ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்

மூன்றாம் ஜார்ஜ் (George William Frederick, 4 சூன் 1738[கு 3] – 29 சனவரி 1820) பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசராக 25 அக்டோபர் 1760 இலிருந்து இரு நாடுகளும் ஒன்றாக ஆன சனவரி 1, 1801 வரை இருந்தவர் ஆவார். இதற்குப் பிறகு இவரே ஐக்கிய இராச்சியத்தின் அரசராகத் தனது இறப்பு வரையிலும் தொடர்ந்தார். 12 அக்டோபர் 1814 அன்று அனோவர் மன்னராக ஆவதற்கு முன்பே அவர் புனித உரோம சாம்ராஜ்யத்தின் பிரன்சுவிக்-லுன்பர்க் வம்சத்தின், ஆட்சியாளராகவும், இளவரசராகவும் இருந்தார். அவர் அனோவர் வம்சத்தின் பிரித்தானிய அரச மரபில் மூன்றாவது மன்னர் ஆவார். ஆனால், அவரது இரண்டு முன்னோடிகளைப் போலல்லாமல், அவர் இங்கிலாந்தில் பிறந்தவராகவும், ஆங்கிலத்தைத் தனது முதல் மொழியாகக் கொண்டவராகவும், முன்னெப்போதும் அனோவருக்குச் சென்றிருக்காதவராகவும் இருந்தார்.[1][2]

மூன்றாம் ஜார்ஜ்
George III
அலன் ராம்சியினால் வரையப்பட்ட மூன்றாம் ஜார்ஜின் முடிசூட்டு விழா ஓவியம் (1762)
ஆட்சிக்காலம்25 அக்டோபர் 1760 –
29 சனவரி 1820
Coronation22 செப்டம்பர் 1761
முன்னையவர்இரண்டாம் ஜார்ஜ்
பின்னையவர்நான்காம் ஜார்ஜ்
பிறப்பு4 சூன் 1738
நோர்போக் மாளிகை, இலண்டன்
இறப்பு29 சனவரி 1820(1820-01-29) (அகவை 81)
வின்சர் அரண்மனை, பெர்க்சயர்
புதைத்த இடம்16 பெப்ரவரி 1820
புனித ஜார்ஜ் தேவாலயம், வின்சர் அரண்மனை
துணைவர்
சார்லொட்
(தி. 1761; இற. 1818)
குழந்தைகளின்
பெயர்கள்
  • நான்காம் ஜார்ஜ்
  • இளவரசர் பிரெடரிக்
  • நான்காம் வில்லியம்
  • இளவரசி சார்லொட்
  • இளவரசர் எட்வர்டு
  • இளவரசி அகுஸ்தா சோபியா
  • இளவரசி எலிசபெத்
  • எர்னஸ்டு அகஸ்து
  • இளவரசர் அகுஸ்தசு பிரெடரிக்
  • இளவரசர் அடோல்ப்
  • இளவரசி மேரி
  • இளவரசி சோபியா
  • இளவரசர் ஒக்டாவியசு
  • இளவரசர் அல்பிரடு
  • இளவரசி அமேலியா
பெயர்கள்
ஜார்ஜ் வில்லியம் பிரெடெரிக்
மரபுஅனோவர் மாளிகை
தந்தைபிரெடரிக், வேல்சு இளவரசர்
தாய்இளவரசி அகுஸ்தா
மதம்சீர்திருத்தத் திருச்சபை
கையொப்பம்மூன்றாம் ஜார்ஜ் George III's signature

அவரது வாழ்க்கை மற்றும் ஆட்சி ஆகியவை அவருடைய முன்னோடிகளை விடவும் நீண்டகாலத்தைக் கொண்டதாகவும் இருந்தது. மேலும், இவரது ஆட்சியானது, தொடர்ச்சியாக இவருடைய ஆளுமைக்குட்பட்ட இராச்சியங்களுக்கும் ஐரோப்பாவின் இதர பகுதிகளுக்கும், ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் தொலைவிலுள்ள இடங்களுடனான இராணுவ மோதல்களால் நிரம்பியவையாக இருந்தது. இவரது ஆட்சியின் தொடக்க காலத்தில் பிரிட்டன் பிரான்சை [ஏழாண்டுப் போர்|ஏழாண்டுப்போரில்]] தோற்கடித்து, ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பிய சக்தியாக வட அமெரிக்கா மற்றும் இந்தியாவில் தன்னைக் காட்டிக் கொண்டது. இருந்தபோதிலும், பிரிட்டனின் அமெரிக்க காலனிகளில் பெரும்பாலானவை அமெரிக்கப் புரட்சிப் போரின் முடிவில் இழக்கப்பட்டன. மேலும், பிரெஞ்சுப் புரட்சியின் போது 1793 ஆம் ஆண்டு முதலாக இருந்து வந்த முதலாம் பிரஞ்சு பேரரசு 1815 ஆம் ஆண்டு நடைபெற்ற வாட்டர்லூ போரில் முதலாம் நெப்போலியனின் தோல்வியால் முடிவுக்கு வந்தது.

இவருடைய பிற்கால வாழ்க்கையில், மூன்றாம் ஜார்ஜ் மீண்டும் மீண்டும் வரக்கூடிய, நிரந்தரமான விளைவாக உளப் பிறழ்ச்சியால் பாதிக்கப்பட்டார். இவர் இரத்தம் தொடர்பான போர்பைரியா என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவரது உடல்நலக்குறைவிற்கான காரணம் அறியப்படாததாகவே உள்ளது. இறுதியாக 1810 ஆம் ஆண்டில், மீண்டும் சீர்கேடடையத் தொடங்கிய போது, மூன்றாம் ஜார்ஜின் மூத்த மகன் நான்காம் ஜார்ஜ் (வேல்சின் இளவரசன்) இளவரசாக இருந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரு கால அமைவு தொடங்கப்பட்டது. மூன்றாம் ஜார்ஜின் மறைவிற்குப் பின் ஆட்சிப்பொறுப்பில் இருந்த இளவரசர் நான்காம் ஜார்ஜாக அரசாட்சியைத் தொடர்ந்தார்.ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் பற்றிய தகவல்கள் வரலாற்று ஆய்வாளர்களின் பார்வையில் அவரவருக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்பைடயிலும், தாங்களாகவே கொண்ட தப்பெண்ணங்களின் வாயிலாகவும் ஒரு கலைடாஸ்கோப்பின் வழியே மாறி,மாறித் தெரியும் பிம்பங்களைப் போன்று அமைந்துள்ளன.[3] இருபதாம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் மறுமதிப்பீடு செய்யப்படும் வரை, அமெரிக்காவைப் பொறுத்தவரை இவர் ஒரு கொடுங்கோலனாகவும், பிரித்தானியாவைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியத்தின் தோல்விக்கான பலிகடாவாகவும் கருதப்பட்டு வந்தார்.[4]

தொடக்க கால வாழ்க்கை

தொகு
 
ஜார்ஜ் (வலது) தனது சகோதரர் யார்க் மற்றும் அல்பேனியின் இளவரசர் எட்வர்டுடன்), மற்றும் அவரது ஆசான்,பிற்காலத்தில் பிரிஸ்டால் கதீட்ரலின் முதல்வர் பிரான்சிஸ் அய்ஸ்காப், c. 1749

ஜார்ஜ் இலண்டனில் புனித ஜேம்ஸ் சதுக்கத்தில் உள்ள நார்ஃபோல்க் இல்லத்தில் பிறந்தார். பெரிய பிரித்தானியாவின் ஜார்ஜ் II இன் பேரனும், வேல்சின் இளவரசர் பிரெட்ரிக் மற்றும் சாக்சே-கோதாவின் இளவரசி அகஸ்டா ஆகியோரின் மூத்த மகனும் ஆவார். இளவரசர் ஜார்ஜ் இரண்டு மாதம் முன்னதாக, குறைப்பிரசவக் குழந்தையாகப் பிறந்ததால், பிழைத்து இருக்க மாட்டார் எனக் கருதப்பட்டார். அவர் பிறந்த அதே நாளில் பிக்காடில்லி, புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் தலைவர் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டின் ஆயர் தாமஸ் செக்கரால் ஞான முழுக்காட்டப்பட்டார்.[5] ஒரு மாதம் கழிந்த பிறகு, செக்கரால் பொதுவில் நார்ஃபோல்க் இல்லத்தில் முழுக்காட்டப்பட்டார்.

குறிப்புகள்

தொகு
  1. ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக 1801 சனவரி 1 இல் இருந்து
  2. அனோவரின் மன்னராக 1814 அக்டோபர் 12 முதல்.
  3. பழைய நாள்காட்டியில் மே 24, 1752 வரை பெரிய பிரித்தானியாவில் பயன்பாட்டில் இருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "George III". Official website of the British monarchy. Royal Household. பார்க்கப்பட்ட நாள் 18 April 2016.
  2. Brooke, p. 314; Fraser, p. 277
  3. Butterfield, p. 9
  4. Brooke, p. 269
  5. Hibbert, p. 8