செ. மாதவன்

தமிழக முன்னாள் அமைச்சர்

செ. மாதவன் (20 ஆகத்து 1933 - 3 ஏப்ரல் 2018) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் 1933 ஆகத்து 20 அன்று செல்லையா பிள்ளை என்பவருக்கு மகனாக சிங்கம்புணரியில் பிறந்தவர்.

செ. மாதவன்
தனிநபர் தகவல்
பிறப்பு 20 ஆகத்து 1933
சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பணி அரசியல்
சமயம் இந்து

அரசியல் வாழ்க்கைதொகு

1962 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருக்கோஷ்டியூர் தொகுதியில் (தற்போது நீக்கப்பட்ட தொகுதி) திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின்னர், மாற்றியமைக்கப்பட்ட திருப்பத்தூர் தொகுதியில் 1967, மற்றும் 1971 ஆகிய ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார். இந்த மூன்று முறையும் தி.மு.க. சார்பில் அவர் போட்டியிட்டு வென்றார். அண்ணாதுரை அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும், 1967 -1976 ஆண்டுகளில் மு. கருணாநிதி அமைச்சரவைகளில் சட்டம், கூட்டுறவுத் துறை, தொழில் துறை அமைச்சராக மாதவன் பணியாற்றினார்.[1]

1982 ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அதைத்தொடர்ந்து 1984 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4][5] 1990-96ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.கவின் பொருளாளராக இருந்தார். எம்.ஜி.ஆர் இறந்தபிறகு இரண்டாக பிளவுபட்ட அ.தி.மு.கவில் ஜானகி அணியில் இணைந்தார்.[6]

1996ஆம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் மீண்டும் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு. திமுகவில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்தார்.[7]

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1962 திருக்கோஷ்டியூர் திமுக
1967 திருப்பத்தூர், சிவகங்கை திமுக
1971 திருப்பத்தூர், சிவகங்கை திமுக
1984 திருப்பத்தூர், சிவகங்கை அதிமுக

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._மாதவன்&oldid=2719955" இருந்து மீள்விக்கப்பட்டது