இலங்கையில் அரச சித்திரவதை
இலங்கை அரசு சித்திரவதையைப் பயன்படுத்துவதாக ஐநாடுகள் சபை உட்பட பல மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.[1] காவல்துறை, படைத்துறை ஆகிய இரண்டும் சித்திரவதையைப் பயன்படுத்துகின்றன. ஆசிய மனித உரிமைகள் மையத்தின் அறிக்கை (Torture and Lawless Law Enforcement in Sri Lanka) சித்திரவதை இலங்கைச் சட்டத்தின் அடிப்படை நிறுவனப்படுத்தப்பட்ட ஓர் அங்கம் என்று கூறுகிறது[2].
நான்காம் மாடி விசாரணை தொகு
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தீவிரவாத விசாரணைப் பிரிவு (TID – Terrorism Investigation Division) நடத்தும் விசாரணை, நான்காம் மாடி விசாரணை என ஊடகங்களால் குறிப்பிடப்படுகிறது[3].
கொழும்பு நகரில் குற்றவியல் விசாரணைத் துறையின் கட்டடம் அமைந்துள்ளது. இங்கு மூன்றாவது மாடியில் குற்றவியல் விசாரணைப் பிரிவும் (CID - Criminal Investigation Department), நான்காவது மாடியில் தீவிரவாத விசாரணைப் பிரிவும் செயல்படுகின்றன.
தீவிரவாத விசாரணைப் பிரிவுக்கு எதிரான போராட்டங்கள் தொகு
- எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படாமல், பாலேந்திரன் ஜெயகுமாரி எனும் பெண்மணியை ஏறத்தாழ 200 நாட்களுக்கு தனது விசாரணைப் பிடியில் இப்பிரிவு வைத்திருந்தது. இதனைக் கண்டித்து சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் இணைந்து போராட்டம் ஒன்றினை 2014, செப்டம்பர் 30 அன்று நடத்தினர்[4].
உசாத்துணை தொகு
- பக்கம் எண்கள்: 27 - 31, முள்வலி எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, நவம்பர் 2010; வெளியீடு: விகடன் பிரசுரம், சென்னை - 2.)
- சித்திரவதை - (ஆங்கில மொழியில்)
மேற்கோள்கள் தொகு
- ↑ UN human rights expert reports allegations of torture in Sri Lanka
- ↑ "Torture and Lawless Law Enforcement in Sri Lanka" இம் மூலத்தில் இருந்து 2009-02-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090208172733/http://achrweb.org/Review/2005/99-05.htm.
- ↑ "'I cried every day': inside Sri Lanka's 'No Fire Zones'". channel4. 26 மார்ச் 2014. http://www.channel4.com/news/sri-lanka-war-crimes-inquiry-doctor-varatharajah-thariajah. பார்த்த நாள்: 29 நவம்பர் 2014.
- ↑ "‘Sri Lanka’s Prevention of Terrorism Act should be repealed’". தி இந்து. 30 செப்டம்பர் 2014. http://www.thehindu.com/news/international/south-asia/sri-lankas-prevention-of-terrorism-act-should-be-repealed/article6459779.ece. பார்த்த நாள்: 29 நவம்பர் 2014.