இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்


ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலக எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலக்கத் தகடு அற்ற வாகனங்களில் (வெள்ளைவான் குழு) வரும் இனம் தெரியாத குழுக்களினால் பலவந்தமாக இந்த வாகனங்களுக்கு ஏற்றப் படும் நபர்கள் பின் காணாமல் போகின்றனர். கடந்த இரு வருடங்களில் இலங்கையில் பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயுள்ளார்கள். உலகில் இலங்கையிலேயே அதிகமானோர் காணாமல் போவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.[2][தொடர்பிழந்த இணைப்பு] காணாமல் போவதற்கு அரசே காரணம் என பல காணாமல் போனவர்களின் உறவினர்களும் சாட்சியங்களும் கூறிய போதும் அரசு எந்தவித பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், இத்தகைய குற்றசெயற்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையங்கள் சரிவர தமது வேலையை செய்யவில்லை என்று அதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு பயணம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் அதிகாரி இலங்கையில் இடம்பெறும் இத்தகைய குற்றச்செயல்களை ஆவணப்படுத்தி ஒர் அறிக்கை சமர்பித்துள்ளார்.

வெள்ளைவான் குழு

தொகு

வெள்ளை வான் படுகொலைகள் அல்லது கடத்தல்கள் என்பது இலங்கையில் வெள்ளை வான் வாகனம் ஒன்றில் வந்து நபர்களை கடத்திச் சென்று படுகொலை செய்தல் அல்லது காணாமல் போகச் செய்தல் ஆகும். ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் எனப் பல தரப்பட்டோர் இவ்வாறு படுகொலை செய்யப்படுகிறார்கள், அல்லது காணாமல் போகிறார்கள். இவ்வாறு கொல்லப்படுபவர்கள், அல்லது காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவார். இதுவரை இலங்கைக் காவல்துறை யாரையும் இக் குற்றங்களுக்காக கைது செய்யவில்லை.

வெள்ளைவான் குழு இலங்கை இராணுவத்தின் இரகசியப் பிரிவாகும். இது பெரும்பாலும் தமிழர்களைப் பொதுவாக வர்த்தகர்களையும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களையும் கடத்தி கப்பம் வாங்குவதற்கும் படுகொலைகளைப் புரிதல் போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பிரிவாகும். இவ்வகை வாகனங்களிற்கு இலக்கத் தகடுகள் ஏதும் கிடையாது. இப்பிரிவில் இருந்து தப்புவதற்கு பெரும்பாலும் வீதி வளைவுகளில் அவதானமாக இருத்தல் வேண்டும். யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் இவர்களின் செயற்பாடு கூடுதலாக உள்ளது[1]. திருகோணமலையில் இவர்களின் செயற்பாடு அவதானிக்கப்பட்டபோதும் தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகளைப் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து கிடைத்ததால் பின்னர் திருகோணமலையில் செயற்பாடுகளை இடைநிறுத்தி விட்டனர். கொழும்பிலும் இவர்களது செயற்பாடு காணக் கிடைக்கின்றது. கொழும்பில் பொதுவாக இரவு நேரத்தில் தமிழர்களின் வீடுகளிற்குச் சென்று கடத்தி வருகின்றனர். கொழும்புத் தமிழர்கள் இரவு நேரத்தில் அநாவசியமாகக் கதவுகளை அறிமுகம் இல்லாத ஆண்களிடம் திறக்கக் கூடாது எனும் பயம் நிலவுகிறது.

இந்த வெள்ளைவான் குழு பல்வேறு காரணங்களுக்காக சில சிங்களவர்களையும் கடத்திச் சென்றுள்ளது. இக்குழுவால் கடத்திச் செல்பவர்கள் பெரும்பாலும் திரும்பிவருவதில்லை. இக்குழுவின் செயல்கள் பற்றி இலங்கை இராணுவம் கூறுகையில் இது ரணில் விக்கிரமசிங்கேயின் தூண்டுதலின் பேரில் நடக்கிறது என்பது போன்ற பரப்புரைகளை மேற்கொண்டுவருகிறது[2]. இலங்கையில் பல்வேறு அரசியல்வாதிகளும் தங்களுக்கு வெள்ளைவான் குழுவினால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியுள்ளனர்[3]. இக்குழுக்களின் செயல்கள் பற்றி பல்வேறு சர்வதேச ஊடங்களில் செய்திகள் வந்திருக்கின்றன[4]

 
வெள்ளை வேன் குழுவிற்கு தங்களின் மகளை பறிகொடுத்த தாய்

புள்ளி விபரங்கள்

தொகு

1996 ஐநா அறிக்கை ஒன்றின் படி 1980-96 காலப்பகுதியில் இலங்கையில் 11,513 பேர் காணமல் போய் உள்ளனர். இது உலகில் ஈராக்குக்கு அடுத்தபடியான இரண்டாம் நிலை ஆகும்[5]. 1999 ஆசிய மனிதவுரிமை ஆணையத்தின் அறிக்கை ஒன்றின் படி, அப்போது 16,742 எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத வழக்குகள் இருந்தன[6]. அதன் பிறகு நடத்தப்பட்ட ஆள்கடத்தல்களும் காணாமல் போதல்களும் இந்த எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரித்திருக்கும் இவ்வாறு கடத்தப்படுவர்களின் பெரும்பான்மையானோர் இலங்கைத் தமிழர்கள் ஆவர்.

யார் செய்கிறார்கள்?

தொகு

இதனை யார் செய்கின்றார்கள் என்பது தொடர்பில் வெவ்வேறு கருத்துகள் உள்ளப் போதும், இவை அநேகமாக அரசப் பகுதிகளில் நடைபெறுவதால் அரசே இதனை ஆயுததாரிகளை வைத்து செய்விப்பதான கருத்துகள் நிலவுகின்றன. அரசு இதனைச் செய்யவில்லை என்றால் சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய ஒரு அரசுக்கே இதனை தடுத்து நிறுத்த வேண்டியப் பொறுப்பு இருக்கின்றது என்ற விமர்சனங்களும் எழுந்தவண்ணம் உள்ளன. இலங்கையில் பரவலாக இடம்பெறும் மனிதவுரிமைக்கு எதிரான ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு என சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது[7]. ஆசிய மனிதவுரிமை ஆனையம் போன்ற அமைப்புகள் 1980 இலிருந்து தொடரும் ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுக்கு இலங்கை அரசத் துணை ஆயுதக் குழுக்களும் அரச துணைப் படைகளுமே பொறுப்பு எனவும் கூறி வருகின்றது.[8]

அனைத்துலகச் சட்டத்தின் படி

தொகு

அனைத்துலகச் சட்டத்தின் கீழ் ஒரு நபரை கைது செய்து அவரது கைதை மறுக்கும் போதும், அவர் வைக்கப்பட்டுள்ள இடத்தை மறைக்கும் போதும் பலவந்தமான காணாமல் போதல் இடம் பெறுகின்றது. காணாமல் போதலானது பொதுவாக சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலையை மேற்கொள்வதற்காகவே இடம் பெறுகின்றது.

காணாமல் போனோர் தொடர்பில்

தொகு

இலங்கையில் பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெறுகின்றன. பெரும்பாலான சம்பவங்களில் இராணுவம் கடற்படை காவல்துறை ஆகியவற்றின் பங்குபற்றுதல் இருப்பது புலனாகியுள்ளது.

இதில் சில சம்பவங்களில் சிறப்பு இராணுவ பிரிவினராலேயே குறிப்பிட்ட நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சில வேளைகளில் சீருடை அணிந்த காவல்துறையினரும் குற்ற புலனாய்வுப் பிரிவு பொலிஸாரே குறித்த நபர்களை அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது[9].

ஆட்கடத்தல் தொடர்பான புகார்கள்

தொகு

ஆள்கடத்தல்கள் தொடர்பாக முழுமையான விபரங்கள் சேகரிப்பது கடுமையானது. ஆள்கடத்தல்களை அரசு, அரசுடன் இணைந்து இயங்கும் அமைப்புகள், அல்லது பயங்கரவாத அமைப்புகள் மேற்கொள்வதாக பயம் நிகழ்வதால் இது தொடர்பான வழக்குகள் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன.

2008 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் கண்காணிப்புக் குழுவிற்கு 265 புகார்கள் கிடைத்துள்ளன. இவற்றில் சுமார் 77 பேர் விடுவிக்கப்பட்டதுடன், கடத்தப்பட்டவர்களில் இம்சிக்கப்பட்டு தூர இடங்களில் கண்கள், கட்டப்பட்டு வீதிகளில் இறக்கி விடப்பட்டுள்ளார்கள்.

மேலும் 21 பேர் கடத்தப்பட்டு தற்போது பூசா முகாமிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலும் இரகசியப் புலன் விசாரணைப் பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏனைய 165 பேர் தொடர்பாகத் தகவல் அறிய முடியாமல் உள்ளது.

2008 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற மொத்த கடத்தல் புகார்கள் 265இல், 2006 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட 9 பேரின் புகார்களும் 2007 இல் கடத்தப்பட்ட 25 பேரின் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் 2008ஆம் ஆண்டிலேயே குழுவிடம் காணாமல் போனது தொடர்பாக புகார்களை செய்துள்ளனர்[10].

குறிப்பிட்ட நிகழ்வுகள்

தொகு
  • ஆசிய மனிதவுரிமை ஆணையம் இரண்டு நபர்கள் காணாமல் போனது தொடர்பானத் தகவலைப் பெற்றுள்ளது. இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் ஒருவர் 2008 பெப்ரவரி மாதமும் மற்றவர் மே மாதமும் காணாமல் போயுள்ளனர். அதில் ஒருவர் மாணவர். இந்த மாணவரை கடத்திச் செல்லப்பட்டதனை விவரிக்கையில் அந்த வாகனத்தினுள் (வெள்ளை வேன்) இருந்தவர்கள் இலங்கை பொலிஸார் என்பது தெரியவந்துள்ளது[11].
  • ஆசிய மனிதவுரிமை ஆணையம் வனத்தவில்வ எனும் இடத்தில் நான்கு பொலிஸார் ஒரு விவசாயியை 2008 பெப்ரவரி 28 ம் நாள் அழைத்து சென்றதாகவும் பின் குறிப்பிட்ட நபர் தொடர்பான எந்த தகவலும் இல்லை எனும் முறைப்பாடு கிடைத்துள்ளதாகக் கூறுகின்றது[12].
  • ஆசிய மனிதவுரிமை ஆணையத்தால் விடப்பட்ட மற்றுமோர் அவசர அறிக்கையின் படி காணாமல் போனோர் மற்றும் கொல்லப் பட்டோர் தொடர்பான புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புகார்கள் தொடர்பில் பெயர், பால், பாதிப்புக்குற்பட்டவரின் முகவரி, வயது, நிகழ்ந்த நாள், மாவட்டம் மற்றும் முழு விபரங்களுடன் ஆசிய மனிதவுரிமை ஆணையம் இலங்கை அரசிடம் முறைப்பாடு செய்துள்ளது. அதில் மேலும் பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரதும் ஆயுத து்ணைக் குழுவினரதும் அச்சுறுத்தல்கள் மற்றும் பயத்தின் மத்தியில் பாதிப்புக்குற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[13].
  • இரண்டு வாகனங்களில் வந்த இனம் தெரியாதோர் குழுவினர் ஊடகவியலாளர் ஒருவரை கடத்தும் முயற்சியில் ஈடுப்பட்டு அயலவர்களின் குறுக்கீட்டால் அம் முயற்சி கைவிடப்பட்டது என்ற ஒரு முறைப்பாடும் ஆசிய மனிதவுரிமை ஆணையத்திடம் கிடைக்கப்பட்டுள்ளதை வெளியிட்டுள்ளது.[14]

மனிதவுரிமை பணியாளர்கள் காணாமல் போதல்கள்

தொகு

இலங்கை வடக்கு கிழக்கு தமிழர் வாழ் பகுதிகளில் யுத்த அனர்த்தங்களால் பொது மக்களிற்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களும் அடிக்கடி கடத்தப்பட்டு காணாமல் போவதும் கொலைச்செய்யப்படுவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. தமிழர் புணர்வாழ்வுக் கழக பணியாளர்கள் மற்றும் மனிதவுரிமை பணியாளர்கள் 57 பேர் கடத்தப் பட்டு கொலைச்செய்யப்பட்டுள்ளோர் விபரத்தையும் ஆசிய மனிதவுரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது. [16] இவர்கள் அணைவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு

தொகு

ஆசிய மனிதவுரிமை ஆணையம் வெளியிட்டுள்ள இன்னும் பல ஆட் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் விபரங்களை ஆசிய மனிதவுரிமை ஆணைய அதிகார பூர்வத் தளத்தில் பார்வையிடலாம்.

இலங்கை அரசின் அறிவித்தலைத் தொடர்ந்து தற்போதைய சூழ்நிலையில் மனிதவுரிமை அமைப்புகள் தமிழர் வாழ் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போவோர் எண்ணிக்கை இதைவிடப் பலமடங்காக இருக்கும் என அஞ்சப்படுகின்றது.

இவற்றையும் பாக்க

தொகு


மேற்கோள்களும் ஆதாரங்களும்

தொகு
  1. http://www.lankanewspapers.com/news/2007/4/13560.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-19. பார்க்கப்பட்ட நாள் 2009-02-11.
  3. http://www.lankanewspapers.com/news/2007/3/12952.html
  4. http://news.bbc.co.uk/2/hi/programmes/crossing_continents/7750100.stm
  5. Report of the UN Working Group on Enforced or Involuntary Disappearances [1]
  6. Disappearances in Sri Lanka: 16,742 Cases Established, No Action Yet
  7. கடத்தல், காணாமல் போதல் சம்பவங்களுக்கு அரசே பொறுப்பு-ஹியுமன் ரைட்ஸ்[தொடர்பிழந்த இணைப்பு]
  8. வெள்ளை வான் கடத்தல்களில் கோத்தபாய ராஜபக்ஷவின் பங்கு(?); என்.வித்தியாதரன் சாட்சியமளிக்கிறார்![தொடர்பிழந்த இணைப்பு]
  9. இராணுவ பிரிவினராலேயே குறிப்பிட்ட நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக[தொடர்பிழந்த இணைப்பு]
  10. கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் குழுவின் கூட்டம்
  11. Two persons disappear in separate incidents - ASIAN HUMAN RIGHTS COMMISSION
  12. Whereabouts of a man is unknown after arbitrary arrest - ASIAN HUMAN RIGHTS COMMISSION
  13. citizens who have been affected and who live in fear of threats either by the Sri Lankan Army or by paramilitary groups
  14. Police allegedly attempt to abduct a journalist
  15. Two "white van" abductions within a few hours in Colombo
  16. Killing and disappearance of 57 humanitarian workers reported

வெளியிணைப்புகள்

தொகு