பெருந்தோட்டம்

பெருந்தோட்டம் என்பது, தொலைதூரச் சந்தைகளுக்காகப் பயிர் செய்வதற்கு உரிய பெரிய பரப்பளவு கொண்ட தோட்டத்தைக் குறிக்கும். பெருந்தோட்டம் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு சொல் அல்ல எனினும், உள்நாட்டுப் பயன்பாட்டுக்காக அல்லாமல், ஏற்றுமதிக்கான வணிகப் பயிர்களைப் பெருமளவில் பயிர் செய்வதற்கான தோட்டங்களையே இது குறிக்கிறது.

மலேசியாவில் உள்ள ஒரு தேயிலைப் பெருந்தோட்டம்

பெருந்தோட்டங்களில் பயிரிடப்படும் பயிர்களுள், ஊசியிலை மரங்கள், பருத்தி, காப்பி, தேயிலை, புகையிலை, கரும்பு, இறப்பர் போன்றவை அடங்கும். குதிரை மசால், குளோவர்ச் செடி போன்ற தீவனப் பயிர்களைப் பயிரிடும் தோட்டங்களைப் பெருந்தோட்டங்கள் என்னும் வகைக்குள் அடக்குவது இல்லை. பெருந்தோட்டங்கள் எப்போதும் பெரும் பரப்பளவில் பயிராகும் ஒற்றைப் பயிர்களுக்கு உரியவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருந்தோட்டம்&oldid=2746294" இலிருந்து மீள்விக்கப்பட்டது