சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு

சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு (The International Independent Group of Eminent Persons, IIGEP) என்பது இலங்கையில் நடைபெற்ற பாரதூர மனித உரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அவதானித்து சுயாதீனமாக கருத்தும் பரிந்துரையும் தர அமைக்கப்பட்ட குழுவாகும். இந்தக் குழுவில் பன்னாட்டு மாண்புமிக்கோர் அங்கம் வகிக்கின்றனர். விசாரணைக் குழுவின் செயற்பாடுகளுக்கு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெறுவது இந்தக் குழு அமைத்ததிற்கு ஒரு முக்கிய காரணம். இந்தியாவின் ஓய்வு பெற்ற நீதிபதி பி. என். பகவதி இதன் தலைவராக பணியாற்றுகிறார்.

இந்தக் குழு மார்ச் 2008 இல் வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் அவை அனைத்துல நியமனங்களை எட்டவில்லை என்றும் தெரிவித்தது.

வெளி இணைப்புகள்

தொகு