இலங்கை அரசின் சிங்களப் பேரினவாதம்
ஒன்றிணைக்கப்பட்ட இலங்கை பிரித்தானியவிடம் இருந்து 1948 ஆட்சிப் பொறுப்பை பெற்றுக்கொண்டது. இலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மையினர். சிங்களவர்களின் ஆதரவைப் பெற்று இலங்கை அரசுகள் ஆட்சி அமைத்தன. இவ்வாறு ஆட்சி அமைத்த சிங்களப் பெரும்பான்மை அரசுகள் சிறுபான்மையினரான தமிழர்களையும் முஸ்லீம்களையும் புறக்கணித்து தாழ்தி விரட்டும் வண்ணம் பல சட்டங்களை கொண்டு வந்தார்கள். இவ்வாறு சிறுபான்மையினரை பாதித்து சிங்களப் பெரும்பான்மையினர் சார்பு அரசுகளால் கொண்டுவரப்பட்ட சட்டங்களும் நடைமுறைகளும் இலங்கை அரசின் சிங்களப் பேரினவாதம் எனப்படும்.
பேரினவாத சட்டங்கள்தொகு
- இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948
- தனிச் சிங்களச் சட்டம்
- பௌத்தம் இலங்கை சமயமாக முதன்மைப்படுத்தப்பட்டமை.
- கல்வி தரப்படுத்தல்