இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948


ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலக எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948 என்பது 1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்றதும், அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். இது 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது புதிதாக விடுதலை பெற்ற நாடொன்றிற்குத் தேவையான ஒரு நடவடிக்கையாகவே தோன்றினாலும் சிங்களத் தேசிய வாதிகள் இந்தச் சட்டத்தின் மூலம் இன்னொரு நோக்கத்தையும் நிறைவேற்றினார்கள். அதாவது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில், இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்டுக் குடியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்குவதில் அவர்கள் வெற்றிபெற்றார்கள். நாடு விடுதலை பெற்றதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றுவந்த இன முரண்பாடுகளின் தொடக்க வெளிப்பாடுகளில் ஒன்றாக இந்தச் சட்டம் அமைந்தது எனலாம். இச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இடதுசாரிக் கட்சியினரும் எதிர்த்தனர்.[1][2][3]

இலங்கைக் குடியுரிமைச் சட்ட அம்சங்கள்

தொகு

1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க இலங்கைக் குடியுரிமைச் சட்டம் இரண்டு விதமான இலங்கைக் குடியுரிமைகளை வரையறுக்கிறது. இவை:

  1. வம்சாவழிக் குடியுரிமை
  2. பதிவுக் குடியுரிமை

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Statelessness in Sri Lanka". UNHCR in Sri Lanka. Archived from the original on 23 October 2009. Retrieved 20 June 2009.
  2. Apparthuray Vinayagamoorthy (8 November 2003). "103rd Birth Anniversary today : G. G. Ponnambalam - Founder of ACTC". Daily News, Sri Lanka. Archived from the original on 4 June 2011. Retrieved 20 June 2009.
  3. Ethnic Conflict of Sri Lanka: Time Line - From Independence to 1999 பரணிடப்பட்டது 2009-12-12 at the வந்தவழி இயந்திரம், International Centre for Ethnic Studies