அயர்லாந்து இராச்சியம்

அயர்லாந்து இராச்சியம் (Kingdom of Ireland, ஐரிஷ்: Ríoghacht Éireann 1542க்கும் 1800க்கும் இடைபட்ட காலத்தில் அயர்லாந்தில் நிறுவப்பட்ட இராச்சியத்தைக் குறிக்கும். இது ஹென்றி VIIIயால் 1542இல் நாடாளுமன்ற சட்டமொன்றினால் (அயர்லாந்து முடியாட்சி சட்டம் 1542) உருவாக்கப்பட்ட இராச்சியமாகும். ஹென்றி VIII அயர்லாந்தின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். முன்னதாக 1171 முதல் இப்பகுதி இங்கிலாந்தினால் குடிமைபடுத்தப்பட்டு அயர்லாந்து பிரபுவினால் ஆளப்பட்டு வந்தது. ஹென்றியின் முடியாட்சியை ஐரோப்பாவின் சில சீர்திருத்த கிறித்தவ நாடுகள் அங்கீகரித்தபோதும் கத்தோலிக்க முடியாட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் ஹென்றியின் மகள் மேரியை அயர்லாந்தின் அரசியாக 1555இல் திருத்தந்தை ஏற்றுக் கொண்டார். அயர்லாந்தின் இத்தனி இராச்சியம் 1800இல் பெரிய பிரித்தானிய இராச்சியத்துடன் இணைந்ததுடன் முடிவுற்றது.

அயர்லாந்து இராச்சியம்
Ríocht na hÉireann
1541 – 1651
1659 – 1801
கொடி of அயர்லாந்து
கொடி
Coat of arms2 of அயர்லாந்து
Coat of arms2
தலைநகரம்டப்ளின்
பேசப்படும் மொழிகள்ஐரிய மொழி, ஆங்கிலம்
அரசாங்கம்முடியாட்சி
அரசர்3 
• 1542-1547
ஹென்றி VIII
• 1760-1801
ஜார்ஜ் III
தலைமைச் செயலாளர் 
• 1660
மாத்யூ லாக்
• 1798-1801
வைகவுன்ட் காசில்ரீ
சட்டமன்றம்அயர்லாந்து நாடாளுமன்றம்
ஐரிய பிரபுக்கள் அவை
ஐரிய மக்களவை
வரலாறு 
• நாடாளுமன்ற சட்டம்
1541
சனவரி 1 1801
ஐ.எசு.ஓ 3166 குறியீடுIE
முந்தையது
பின்னையது
அயர்லாந்து பிரபு
காலிக் அயர்லாந்து
அயர்லாந்து கூட்டமைப்பு
இங்கிலாந்தின் பொதுநலவாயம், இசுக்காட்லாந்து மற்றும் அயர்லாந்து
பெரிய பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயர்லாந்து_இராச்சியம்&oldid=3525941" இலிருந்து மீள்விக்கப்பட்டது