2014 ஹிரோஷிமா நிலச்சரிவு
2014-ஆம் ஆண்டு ஆகஸ்டு 20 அன்று ஜப்பானின் ஹிரோஷிமா நிலப்பகுதியில் கடும் மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி நாற்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐம்பத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.[4][5]
நாள் | 20 ஆகஸ்டு 2014 |
---|---|
அமைவிடம் | ஹிரோஷிமா நிலப்பகுதி, ஜப்பான் |
காரணம் | பலத்த மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு |
இறப்புகள் | 41[1] |
காணாமல் போனோர் | 47[2][3] |
காரணி
தொகுஹிரோஷிமாவில் ஒரு மாதம் பொழிய வேண்டிய மழை, பேய் மழையை போன்று ஒரே நாளில் பொழிந்ததால்,அந்நகரத்தின் அருகே இருந்த மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.[4] அதிகப்பட்சமாக, அசாகிடா-கு எனும் பகுதியில் 217.5 மில்லிமீட்டர்கள் (8.56 அங்) மழை அதிகாலை ஒன்றரை மணி முதல் நான்கரை மணி வரை பொழிந்தது. அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள் அதே பகுதியில் இரண்டு முறை நிலச்சரிவு நிகழ்ந்தது.
சேதங்களின் விவரங்கள்
தொகுநிலச்சரிவில் சிக்கி நாற்பது பேர் இறந்தனர் மற்றும் 22 ஆகஸ்டு வரையில் ஐம்பத்திற்கும் மேற்பட்டோர் கண்டெடுக்கப்படாமல் உள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளோர் பற்றிய தகவல் ஏதுமில்லாததால், பலி எண்ணிக்கை நூறைத் தாண்டும் என அஞ்சப்படுகிறது.[6]
மீட்புப் பணிகள்
தொகுமீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள உள்ளூர் அணிகளுக்கு உதவ ராணுவத்திற்கு கட்டளை இட்டுள்ளார் அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "広島土砂災害の死者41人に 不明47人、捜索は難航". Asahi Shimbun. 23 August 2014. பார்க்கப்பட்ட நாள் 22 August 2014.
- ↑ "Rain hampering search operation in Hiroshima". NHK World. 22 August 2014. Archived from the original on 26 ஆகத்து 2014. பார்க்கப்பட்ட நாள் 22 August 2014.
- ↑ "救助・捜索を阻む雨、死者40人・不明47人に". The Yomiuri Shimbun. 22 August 2014. Archived from the original on 26 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 22 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 4.2 "Japan landslides kill 32 in Hiroshima prefecture". BBC News. 20 August 2014. பார்க்கப்பட்ட நாள் 20 August 2014.
- ↑ Hanai, Toru (20 August 2014). "Landslides hit Japan's Hiroshima, killing at least 36". Reuters. Archived from the original on 21 ஆகத்து 2014. பார்க்கப்பட்ட நாள் 21 August 2014.
- ↑ "Japan landslide: Death toll rises to 39 in Hiroshima". BBC News. 22 August 2014. பார்க்கப்பட்ட நாள் 22 August 2014.