன்றையும், உள்வட்டமொன்றையும் கொண்டிருக்கும் என அவர் உணர்ந்தார். இதற்கு அகிலத்தின் அமைப்பை அவர் காரணங் காட்டினார். அறியப்பட்ட வானியல் அவதானிப்புக்களைக் கொண்டு ஒரு சீரான பல்கோணிகளின் ஒழுங்கமைப்பைக் கண்டுபிடிப்பதில் தோல்வியடைந்த பிறகு, கெப்லர் முப்பரிமாண வடிவங்களை பரிசோதிப்பதில் ஈடுபட்டார். இதன்போது, ஒவ்வொரு பிளேட்டோனியத் திண்மமும் சீராக ஒரே {கோளம்|கோளத்தினால்]] சூழப்பட்டதாக இருப்பதைக் கண்டுபிடித்தார். இவ்வாறு ஒவ்வொரு பிளேட்டோனியத் திண்மமும் முற்றாக ஒரு கோளத்தினால் சூழப்பட்டதாகவும், ஒவ்வொரு திண்மத்தினுள்ளும் இன்னொரு திண்மம் இருக்கத் தக்கதாகவும் அமைப்பொன்றை உருவாக்கும்போது, ஆறு அடுக்குகள் கொண்ட ஒரு அமைப்பாக அது இருப்பதைக் கண்டறிந்தார். இவ் ஆறு அடுக்குகளும், அப்போது அறியப்பட்டிருந்த ஆறு கோள்களான, புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவற்றைக் குறிப்பதாக அமைந்திருந்தது. பிளாட்டோனியத் திண்மங்களான எண்முகி, இருபதுமுகி, பன்னிருமுகி, நான்முகி, சதுரமுகி ஆகியவற்றைச் சரியான ஒழுங்கில் வைப்பதன் மூலம் உருவாக்கப்படும் மாதிரியுருவில், அத் திண்மங்களைச் சூழ்ந்துள்ள கோளங்களுக்கிடையிலான இடைவெளிகள் அண்ணளவாக, கோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன எனக் கருதும் போது அக்கோள்களின் பாதைகளுக்கிடையிலான தூரங்களுக்கு விகிதசமனாகக் காணப்பட்டது. ஒவ்வொரு கோளினதும் சுற்றுப்பதையின் நீளத்துக்கும் அதன் சுற்றுக்காலத்துக்கும் இடையில் தொடர்பொன்றைக் கண்டுபிடிக்க கெப்லருக்கு இயலுமாயிருந்தது. உட்கோள்களிலிருந்து புறக்கோள்கள் நோக்கிச் செல்லும்போது, சுற்றுக்காலங்களின் விகிதத்தின் அதிகரிப்பானது, சுற்றுப் பாதையின் நீளங்களுக்கிடையிலான வித்தியாசத்தின் இருமடங்காகக் காணப்பட்டது. எவ்வாறாயினும், இச் சூத்திரம் திருத்தம் குறைவானதாக இருந்தமையால், பிற்காலத்தில் கெப்லர் இச் சூத்திரத்தை நிராகரித்தார்.[8]

 
மாதிரியுருவின் உள்ளமைப்பின் நெருங்கிய பார்வை வடிவம்

தலைப்பில் குறிப்பிட்டவாறு, கடவுளின் அகிலத்துக்கான கேத்திரகணித திட்டத்தைத் தான் வெளிப்படுத்திவிட்டதாக அவர் கருதினார். கொப்பர்நீசிய முறைமை மீதான கெப்லரின் ஆர்வத்துக்குக் காரணம் பௌதிக மற்றும் ஆன்மிகக் கொள்கைகளுக்கிடையிலான அவரது இறையியல் நம்பிக்கையாகும். அதன்படி, இந்த அகிலமே கடவுளின் பிரதி பிம்பம் எனவும், சூரியன் பிதாவைக் குறிப்பதாகவும், வான்கோளம் சுதனை(மகன்) குறிப்பதாகவும், இடையிலுள்ள வெளி பரிசுத்த ஆவியைக் குறிப்பதாகவும் அவர் கருதினார். அவரது முதல் கையெழுத்துப் பிரதியான மைஸ்டிரியம், சூரியமையக் கொள்கை பற்றி விளக்கும் விவிலியம் வாசகங்களைக் கொண்டிருந்தது.[9]

தனது வழிகாட்டியான மைக்கல் மீசுடிலினின் துணையுடன், கெப்லர் தனது ஆக்கத்தை வெளியிடுவதற்கு, துபிங்கென் பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுக்கொண்டார். எனினும் அதில் காணப்பட்ட பைபிளைப் பற்றிய விமர்சனங்களை நீக்கவும், கொப்பர்நிகசின் முறைமை மற்றும் கெப்லரின் புதிய சிந்தனைகள் பற்றி இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய விளக்கங்களைச் சேர்க்கவும் நிர்வாகம் உத்தரவிட்டது. மைஸ்டிரியம், 1596ன் பிற்பகுதியில் வெளியிடப்பட்டது. 1597ல் முற்பகுதியில் அதன் பிரதிகளை தனது ஆதரவாளர்களுக்கும், பிரபல வானியலாளர்களுக்கும் அவர் அனுப்பினார். இந்நூல் பெரியளவில் பிரபலமாகாவிட்டாலும், கெப்லரை ஒரு திறமையான வானியலாளராகக் காட்டுவதில் அது வெற்றி பெற்றது.[10]

அறிவியற் பணி

தொகு

கெப்லரின் விதிகள்

தொகு

கோள்களின் இயக்கம் தொடர்பான மூன்று விதிகளை கெப்லர் கண்டுபிடித்தார்.

1604 சூப்பர்நோவா

தொகு
 
Remnant of Kepler's Supernova SN 1604.

எனைய அறிவியல் மற்றும் கணிதவியற் பணிகள்

தொகு

Mysticism and astrology

தொகு

சோதிடம்

தொகு

கடவுள் பற்றிக் கெப்லர்

தொகு

கெப்லரின் எழுத்துக்கள்

தொகு
 
Illustration of SN 1604 by Johannes Kepler from his book De Stella Nova in Pede Serpentarii

இவற்றையும் பார்க்கவும்

தொகு

கற்பனைக் கதைகளில் கெப்லர்

தொகு

கெப்லரின் பெயரிடப்பட்ட இயந்திரங்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Johannes Kepler
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Lived

மேற்கோள்கள்

தொகு
  1. Caspar. Kepler, pp. 29–36; Connor. Kepler's Witch, pp. 23–46.
  2. 2.0 2.1 Koestler. The Sleepwalkers, p. 234 (translated from Kepler's family horoscope).
  3. Caspar. Kepler, pp. 36–38; Connor. Kepler's Witch, pp. 25–27.
  4. Connor, James A. Kepler's Witch (2004), p. 58.
  5. 5.0 5.1 Barker, Peter; Goldstein, Bernard R. "Theological Foundations of Kepler's Astronomy", Osiris, 2nd Series, Vol. 16, Science in Theistic Contexts: Cognitive Dimensions (2001), p. 96.
  6. Westman, Robert S. "Kepler's Early Physico-Astrological Problematic," Journal for the History of Astronomy, 32 (2001): 227–36.
  7. Caspar. Kepler, pp. 38–52; Connor. Kepler's Witch, pp. 49–69.
  8. Caspar. Kepler, pp.60–65; see also: Barker and Goldstein, "Theological Foundations of Kepler's Astronomy."
  9. Barker and Goldstein. "Theological Foundations of Kepler's Astronomy," pp.99–103, 112–113.
  10. Caspar. Kepler, pp.65–71.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகான்னசு_கெப்லர்&oldid=4041165" இலிருந்து மீள்விக்கப்பட்டது