1621
1621 (MDCXXI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1621 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1621 MDCXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1652 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2374 |
அர்மீனிய நாட்காட்டி | 1070 ԹՎ ՌՀ |
சீன நாட்காட்டி | 4317-4318 |
எபிரேய நாட்காட்டி | 5380-5381 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1676-1677 1543-1544 4722-4723 |
இரானிய நாட்காட்டி | 999-1000 |
இசுலாமிய நாட்காட்டி | 1030 – 1031 |
சப்பானிய நாட்காட்டி | Genna 7 (元和7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1871 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3954 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 9 - பதினைந்தாம் கிரகோரி 234வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- மார்ச் 31 - எசுப்பானியாவின் நான்காம் பிலிப்பு தனது 44-ஆண்டு கால ஆட்சியை ஆரம்பித்தார்.
- ஏப்ரல் - டச்சுக் குடியரசுக்கும் எசுப்பானியப் பேரரசுக்கும் இடையே இருந்த 12-ஆண்டுக்கால அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இரு தரப்பும் எண்பதாண்டுப் போரை மீளத் தொடங்க ஆயத்தங்கள் மேற்கொண்டன.
- சூன் 3 - டச்சு மேற்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது.
- சூன் 21 - முப்பதாண்டுப் போர்: 27 செக் பிரபுக்கள் பிராகாவில் தூக்கிலிடப்பட்டனர்.
- அக்டோபர் 9 - உதுமானியப் பேரரசுக்கும் போலந்து-லுத்துவேனியாவிற்கும் இடையே இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது.
- டச்சு கணித, வானியலாளர் வெலிபுரோர்ட் சினெல் வான் ரோயன் பிரபலமான சினெல்லின் விதியைக் கண்டுபிடித்தார்.
- சாதிக்காய் வணிகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி தனது 2000 படையினரை இந்தோனேசியாவின் பாண்டா தீவுகளுக்கு அனுப்பியது.
- இலங்கை, வல்வெட்டித்துறையில் போர்த்துக்கீசருக்கும், தமிழருக்கும் இடையே சமர் இடம்பெற்றது.[1]
பிறப்புகள்
தொகு- டிசம்பர் 12 - ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட், டச்சு தளபதி (இ. 1656)
இறப்புகள்
தொகு- சூலை 2 - தாமசு ஃஆரியட், ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. கி.. 1560)
- செப்டம்பர் 17 - ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (பி. 1542)
- இரண்டாம் சங்கிலி, யாழ்ப்பாண அரசின் கடைசி அரசன்
மேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.3