சனி (கோள்)

ஞாயிற்றுக் குடும்பத்தில் இரண்டாவது மிகப்பெரிய கோள்; ஞாயிறிலிருந்து ஆறாவது கோள்

சனி (Saturn) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சனி கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன.[8] சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும். இதன் சராசரி ஆரம் புவியினுடையதை விட ஒன்பது மடங்காகும்.[9][10] புவியின் அடர்த்தியில் எட்டில் ஒருபங்கே இருந்தபோதும் தனது பெரிய அளவினால் புவியை விட 95 மடங்கு நிறையுடையதாக உள்ளது.[11][12] [13]

சனி  ♄
The planet Saturn
2004ஆம் ஆண்டில் காசினியால் எடுக்கப்பட்ட இயற்கை வண்ணத்துடனான சனிக் கோளின் ஒளிப்படம்.
காலகட்டம்J2000.0
சூரிய சேய்மை நிலை10.11595804 AU
(1513325783 km)
சூரிய அண்மை நிலை 9.04807635 AU
(1353572956 km)
அரைப்பேரச்சு 9.5820172 AU
(1433449370 km)
மையத்தொலைத்தகவு 0.055723219
சுற்றுப்பாதை வேகம்
 • 29.4571 வானியல் யூலியன் ஆண்டு
 • 10759.22 d
 • 24491.07 சனி சூரிய நாட்கள்[2]
சூரியவழிச் சுற்றுக்காலம் 378.09 நாட்கள்[3]
சராசரி சுற்றுப்பாதை வேகம் 9.69 கிமீ/வி[3]
சராசரி பிறழ்வு 320.346750°
சாய்வு
 • 2.485240° நீள்வட்டத்திற்கு
 • 5.51° சூரியனின் நடுக்கோட்டிற்கு
 • 0.93° மாறாத தளத்திற்கு[4]
Longitude of ascending node 113.642811°
Argument of perihelion 336.013862°
துணைக்கோள்கள் 62 with formal designations; innumerable additional moonlets.[3]
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 58232±6 km[5][b]
நிலநடுக்கோட்டு ஆரம்
 • 60268±4 km[5][b]
 • 9.4492 Earths
துருவ ஆரம்
 • 54364±10 km[5][b]
 • 8.5521 Earths
தட்டையாதல் 0.09796±0.00018
புறப் பரப்பு
 • 4.27×1010 km2[b]
 • 83.703 Earths
கனஅளவு
 • 8.2713×1014 km3[3][b]
 • 763.59 Earths
நிறை
 • 5.6846×1026 kg[3]
 • 95.152 Earths
அடர்த்தி 0.687 g/cm3[3][b]
(less than நீர்)
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்
விடுபடு திசைவேகம்35.5 km/s[3][b]
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் 10.57 hours[6]
(10 hr 34 min)
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம்
 • 9.87 km/s[b]
 • 35500 km/h
அச்சுவழிச் சாய்வு 26.73°[3]
வடதுருவ வலப்பக்க ஏற்றம்
 • 2h 42m 21s
 • 40.589°[5]
வடதுருவ இறக்கம் 83.537°[5]
எதிரொளி திறன்
மேற்பரப்பு வெப்பநிலை
   1 bar level
   0.1 bar
சிறுமசராசரிபெரும
134 K (-139°C)[3]
84 K[3]
தோற்ற ஒளிர்மை +1.47 to −0.24[7]
கோணவிட்டம் 14.5″ to 20.1″[3]
(excludes rings)
பெயரெச்சங்கள் Saturnian, Cronian
வளிமண்டலம்[3]
அளவீட்டு உயரம் 59.5 km
வளிமண்டல இயைபு by volume:
≈ 96% நீரியம் (H2)
≈ 3% ஈலியம் (He)
≈ 0.4% மெத்தேன் (CH4)
≈ 0.01% அமோனியா (NH3)
≈ 0.01% hydrogen deuteride (HD)
0.0007% எத்தேன் (C2H6)
Ices:

சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. இதன் உள்ளகம் இரும்பு, நிக்கல் மற்றும் பாறைகளும் (சிலிக்கான், ஆக்சிஜன் சேர்மங்கள்) கொண்ட கருவைச் சுற்றி தடிமனான மாழை நிலையிலான ஐதரசன், ஈலியம் அடுக்குகளும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது.[14]

இக்கோளின் வளிமண்டலத்தில் அம்மோனியா படிகங்கள் இருப்பதால் வெளிர் மஞ்சள் சாயை கொண்டுள்ளது. மாழைநில ஐதரசன் அடுக்கில் ஏற்படும் மின்னோட்டத்தால் சனிக்கோளிற்கு காந்தப் புலம் உருவாகின்றது. இந்தக் காந்தப்புலம் புவியினுடையதை விட வலிமை குறைந்து காணப்படுகின்றது; ஆனால் சனிக்கோளின் பெரிய விட்டத்தின் காரணமாக இதன் காந்தத் திருப்புத்திறன் புவியை விட 580 மடங்காக உள்ளது. சனியின் காந்தப்புலத்தின் வலிமை வியாழனின் காந்தப் புலவலிமையில் இருபதில் ஒன்றாக உள்ளது.[15] சனியின் வெளிப்பரப்பு எவ்வித மேடுபள்ளங்களும் இல்லாது உள்ளது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்; ஆனால் நெப்டியூனில் நிலவும் காற்று வேகங்களை விடக் குறைவாகும்.[16]

சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியின் நன்கறிந்த நிலவுகள் மொத்தம் 61. இதைத்தவிர, சுமார் 200 நிலவுக்குட்டிகள் (moonlets) சனிக்கு உள்ளன. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Titan), புதன் கோளை விடவும் பெரியது. சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவான வியாழனின் நிலவான கானிமீடுக்கு அடுத்தது இந்த டைட்டன். சனி சூரியனில் இருந்து 1.400.000.000 கிமீ (869,000,000 மைல்) தூரத்தில் உள்ளது. இது சூரியனின் சுற்றுப்பாதையில் ஒருமுறை சுற்றி முடிக்க அல்லது ஒரு சனி ஆண்டு என்பது பூமியின் 29.6 ஆண்டுகள் ஆகும். சனி கிரேக்கப் புராணங்களில் குரோநோசு (KRONOS) என அழைக்கப்பட்டது. உரோமானிய வேளாண்மைக் கடவுளான சாட்டர்னஸ் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. எனவே சனி கோளின் சின்னம் அரிவாள் சின்னம் (♄) ஆகும். இந்து தொன்மவியலில் சனிக் கடவுளின் பெயர் இக்கோளிற்கு சூட்டப்பட்டுள்ளது.

இயல்பு பண்புகள்

தொகு
 
சனியின் அளவை புவியின் அளவோடு ஒப்பிடும் படிமம்

சனியின் புறப்பரப்பு பெரும்பாலும் வளிமங்களால் ஆனதால் அது வளி அரக்கக்கோள் எனப்படுகின்றது. இருப்பினும் சனிக்கு திண்மையான உள்ளகம் இருக்கலாம்.[17] சனி தன்னைத்தானே சுற்றுவதால் அதற்கு பருநடு நீளுருண்டை வடிவம் அமைந்துள்ளது; அதாவது, முனையங்களில் தட்டையாகவும் நடுப்பகுதியில் பருத்தும் காணப்படுகின்றது. நடுக்கோட்டு ஆரத்திற்கும் முனைய ஆரத்திற்கும் 10% வரையிலான வேறுபாடுள்ளது: முறையே 60,268 கிமீ எதிர் 54,364 கிமீ.[3] சூரியக் குடும்பத்தின் மற்ற வளி அரக்கக்கோள்களான வியாழன், யுரேனசு, நெப்டியூனும் இதே போன்று பருத்தநடுவத்தைக் கொண்டுள்ள போதிலும் அவற்றில் இந்தளவிற்கு வேறுபாடில்லை. சூரியக் குடும்பத்தில் நீரை விட குறைவான அடர்த்தி உள்ளக் கோள் சனி மட்டுமே ஆகும்—ஏறத்தாழ 30% குறைவு.[18] சனியின் கருவம் நீரை விட அடர்த்திக் கூடுதலாக இருப்பினும் வளிநிறைந்த புறப்பரப்பால் சராசரி சாரடர்த்தி 0.69 கி/செமீ3 ஆக உள்ளது. வியாழனின் நிறை புவியினுடையதை விட 318 மடங்காகும்,[19] ஆனால் சனியினுடையது 95 மடங்கே ஆகும்[3]. சூரியக் குடும்பத்தில் உள்ள மொத்த கோள்களின் நிறையில் 92% வியாழன்,சனிக் கோள்களினதாகும்.[20]

சனவரி 8, 2015இல் சனிக்கோளின் மையத்தையும் அதன் நிலவுகளின் மையங்களையும் 4 km (2.5 mi) துல்லியமாக கண்டறிந்துள்ளதாக அறிவித்தது.[21]

சனியின் வளையங்கள்

தொகு

கிரக வளையங்களைக் கொண்ட சனி நம் சூரிய குடும்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க கிரகமாக விளங்குகிறது . இவ்வளையங்கள் சனியின் பூமத்திய ரேகைக்கு மேல் சுமார் 6630 கி.மீ.இலிருந்து 120700 கி.மீ வரை நீண்டிருக்கிறது , அதன் சராசரி தடிமன் 20 மீட்டர் , மற்றும் தோலின் மாசுக்கள் கொண்ட 93 சதவிகிதம் நீர்-பனி உள்ளது . மீதமுள்ள 7சதவிகிதம் பளிங்குருவில்காபன் உள்ளது . வளையங்களில் சிறு புள்ளியிலிருந்து ஒரு வாகனத்தின் அளவு கொண்ட துணிக்கைகள் உள்ளன.சனியின் வளையங்களின் உருவாக்கம் குறித்து இருவேறு கோட்பாடுகள் உள்ளன . சனியின் அழிந்த நிலவின் எஞ்சிய பாகங்களே இவ்வளையங்கள் என்பது ஒரு கோட்பாடு . சனி உருவாகிய வான்புகையுருவின் எஞ்சிய பொருட்களே இவ்வளையங்கள் என்கிறது இன்னொரு கோட்பாடு.

அக்டோபர் 6, 2009 அன்று சனியின் பூமத்திய தட்டிலிருந்து 27 கோணலாக , போஎபெயின் வட்டப்பாதையில் ஒரு வெளி வட்டு வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலம்

தொகு

சனியின் வளிமண்டலத்தின் வெளி பகுதியில் 3% ஹீலியம், 0.4% மீத்தேன் மற்றும் 0.01% அம்மோனியா, மற்றும் 96% ஹைட்ரஜன் கொண்டது. மற்றும் அசிடிலின்,ஈதேன் மற்றும் பாஸ்பீன் மிக சிறிய அளவில் உள்ளன. சனியின் மேகங்கள் வியாழன் காணப்படும் மேகப்பட்டைகள் போன்ற, ஒரு பட்டை முறையில் பூமத்தியரேகையில் பரந்துள்ளன. சனி குறைந்த மேக அடுக்கு நீர் பனி சேர்ந்து 10 கிமீ (6 மைல்) தடித்தது. இங்கு வெப்பநிலை மிகவும் குறைவாக உள்ளது.மேல் அடுக்கு, 77 கிமீ (48 மைல்) தடித்த, அம்மோனியம் ஹைட்ரோ சல்பைடு பனியால் உருவாக்கப்பட்டது.அதற்கு மேலே உயர்ந்த அடுக்கு ஹைட்ரஜனால் உருவாக்கப்பட்டது

துணைக்கோள்கள்

தொகு

சனியைச் சுற்றி அறுபத்தி ஒன்று நிலவுகள் சுழல்கின்றன. இதில் தொண்ணூறு விழுக்காட்டை (இடை அளவில்) மிக பெரிய நிலவான டைட்டன் பங்களிக்கிறது. சனியின் இரண்டாவது பெரிய நிலவு ரியாவுக்கு சுற்றுவலயம் இருக்கிறது. மற்ற நிலவுகள் மிகவும் சிறியவை: 10 கிமீ விட்டத்தின் கீழ் முப்பத்து நான்கு நிலவுகள் மற்றும் 50 கிமீ விட்டத்தின் கீழ் பதினான்கு நிலவுகளும் இருக்கின்றன. சம்பிரதாயமாக, அனைத்து சனியின் நிலவுகளுக்கும் கிரேக்கக் கடவுள்களான டைடன்களின் பெயர்களே சூட்டப்படுகின்றன.

சனியின் வரலாறு

தொகு

1610 ல் கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி மூலம் அதன் வளையங்களை கண்டுபிடித்தார். அதைபார்த்து கலிலியோ வளையங்களை ஒன்றை மற்றொரு தொட்ட மூன்று தனித்தனி கிரகங்கள் என்று நினைத்தார்.1655 ஆம் ஆண்டில், கிறிஸ்டியன் ஹிகென்ஸ் சனியை சுற்றிய வளையங்களை கண்டறிந்த முதல் அதிகாரபூர்வ நபராவார். கலிலி காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம், அவர் சனி "எங்கும் தொட்டு, ஒரு மெல்லிய, தட்டையான,வளையத்தால் சூழப்பட்டுள்ளது என கண்டறிந்தார்.

சனியில் தண்ணீர்

தொகு

சனி கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில ஜெர்மனியைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானிகள் பால் ஹார்டாக் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சனி கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தனர். சனி கிரகத்தை சுற்றி பல சந்திரன்கள் உள்ளன. அவற்றில் அக்கிரகத்தின் மேல் பகுதியில் ஆறாவது மிகப்பெரிய சந்திரன் உள்ளது. அது முழுவதும் ஐஸ் கட்டினால் மூடப்பட்டுள்ளது. இதனால் சனிகிரகத்தில் மழை பெய்து அதன் மூலம் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் அங்கு ஆவி நிலையில் தண்ணீர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவை சனி கிரகத்தை சுற்றி வட்டவடிவில் உள்ளது. இது அந்த கிரகத்தின் சுற்றளவை விட 10 மடங்கு பெரியதாக உள்ளது. இதனால் இங்கு தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கோளின் வரைபடம்
 
சனிக்கோளின் வரைபடம்

விண்வெளி ஆய்வு

தொகு
 
காசினி விண்கலத்தில் எடுக்கப்பட்ட படம்

சனி முதன்முதலில் செப்டம்பர் 1979 ல் பயனீர் 11 விண்கலம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.கிரகத்தின் மேகத்தின் மேலே 20,000 கி.மீ. ( 12,427 மைல்) உயரத்தில் பறந்தது.இது கிரகத்தின் மற்றும் அதன் சந்திரன்களை ஒரு சில புகைப்படங்கள் எடுத்தது ஆனால் தரம் குறைவாக இருந்தன.இதன்மூலம் F வளையம் என்று ஒரு புதிய , மெல்லிய வளையம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சன் நோக்கி பார்த்தபோது இருட்டில் மோதிரத்தை இடைவெளிகளை விட பிரகாசமான தோன்றும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.இது இடைவெளிகள் காலியாக இல்லை காட்டுகிறது. நவம்பர் 1980 இல் , வாயேஜர் 1 சனியை அடைந்தது.இந்த புகைப்படங்கள் நிலவுகள் மேற்பரப்பில் அம்சங்கள் காட்ட முடிந்தது.வாயேஜர் 1 டைட்டன் அடைந்தது.மற்றும் அதன் வளிமண்டலம் பற்றி நிறைய தகவல் கிடைத்தது. ஜூலை 1 , 2004 அன்று , காசினி ஹூவாஜன்ஸ் சனி சுற்றுப்பாதையில் நுழைந்தது. டிசம்பர் 25 , 2004 அன்று , ஹிகென்ஸ் டைட்டன் மேற்பரப்பில் நுழைந்து ஜனவரி 14 , 2005 அன்று அங்கு தரையிறங்கியது. இது ஒரு உலர் மேற்பரப்பில் இறங்கியது.மேலும் டைட்டனின் வடக்கு துருவத்தில் அருகே ஹைட்ரோகார்பன் ஏரிகள் அமைந்துள்ளது என்று ஜூலை 2006 ல் நிரூபிக்கப்பட்டது. காசினி 2005 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சனியில் நிகழும் மின்னல் பதிவுசெய்யப்பட்டது.இந்த மின்னகளின் சக்தி பூமியில் சக்தி வாய்ந்த மின்னலை விட 1,000 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தொகு
 • கலீலியோ கலிலி - 1610-இல் சனி கிரகத்தின் வளையங்களை முதன் முதலில் கண்டறிந்தவர்.

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு

குறிப்புகள்

தொகு
 1. Orbital elements refer to the barycenter of the Saturn system and are the instantaneous osculating values at the precise J2000 epoch. Barycenter quantities are given because, in contrast to the planetary centre, they do not experience appreciable changes on a day-to-day basis from the motion of the moons.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Refers to the level of 1 bar atmospheric pressure

மேற்சான்றுகள்

தொகு
 1. Yeomans, Donald K. (13 July 2006). "HORIZONS Web-Interface for Saturn Barycenter (Major Body=6)". JPL Horizons On-Line Ephemeris System. பார்க்கப்பட்ட நாள் 2007-08-08. – Select "Ephemeris Type: Orbital Elements", "Time Span: 2000-01-01 12:00 to 2000-01-02". ("Target Body: Saturn Barycenter" and "Center: Sun" should be defaulted to.)
 2. Seligman, Courtney. "Rotation Period and Day Length". Archived from the original on 11 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 13 August 2009. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 Williams, David R. (7 September 2006). "Saturn Fact Sheet". NASA. Archived from the original on 21 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 31 July 2007. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 4. "The MeanPlane (Invariable plane) of the Solar System passing through the barycenter". 3 April 2009. Archived from the original on 14 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 10 April 2009. (produced with Solex 10 பரணிடப்பட்டது 2008-12-20 at the வந்தவழி இயந்திரம் written by Aldo Vitagliano; see also Invariable plane)
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 எஆசு:10.1007/s10569-007-9072-y 10.1007/s10569-007-9072-y
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 6. 'Astronews' (New Spin For Saturn). Astronomy. November 2009. p. 23. 
 7. Schmude, Richard W. Junior (2001). "Wideband photoelectric magnitude measurements of Saturn in 2000". Georgia Journal of Science இம் மூலத்தில் இருந்து 16 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071016182302/http://findarticles.com/p/articles/mi_qa4015/is_200101/ai_n8933308. பார்த்த நாள்: 14 October 2007. 
 8. சனிப் பெயர்ச்சி
 9. Brainerd, Jerome James (24 November 2004). "Characteristics of Saturn". The Astrophysics Spectator. Archived from the original on 5 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 5 July 2010.
 10. "General Information About Saturn". Scienceray. 28 July 2011. Archived from the original on 6 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 August 2011.
 11. Brainerd, Jerome James (6 October 2004). "Solar System Planets Compared to Earth". The Astrophysics Spectator. Archived from the original on 6 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 5 July 2010.
 12. Dunbar, Brian (29 November 2007). "NASA – Saturn". NASA. Archived from the original on 6 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 21 July 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 13. Cain, Fraser (3 July 2008). "Mass of Saturn". Universe Today. பார்க்கப்பட்ட நாள் 17 August 2011.
 14. Brainerd, Jerome James (27 October 2004). "Giant Gaseous Planets". The Astrophysics Spectator. Archived from the original on 5 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 5 July 2010.
 15. Russell, C. T.; Luhmann, J. G. (1997). "Saturn: Magnetic Field and Magnetosphere". UCLA – IGPP Space Physics Center. Archived from the original on 2011-10-05. பார்க்கப்பட்ட நாள் 2007-04-29.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
 16. "The Planets ('Giants')". Science Channel. 8 June 2004. 
 17. Melosh, H. Jay (2011). Planetary Surface Processes. Cambridge Planetary Science. Vol. 13. Cambridge University Press. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-51418-5.
 18. "Saturn – The Most Beautiful Planet of our solar system". Preserve Articles. 23 January 2011. Archived from the original on 5 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 24 July 2011.
 19. Williams, David R. (16 November 2004). "Jupiter Fact Sheet". NASA. Archived from the original on 5 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 2 August 2007.
 20. Fortney, Jonathan J.; Nettelmann, Nadine (May 2010). "The Interior Structure, Composition, and Evolution of Giant Planets". Space Science Reviews 152 (1–4): 423–447. doi:10.1007/s11214-009-9582-x. Bibcode: 2010SSRv..152..423F 
 21. Dyches, Preston; Finley, Dave (8 January 2015). "Scientists Pinpoint Saturn With Exquisite Accuracy". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா). பார்க்கப்பட்ட நாள் 9 January 2015.
பிழை காட்டு: <ref> tag with name "nasafact" defined in <references> group "" has no content.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனி_(கோள்)&oldid=3929567" இலிருந்து மீள்விக்கப்பட்டது