கிறித்தியன் மேயர்
கிறித்தியன் மேயர் (Christian Mayer) (ஆகத்து 20, 1719 - ஏப்பிரல் 16, 1783) ஒரு செக் வானியலாளரும் ஆசிரியரும் ஆவார்.
வாழ்க்கை
தொகுஇவர் மொரோவியாவில் உள்ள மோத்ரிசுவில் பிறந்தார். இவர் கிரீக், இலத்தீன் மொழிகளும் கணிதவியலும் மெய்யியலும் இறையியலும் கற்றார். ஆனால் இவர் கல்விகற்ற இடம் தெரியவில்லை. இவர் 20 களில் இயேசுநெறியினராக முடிவு செய்தார். இதற்கு இவரது தந்தையார் ஒப்புக்கொள்ளாமல் போகவே தன் வீட்டை விட்டு விலக வைத்தது. இவர் 1745 இல் மேன்கீமில் இருந்த இயேசு சமூகத்தில் சேர்ந்தார். அங்குத் தன் பயிற்சியை முடித்ததும் வாழ்வியல் பாடங்களில் கல்வி கற்பிக்கலானார்.
இவர் 1752 அளவில் மிகவும் பெயர்பெற்றதால் ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தில் வானியல், இயற்பியல் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்குள் இவர் வானியலில் தணியாத ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். எனவே இவர் மென்கீமின் அரசவை வானியலாளராகவும் அமர்த்தப்பட்டார். புதிய வான்காணகங்களான மென்கீம், சுசிவெட்சிங்கன் ஆகியவற்றுக்குக் கருவிகளைத் தேர்வு செய்யும் பணி இவரிடம் தரப்பட்டது. இப்பணிகள் முடிவுற்றதும் இவர் வானியல் ஆய்வுகளில் ஈடுபட்டு, பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். இவர் 1769 இல் வெள்ளிக் கடப்பை நோக்கிட, புனித பீட்டர்சுபர்குக்கு அழைக்கப்பட்டார். இப்பணியை இவர் ஆண்டர்சு இலெக்செல் அவர்களுடன் இணைந்து செய்து முடித்தார். இவர் 1773 இல் இயேசு சமூக ஆணை பதினாறாம் போப் கிளெமண்ட்டால் நீக்கப்பட்டதால், அரசவை வானியலாளர் பதவியில் இருந்து விலகினார். என்றாலும் தன் வானியல் நோக்கீடுகளையும்ஆய்வுகளையும் கைவிடாமல் தொடர்ந்தார். இவர் 1765 இல் அரசு கழக ஆய்வு நல்கைக்கு விண்னப்பித்துப் பெற்றார்.[1]
இவர் இரும விண்மீன்களின் முன்னோடி ஆய்வுக்காகப் பெயர்பெற்றார். ஆனால் இவரது கருவிகள் உண்மையான இரும விண்மீன்களையும் தற்செயலான தோற்றநிலை விண்மீன்களையும் பிரித்தறிய வல்லனவாக இல்லை. இவர் 1777-78 இல் 80 இரட்டை விண்மீன்களின் அட்டவணையைத் தொகுத்தார். மேலும் இதை 1781 இல் வெளியிட்டார்.
தன் வாழ்நாளில் பின்வரும் பல கல்விக்கழகங்களில் உறுப்பினரானார். இவர் ஐடெல்பர்கில் இறந்தார்.
- Pantometrum Pacechianum, seu instrumentum novum pro elicienda ex una statione distantia loci inaccessi, 1762, மேன்கீம்.
- Basis Palatina, 1763, மேன்கீம்.
- Expositio de transitu Veneris, 1769, புனித பீட்டர்சுபர்கு.
- Nouvelle méthode pour lever en peu de temps et à peu de frais une carte générale et exacte de toute la Russie, 1770, புனித பீட்டர்சுபர்கு.
- Gründliche Vertheidigung neuer Beobachtungen von Fixsterntrabanten welche zu Mannheim auf der kurfürstl. Sternwarte endecket worden sind, 1778, மேன்கீம்.
- De novis in coelo sidereo phaenomenis in miris stellarum fixarum comitibus, 1779, மேன்கீம்
நூல்தொகை
தொகு- Alexander Moutchnik, Forschung und Lehre in der zweiten Hälfte des 18. Jahrhunderts. Der Naturwissenschaftler und Universitätsprofessor Christian Mayer SJ (1719–1783) (Algorismus, Studien zur Geschichte der Mathematik und der Naturwissenschaften, Bd. 54), Erwin Rauner Verlag, Augsburg, 523 Seiten mit 8 Tafeln, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-936905-16-9 http://www.erwin-rauner.de/algor/ign_publ.htm#H54 [Scientific Research and University Teaching in the 2nd half of the 18th century. Natural Scientist and University Professor Christian Mayer SJ (1719–1783)] Inhaltsverzeichnis: http://www.ulb.tu-darmstadt.de/tocs/178692786.pdf
தகைமைகள்
தொகு- நிலாவின் சி. மேயர் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Library and Archive". Royal Society. Archived from the original on 22 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 2 October 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- "Christian Mayer". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- Christian Mayer's Catalogue of Double Stars
- Christian Mayers Catalog of 1781, a commentated new edition of Mayers catalog