1596
ஆண்டு 1596 (MDXCVI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1596 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1596 MDXCVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1627 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2349 |
அர்மீனிய நாட்காட்டி | 1045 ԹՎ ՌԽԵ |
சீன நாட்காட்டி | 4292-4293 |
எபிரேய நாட்காட்டி | 5355-5356 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1651-1652 1518-1519 4697-4698 |
இரானிய நாட்காட்டி | 974-975 |
இசுலாமிய நாட்காட்டி | 1004 – 1005 |
சப்பானிய நாட்காட்டி | Bunroku 5Keichō 1 (慶長元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1846 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3929 |
நிகழ்வுகள்
தொகு- ஏப்ரல் 9 – எசுப்பானியப் படைகள் கலே நகரைக் கைப்பற்றினர்.
- சூலை 14 – இலங்கை, கோட்டை அரசன் டொமினிக்கசு கொரெயா (எதிரில்லே பண்டார) போர்த்துக்கீசரினால் கொழும்பில் தூக்கிலிடப்பட்டான்.
- ஆகத்து – டேவிட் பாப்ரிசியசு, மிரா என்ற முதலாவது அலைவியல்பு மாறியல்பு விண்மீனைக் கண்டுபிடித்தார்.
- உணவுப் பற்றாக்குறையினால் அனைத்து ஆப்பிரிக்கர்களும் பிர்த்தானியாவில் இருந்து அகற்றப்பட வேண்டும் என இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் ஆணையிட்டார்.[1]
- போலந்தின் தலைநகர் கிராக்கோவ்வில் இருந்து வார்சாவாவுக்கு மாற்றப்பட்டது.
- ஐரோப்பாவின் பல பகுதிகளை கறுப்புச் சாவு தாக்கியது.
- டச்சுக் கப்பல்கள் முதற்தடவையாக சுமாத்திரா, சாவகத்தை அடைந்தன.
பிறப்புகள்
தொகு- மார்ச் 31 – ரெனே டேக்கார்ட், பிரெஞ்சு மெய்யியலாளர், கணிதவியலாளர் (இ. 1650)
இறப்புகள்
தொகு- சனவரி 27 – பிரான்சிஸ் டிரேக், ஆங்கிலேயக் கப்பல் தலைவர், அரசியல்வாதி (பி. 1540)
மேற்கோள்கள்
தொகு- ↑ Emily C. Bartels (April 2006). Too Many Blackamoors: Deportation, Discrimination, and Elizabeth I. Studies in English Literature, 1500–1900. 46. Rice University. பக். 305–322. http://www.jstor.org/stable/3844644.