1619
1619 (MDCXIX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1619 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1619 MDCXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1650 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2372 |
அர்மீனிய நாட்காட்டி | 1068 ԹՎ ՌԿԸ |
சீன நாட்காட்டி | 4315-4316 |
எபிரேய நாட்காட்டி | 5378-5379 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1674-1675 1541-1542 4720-4721 |
இரானிய நாட்காட்டி | 997-998 |
இசுலாமிய நாட்காட்டி | 1028 – 1029 |
சப்பானிய நாட்காட்டி | Genna 5 (元和5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1869 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3952 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி - இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் இலண்டன் பெருவிருந்து மாளிகை தீப்பிடித்து எரிந்தது.
- மார்ச் 20 - புனித உரோமைப் பேரரசர் மத்தாயசு இறந்தார்.
- மே 13 - டச்சு அரசியல்வாதி யொகான் வான் ஓல்டென்பார்ன்வெல்ட் டென் ஹாக் நகரில் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.
- சூலை 30 - ஜேம்சுடவுனில் அமெரிக்காக்களின் முதலாவது பிரதிநிதிகள் சபை முதல் தடவையாகக் கூடியது.
- ஆகத்து 28 - செருமனியின் இரண்டாம் பெர்டினாண்டு புனித உரோமைப் பேரரசரானார்.
- அக்டோபர் 8 - முப்பதாண்டுப் போர்: மியூனிக்கில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் பிரித்தானியருக்கு இந்தியாவின் மேற்குக் கரை சூரத்துவில் சிறப்பு வணிக சலூகைகளை அறிவித்தார்.
- போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் தனது அதி உச்ச எல்லைகளைப் பெற்றது.
- பிலிப்பே டி ஒலிவேரா தலைமையில் போர்த்துக்கீசப் படைகள் இலங்கையின் கடைசி யாழ்ப்பாண மன்னன் இரண்டாம் சங்கிலியைக் கைது செய்து கோவாவிற்குக் கொண்டு சென்றனர். யாழ்ப்பாண அரசு முடிவுக்கு வந்தது.
பிறப்புகள்
தொகு- சூன் 24 - ரைக்லாவ் வொன் கூன்சு, டச்சு குடியேற்றக்கால ஆளுனர் (இ. 1682)
இறப்புகள்
தொகு- சூலை 22 - பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (பி. 1559)