1593
ஆண்டு 1593 (MDXCIII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1582 இற்குப் பின்னரும் உலகின் பல நாடுகளில் யூலியன் நாட்காட்டி 1929 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1593 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1593 MDXCIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1624 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2346 |
அர்மீனிய நாட்காட்டி | 1042 ԹՎ ՌԽԲ |
சீன நாட்காட்டி | 4289-4290 |
எபிரேய நாட்காட்டி | 5352-5353 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1648-1649 1515-1516 4694-4695 |
இரானிய நாட்காட்டி | 971-972 |
இசுலாமிய நாட்காட்டி | 1001 – 1002 |
சப்பானிய நாட்காட்டி | Bunroku 2 (文禄2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1843 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3926 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி – சப்பானியரின் பியொங்யாங் மீதான தாக்குதல் கொரிய, மற்றும் மிங் படையினரால் முறியடிக்கப்பட்டது.
- சனவரி 18 – சியாமிய அரசன் நரேசுவான் தனது யானைப் படையின் உதவியுடன் பர்மிய இளவரசன் மிங்கி சுவாவைக் கொன்றார். இந்நாள் தாய்லாந்தில் இராணுவப் படைகளின் நாளாக பொது விடுமுறை நாள் அறிவிக்கப்பட்டது.
- சூன் 22 – குரோவாசியாவில் ஆப்சுபர்கு ஆட்சியாளர் உதுமானியரைத் தோற்கடித்தனர்.
- கோவாவிலிருந்து டொன் பேதுரு டி சொயுசா என்பவனின் தலைமையில் கண்டிக்கு படைகள் அனுப்பப்பட்டன. கண்டியின் தலைவனாகத் தன்னையும் கண்டியின் முன்னைய அரசனின் மகளான டொனா கத்தரீனா என்பவளை அரசியாகவும் அறிவித்தான்.[1]
- கண்டியின் விமல தர்மா டி சொயுசாவைத் தோற்கடித்து டொனா கத்தரீனாவை சிறைப்பிடித்தான். அவளையே பின்னர் மணமுடித்தான்.[1]
பிறப்புகள்
தொகு- செப்டம்பர் 1 – மும்தாசு மகால், முகலாயப் பேரரசர் சாஜகானின் மனைவி (இ. 1631)
இறப்புகள்
தொகு- மே 30 – கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1564)
- அப்பைய தீட்சிதர், அத்வைத வேதாந்த பண்டிதர் (பி. 1520)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 3