குரு அர்கோவிந்த்

குரு அர்கோவிந்த் (Guru Hargobind, ஹர்கோபிந்த்) அல்லது சச்சா பாதுசா ("மெய்யான பேரரசர்"), (19 சூன் 1595 – 3 மார்ச் 1644)[1][2] ஆறாவது சீக்கிய குரு ஆவார். முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரால் தனது தந்தை குரு அர்ஜன் கொல்லப்பட்டதால் பதினோராவது அகவையிலேயே மே 30, 1606இல் குருவாக பொறுப்பிலமர்ந்தார்.[3] இசுலாமிய சமய ஒறுப்பை எதிர்க்கவும் சமய சுதந்திரத்தைக் காக்கவும் சீக்கியத்தினுள் படைத்துறை மரபை துவக்கியதற்காக இவர் அறியப்படுகின்றார்.[3][4] 37 ஆண்டுகள், 9 மாதங்கள், 3 நாட்கள் குருவாக பொறுப்பாற்றி நீண்ட காலம் பொறுப்பிலிருந்த குருவாக விளங்குகின்றார்.

குரு அர்கோவிந்த்
ਗੁਰੂ ਹਰਿਗੋਬਿੰਦ ਜੀ
தாள் ஓவியம்
அரசு அருங்காட்சியகம், சண்டிகர்
பிறப்பு19 சூன் 1595
குரு கி வடாலி, அம்ரித்சர், பஞ்சாப், இந்தியா
இறப்புமார்ச்சு 3, 1644(1644-03-03) (அகவை 48)[1]
கீரத்பூர் சாகிப், இந்தியா
மற்ற பெயர்கள்ஆறாம் ஆசிரியர்
சச்சா பாதுசா
அறியப்படுவது
பட்டியல்
  • அகால் தக்த் கட்டியது
  • போரில் ஈடுபட்ட முதல் குரு
  • சீக்கியர்களை படைத்துறையிலும் தற்காப்புக் கலையிலும் பயிற்சி எடுக்க பரிந்துரைத்தது
  • மிரி பிரியை நிறுவியது
  • கீரத்பூர் சாகிபை நிறுவியது
  • கீழ்கண்ட சண்டைகளில் பங்கேற்றது:
    • ரோகில்லா சண்டை
    • கர்தார்பூர் சண்டை
    • அமிர்தசரசு சண்டை (1634)
    • அர்கோபிந்த்பூர் சண்டை
    • குருசர் சண்டை
    • கீரத்பூர் சண்டை
முன்னிருந்தவர்குரு அர்ஜன்
பின்வந்தவர்குரு அர் ராய்
சமயம்சீக்கியம்
பெற்றோர்குரு அர்ஜன் & மாதா கங்கா
வாழ்க்கைத்
துணை
மாதா தமோதரி, மாதா நாநாகி, மாதா மகா தேவி
பிள்ளைகள்பாபா குர்திதா, பாபா சூரஜ் மால், பாபா அனி ராய், பாபா அடால் ராய், குரு தேக் பகதூர், பிபி பிரோ

மேற்சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Fauja Singh. "HARGOBIND GURU (1595-1644)". Punjabi University Punjabi. http://www.learnpunjabi.org/eos/index.aspx. 
  2. Guru Har Gobind Ji, the true emperor
  3. 3.0 3.1 HS Syan (2013), Sikh Militancy in the Seventeenth Century, IB Tauris, ISBN 978-1780762500, pages 48-55
  4. Pashaura Singh (2005), Understanding the Martyrdom of Guru Arjan பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், Journal of Philosophical Society, 12(1), pp. 29-62

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_அர்கோவிந்த்&oldid=3731559" இருந்து மீள்விக்கப்பட்டது