இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு

(இங்கிலாந்தின் இரண்டாம் ஜேம்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரண்டாம் மற்றும் ஏழாம் யேம்சு (James II and VII, 14 அக்டோபர் 1633பழைய நாட்காட்டி – 16 செப்டம்பர் 1701) என்பவர் இங்கிலாந்து, மற்றும் அயர்லாந்து ஆகியவற்றின் இரண்டாம் யேம்சு மன்னராகவும், இசுக்கொட்லாந்தின் ஏழாம் யேம்சு மன்னராகவும்,[2] 1685 பெப்ரவரி 6 முதல் 1688 வரை பதவியில் இருந்தவர். 1688 இல் இடம்பெற்ற புரட்சியில் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இவரே இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளின் கடைசி ரோமன் கத்தோலிக்க மன்னராக இருந்தார்.

இரண்டாம், மற்றும் ஏழாம் யேம்சு
James II and VII
சர் கோட்பிரி நெல்லரின் ஓவியம், 1684
இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து மன்னர்
ஆட்சிக்காலம்6 பெப்ரவரி 1685 – 11 டிசம்பர் 1688
முடிசூட்டுதல்23 ஏப்ரல் 1685
முன்னையவர்இரண்டாம் சார்லசு
அடுத்து வந்தவர்கள்மூன்றாம், இரண்டாம் வில்லியம், இரண்டாம் மேரி
பிறப்பு(1633-10-14)14 அக்டோபர் 1633
(பு.நா: 24 அக்டோபர் 1633)
புனித யேம்சின் அரண்மனை, இலண்டன்
இறப்பு16 செப்டம்பர் 1701(1701-09-16) (அகவை 67)[1]
பிரான்சு
புதைத்த இடம்
துணைவர்
ஆன் ஹைடு
(தி. 1660; இற. 1671)

மொடெனாவின் மேரி
(தி. 1673⁠–⁠1701)
குழந்தைகளின்
பெயர்கள்
  • இரண்டாம் மேரி
  • ஆன்
  • யேம்சு பிரான்சிசு எட்வர்ட் ஸ்டுவர்ட்
  • லூயிசா மரியா தெரேசா ஸ்டுவர்ட்
  • என்றியேட்டா பிட்சுயேம்சு
  • யேம்சு பிட்சுயேம்சு
  • என்றி பிட்சுயேம்சு
மரபுஸ்டுவர்ட் மாளிகை
தந்தைமுதலாம் சார்லசு
தாய்பிரான்சின் என்றியேட்டா மரியா
மதம்ரோமன் கத்தோலிக்கம்
முன்னர். இங்கிலாந்து திருச்சபை
கையொப்பம்இரண்டாம், மற்றும் ஏழாம் யேம்சு James II and VII's signature

முதலாம் சார்லசு மன்னரின் உயிருடனிருந்த இரண்டாவது மகனான இரண்டாம் யேம்சு,[3] இவரது சகோதரரான இரண்டாம் சார்லசு இறந்ததை அடுத்து மன்னராக முடிசூடினார்.[4] பிரித்தானியாவின் அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வந்த சீர்திருத்தவாதிகள் இவரை பிரெஞ்சு-சார்பானவராகவும், கத்தோலிக்க-சார்பானவராகவும், ஒரு முழுமையான அதிகாரம் கொண்ட ஆட்சியாளராக சந்தேகக் கண்ணோடு நோக்கினர்.[5] இரண்டாம் யேம்சு தனது வாரிசாகக் கத்தோலிக்கரான இளவரசர் யேம்சு பிரான்சிசு எட்வர்டு ஸ்டுவர்ட்டை அறிவித்ததை அடுத்து இங்கிலாந்தில் புரட்சி வெடித்தது. மன்னரின் புரட்டத்தாந்து மருமகனான மூன்றாம் வில்லியமை நெதர்லாந்தில் இருந்து படையினரைக் கொண்டு வந்து அரசனுக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபடுமாறு தூண்டினர்.[6] 1688 ஆம் ஆண்டில் இப்புரட்சி இடம்பெற்று வெற்றி பெற்றது. இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து வெளியேறினார்.[7] இங்கிலாந்து நாடாளுமன்றம் 1688 டிசம்பர் 11 இல் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என அறிவித்தது. இசுக்கொட்லாந்து நாடாளுமன்றம் 1689 ஏப்ரல் 11 இல் பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக அறிவித்தது. யேம்சின் மூத்த மகளும், புரொட்டத்தாந்து மதத்தவருமான இரண்டாம் மேரியையும், அவரது கணவர் ஒரேஞ்சின் வில்லியமும் மன்னர்களாக அறிவிக்கப்பட்டனர்.[8] இரண்டாம் யேம்சு 1689 இல் அயர்லாந்து வந்திறங்கிய போது ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தார். 1690 சூலையில் இடம்பெற்ற போரில் இவரது படையினர் தோல்வியடைந்தனர்.[9][10] இதனை அடுத்து யேம்சு பிரான்சு திரும்பினார். தனது வாழ்வின் இறுதிப் பகுதியை அவரது மைத்துனரான பிரான்சின் பதினான்காம் லூயியின் ஆதரவில் கழித்தார். யேம்சு 1701 செப்டம்பர் 16 அன்று மூளைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.[11]

இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்து நாடாளுமன்றத்துடனான முரண்பாடுகள், மற்றும் ஆங்கிலேய ரோமன் கத்தோலிக்கர்களுக்கும், புரட்டத்தாந்து எதிர்ப்பாளிகளுக்கும் சமயச் சுதந்திரம் கிடைக்க ஆதரவளித்தமை போன்றவற்றுக்காக பெரிதும் அறியப்பட்டார்.

குறிப்புகள்

தொகு
  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; death என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "No. 2009". இலண்டன் கசெட். 16 February 1684.
  3. Miller, 1
  4. Miller, 118–119
  5. Harris, 260–262; Prall, 312
  6. Ashley, 201–202
  7. Miller, 205–209
  8. Ashley, 206–209; Harris, 329–348
  9. Fitzpatrick, Brendan, New Gill History of Ireland 3: Seventeenth-Century Ireland – The War of Religions(Dublin, 1988), page 253 | isbn=0-7171-1626-3
  10. Szechi, Daniel (1994). The Jacobites, Britain and Europe, 1688–1788. 48: Manchester University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7190-3774-3.{{cite book}}: CS1 maint: location (link)
  11. Miller, 240

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு