ஆகத்து 20
நாள்
(ஆகஸ்டு 20 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகத்து 20 (August 20) கிரிகோரியன் ஆண்டின் 232 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 233 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 133 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 14 – உரோமைப் பேரரசர் அகஸ்டசின் பேரனும், முடிக்குரியவனுமான அக்ரிப்பா பொசுதூமசு அவனது காவலர்களால் கொலை செய்யப்பட்டான்.
- 636 – அராபியப் படையினர் காலிது இப்னு அல்-வாலிது தலைமையில் பைசாந்தியப் பேரரசிடம் இருந்து லெவண்ட் பிரதேசத்தைக் கைப்பற்றினர். இதுவே அராபியாவுக்கு வெளியே முசுலிம்களின் முதலாவது பெரும் பரவலாகக் கருதப்படுகிறது.
- 917 – பல்காரியாவின் முதலாம் சிமியோன் மன்னர் பைசாந்திய இராணுவத்தை அச்செலோசு சமரில் தோற்கடித்தார்.
- 1000 – அங்கேரி நாடு முதலாம் இசுடீவனால் உருவாக்கப்பட்டது.
- 1083 – அங்கேரியின் முதலாவது மன்னர் முதலாம் இசுடீவனும், அவரது மகன் எமெரிக்கும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
- 1191 – மூன்றாம் சிலுவைப் போரின் போது கைப்பற்றப்பட்ட 2,600 முதல் 3,000 வரையான சலாகுத்தீனின் முசுலிம் இராணுவத்தினர் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1852 – அத்திலாந்திக்கு என்ற அமெரிக்க நீராவிக் கப்பல் மூழ்கியதில் 150 பேர் உயிரிழந்தனர்.
- 1858 – சார்லஸ் டார்வின் தனது படிவளர்ச்சிக் கொள்கையை இயற்கைத் தேர்வு மூலம் முதலில் வெளியிட்டார், இதே கொள்கை அதே நாளில் ஆல்பிரடு அரசல் வாலேசினாலும் வெளியிடப்பட்டது.
- 1866 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
- 1910 – அமெரிக்காவின் வடகிழக்கு வாசிங்டன், வடக்கு ஐடகோ, மேற்கு மொன்ட்டானா ஆகிய இடங்களில் பெரும் தீ பரவியது.
- 1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை செருமனி கைப்பற்றியது.
- 1917 – இலங்கையில் ஒரு ரூபாய் நாணயத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]
- 1940 – மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த உருசியப் புரட்சியாளர் லியோன் திரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் இறந்தார்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் 168 போர்க் கைதிகள் செருமனியின் புக்கென்வால்ட் வதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: உருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.
- 1948 – இலங்கை குடியுரிமை சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 700,000 இற்கும் அதிகமான (மொத்த மக்கள்தொகையில் 11%) இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
- 1950 – கொரியப் போர்: வடகொரியப் படைகள் நாக்டொங் ஆற்றைக் கடந்து தேகு நகரைத் தாக்க எடுத்த முயற்சிகளை ஐநா படைகள் முறியடித்தன.
- 1955 – மொரோக்கோவில், அட்லசு மலைப் பகுதியைச் சேர்ந்த பேர்பர் படைகள் இரண்டு குடியேற்றங்களைத் தாக்கி 77 பிரெஞ்சுக்காரரைக் கொலை செய்தனர்.
- 1960 – செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.
- 1968 – பனிப்போர்: சோவியத்-ஆதரவு வார்சா உடன்பாட்டுப் படையினர் 200,000 பேர் செக்கோசிலோவாக்கியாவை ஊடுருவியது. இத்தாக்குதலில் அல்பேனியா, உருமேனியா ஆகியன பங்குபற்ற மறுத்து விட்டன.
- 1975 – நாசா வைக்கிங் 1 என்ற விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.
- 1977 – நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.
- 1988 – ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.
- 1988 – வட அயர்லாந்தில் பிரித்தானியப் படையினர் சென்ற பேருந்து ஒன்றில் ஐஆர்ஏ போராளிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் எட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், மேலும் 28 பேர் காயமடைந்தனர்.
- 1989 – தேம்சு ஆற்றில் படகு ஒன்று மூழ்கியதில் 51 பேர் உயிரிழந்தனர்.
- 1991 – மாஸ்கோவில் 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள் சோவியத் அரசுத்தலைவர் மிக்கைல் கொர்பச்சோவிற்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவப் புரட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- 1991 – எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.
- 1995 – இந்தியா, பிரோசாபாத் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 358 பேர் உயிரிழந்தனர்.
- 1997 – அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1998 – கியூபெக் மாநிலம் மத்திய அரசின் அனுமதியின்றி கனடாவில் இருந்து சட்டபூர்வமாகப் பிரிய முடியாது என கனடாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- 2006 – ஈழப்போர்: அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணாமல் போனார்கள்.
- 2006 – ஈழப்போர்: நமது ஈழநாடு பத்திரிகையின் பணிப்பாளரும், முன்னாள் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினருமான சி. சிவமகராஜா தெல்லிப்பழையில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- 2008 – எசுப்பானியா, மத்ரித் நகரில் பராகாசு விமான நிலையத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணம் செய்த 172 பேரில் 146 பேர் உயிரிழந்தனர். மேலும் எட்டு பேர் மருத்துவமனையில் இறந்தனர்.
- 2014 – சப்பானில் இரோசிமா நகரில் நிகழ்ந்த நிலச்சரிவுகளில் 72 பேர் உயிரிழந்தனர்.
- 2016 – துருக்கியின் காசியான்டெப் நகரில் குர்தியத் திருமண நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டனர்,
பிறப்புகள்
- 1685 – பரூக்சியார், முகலாயப் பேரரசர் (இ. 1719)
- 1719 – கிறித்தியன் மேயர், செக் நாட்டு வானியலாளர் (இ. 1783)
- 1890 – எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1937)
- 1910 – ஈரோ சாரினென், கேட்வே ஆர்ச்சை வடிவமைத்த பின்லாந்து-அமெரிக்க கட்டிடக்கலைஞர் (இ. 1961)
- 1913 – ரோஜர் ஸ்பெர்ரி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1994)
- 1933 – செ. மாதவன், தமிழக அரசியல்வாதி (இ. 2018)
- 1944 – ராஜீவ் காந்தி, இந்தியாவின் 6வது பிரதமர் (இ. 1991)
- 1946 – நா. ரா. நாராயணமூர்த்தி, இந்தியத் தொழிலதிபர்
- 1951 – முகம்மது முர்சி, எகிப்தின் 5வது அரசுத்தலைவர்
- 1974 – ஏமி ஆடம்சு, அமெரிக்க நடிகை
- 1981 – பென் பார்னெஸ், ஆங்கிலேய நடிகர்
- 1983 – ஆண்ட்ரூ கார்பீல்ட், அமெரிக்க-ஆங்கிலேய நடிகர்
- 1984 – மதுமிதா, இந்திய நடிகை
- 1992 – டெமி லோவாடோ, அமெரிக்கப் பாடகி, நடிகை
இறப்புகள்
- 984 – பதினான்காம் யோவான் (திருத்தந்தை)
- 1572 – மிகுவெல் உலோபசு டி லெகாசுபி, எசுப்பானிய அரசியல்வாதி, பிலிப்பீன்சின் 1வது ஆளுநர் (பி. 1502)
- 1854 – பிரீடரிக் ஷெல்லிங், செருமானிய மெய்யியலாளர் (பி. 1775)
- 1912 – வில்லியம் பூத், இரட்சணிய சேனையை உருவாக்கிய ஆங்கிலேயர் (பி. 1829)
- 1914 – பத்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1835)
- 1915 – கார்லோஸ் பின்லே, கியூபா மருத்துவர், ஆய்வாளர் (பி. 1833)
- 1939 – அகனேசு கில்பெர்னே, இந்திய-ஆங்கிலேய வானியலாளர் (பி. 1845)
- 2001 – பிரெட் ஆயில், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1915)
- 2001 – எஸ். கே. பாலகிருஷ்ணன், தமிழக அரசியல்வாதி (பி. 1935)
- 2006 – சி. சிவமகராஜா, இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1938]])
- 2011 – ராம் சரண் சர்மா, இந்திய வரலாற்றாளர் (பி. 1919)
- 2013 – நரேந்திர தபோல்கர், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1945)
- 2014 – பி. கே. எஸ். அய்யங்கார், யோகா ஆசிரியர் (பி. 1918)
- 2014 – அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ், உருசிய வானியற்பியலாளர், ஊடகவியலாளர் (பி. 1983)
- 2017 – ஜெர்ரி லுவிஸ், அமெரிக்க நடிகர் (பி. 1926)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (எசுத்தோனியா, சோவியத்திடம் இருந்து 1991)
- உலகக் கொசு நாள்
- மத நல்லிணக்க தினம் (இந்தியா)
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 110
வெளி இணைப்புகள்
- பிபிசி: இந்த நாளில்
- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்
- கனடா இந்த நாளில் பரணிடப்பட்டது 2012-12-10 at Archive.today