சினெல்லின் விதி

ஒளியியலில் சினெல்லின் விதி (ஆங்கிலம்: Snell's Law) என்று அறியப்படும் விதியானது, ஓர் ஒளியூடுருவு ஊடகத்தில் இருந்து ஓர் ஒளிக்கதிர் மற்றொரு ஒளியூடுருவு ஊடகத்தில் பாயும்பொழுது, முதல் ஊடகத்தில் இருந்து ஒளி உட்புகும் கோணத்துக்கும் இரண்டாவது ஊடகத்தில் (ஒளி விலகல் நிகழும் ஊடகத்தில்) ஒளிக்கதிரின் கோணத்துக்கும் இடையேயான தொடர்பைக் கூறுவது ஆகும். சினெல்லின் விதி, சினெல்-டேக்கார்ட்டு விதி என்றும் ஒளி முறிவு விதி என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்விதி காற்றில் இருந்து நீரில் ஒளி புகும்பொழுதோ, அல்லது ஒரு கண்ணாடியில் புகும்பொழுதோ, வெளிவரும்பொழுதோ ஒளியின் பாதையை, நகரும் இயல்பை உணர உதவும். ஒளிப்படக் கருவி, இருகண்ணோக்கி, தொலைநோக்கி போன்ற மிகப் பல ஒளியியல் கருவிகளில் இவ்விதி பயன்படுகின்றது.

ஒளி முறிவு

சினெல்லின் விதியின்படி, ஓர் ஊடகத்தில் இருந்து உட்புகும் ஒளிக் கதிரின் படுகோணத்தின் சைனுக்கும் இரண்டாவது ஊடகத்தில் ஒளி முறிவடையும் முறிகோணத்தின் சைனுக்கும் இடையிலான விகிதம் அவ்விரு ஊடகங்களுக்கும் ஒரு மாறிலி ஆகும். இது முதலாவது ஊடகத்தின் சார்பாக இரண்டாவது ஊடகத்தின் முறிவுச் சுட்டி என அழைக்கப்படும். இது அவ்வூடகங்களில் ஒளி அலையின் வேகங்களின் விகிதங்களுக்கு ஈடாக இருக்கும். அதாவது,

மேலுள்ளதில் கோணம் என்பது ஊடகத்தைப் பிரிக்கும் செவ்வனில் இருந்து அளப்பதாகும், என்பது வேகத்தைக் குறிக்கிறது. இது பொதுவாக விநாடிக்கு மீற்றர் என்னும் நியம அலகில் குறிப்பிடப்படும். என்பது முறிவுச் சுட்டியைக் குறிக்கின்றது. முறிவுச் சுட்டி என்பது அலகு இல்லாத பெறுமானமாகும்.

இந்த விதியை வேறு விதமாகவும் வருவிக்கலாம். அதாவது பெர்மாவின் விதிப்படி ஒளி ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்வதில் மிகக் குறைந்த நேரமே எடுக்கும் என்னும் கொள்கையின் வழி வந்ததாக நிறுவலாம்.

முறிவுச் சுட்டி தொகு

முறிவுச் சுட்டியின் பொது வடிவம் 1n2 என்பதாகும். முறிவுச் சுட்டியானது சார்பு முறிவுச் சுட்டி, தனி முறிவுச் சுட்டி என இரண்டு வகைப்படும்.

சார்பு முறிவுச் சுட்டி தொகு

முறிவுச் சுட்டி ஏதேனும் ஓர் ஊடகத்துக்குச் சார்பாகக் கணிக்கப்பட்டால் அது சார்பு முறிவுச் சுட்டி எனப்படும். உதாரணமாக, நீரிலிருந்து வளிக்கு ஒளி செல்லுமாயிருப்பின், அது நீn எனக் குறிப்பிடப்படும்.

தனி முறிவுச் சுட்டி தொகு

ஒளியானது ஓர் ஊடகத்திலிருந்து இன்னோர் ஊடகத்துக்குச் செல்லும்போது முதலாவது ஊடகமாக வெற்றிடம் இருப்பின், அப்போது பெறப்படும் முறிவுச் சுட்டி தனி முறிவுச் சுட்டி எனப்படும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினெல்லின்_விதி&oldid=2326806" இலிருந்து மீள்விக்கப்பட்டது