1685
1685 (MDCLXXXV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1685 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1685 MDCLXXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1716 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2438 |
அர்மீனிய நாட்காட்டி | 1134 ԹՎ ՌՃԼԴ |
சீன நாட்காட்டி | 4381-4382 |
எபிரேய நாட்காட்டி | 5444-5445 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1740-1741 1607-1608 4786-4787 |
இரானிய நாட்காட்டி | 1063-1064 |
இசுலாமிய நாட்காட்டி | 1096 – 1097 |
சப்பானிய நாட்காட்டி | Jōkyō 2 (貞享2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1935 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4018 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 6 - இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசுவின் (1630–1685) இறப்பை அடுத்து அவரது சகோதரர் யோர்க் இளவரசர் ஜேம்சு ஸ்டுவர்ட் இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு என்ற பெயரில் இங்கிலாந்து, அயர்லாந்து இசுக்கொட்லாந்து அரசனாக முடி சூடினார்.
- மார்ச் - பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் அடிமைகளை முழுமையாகப் பயன்படுத்த அனுமதிக்கும் சட்டத்தை பிரான்சின் பதினான்காம் லூயி அறிவித்தார்.
- மே 11 - இரண்டாம் ஜேம்சுவை இசுக்கொட்லாந்து திருச்சபையின் தலைவராக ஏற்க மறுத்த ஐவர் இசுக்கொட்லாந்தின் விக்டவுன் நகரில் தூக்கிலிடப்பட்டனர்.[1]
- சூன் 11 - இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசுவின் சட்டபூர்வமான வாரிசான ஜேம்சு ஸ்கொட் தனது சிறிய தந்தை இரண்டாம் ஜேம்சுவுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடுத்த நெதர்லாந்தில் இருந்து படையினருடன் இங்கிலாந்து வந்து சேர்ந்தான்.[2]
- சூன் 20 - ஜேம்சு ஸ்கொட் இங்கிலாந்தின் அரசனாகத் தன்னை அறிவித்தான்.[2]
- சூலை 6 - இங்கிலாந்தின் இரண்டாம் ஜேம்சு மன்னனின் படைகள் கிளர்ச்சியில் ஈடுபட்ட இளவரசர் ஜேம்சு ஸ்கொட்டின் படைகளைத் தோற்கடித்து இளவரசரைச் சிறைப் பிடித்தனர்.
- சூலை 15 - இளவரசர் ஜேம்சு ஸ்கொட் இலண்டன் டவர் குன்றில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டார்.
- அக்டோபர் 18-அக்டோபர் 19 - பிரான்சின் பதினான்காம் லூயி சீர்திருத்தத் திருச்சபையை சட்டத்துக்குப் புறம்பானதென அறிவித்தார்.
- யோசப் வாசு அடிகளார் கோவாவில் பிலிப்பு நேரி வணக்கத்தலத்தில் சேர்ந்தார்.[3]
பிறப்புகள்
தொகு- பெப்ரவரி 23 - ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், செருமானிய இசையமைப்பாளர் (இ. 1759)
- மார்ச் 12 - ஜியார்ஜ் பெர்க்லி, ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1753)
- மார்ச் 31 - யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசையமைப்பாளர் (இ. 1750)
- ஆகத்து 20 - பரூக்சியார், முகலாயப் பேரரசர் (இ. 1719)
இறப்புகள்
தொகு- பெப்ரவரி 6 - இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் (பி. 1630)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Wigtown Martyrs". Undiscovered Scotland. பார்க்கப்பட்ட நாள் 2011-10-26.
- ↑ 2.0 2.1 Harris, Tim (2004). "Scott (Crofts), James, duke of Monmouth and first duke of Buccleuch (1649–1685)". Oxford Dictionary of National Biography. Oxford University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/ref:odnb/24879. பார்க்கப்பட்ட நாள் 2011-10-26.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5