1191
1191 (MCXCI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1191 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1191 MCXCI |
திருவள்ளுவர் ஆண்டு | 1222 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1944 |
அர்மீனிய நாட்காட்டி | 640 ԹՎ ՈԽ |
சீன நாட்காட்டி | 3887-3888 |
எபிரேய நாட்காட்டி | 4950-4951 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1246-1247 1113-1114 4292-4293 |
இரானிய நாட்காட்டி | 569-570 |
இசுலாமிய நாட்காட்டி | 586 – 587 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1441 |
யூலியன் நாட்காட்டி | 1191 MCXCI |
கொரிய நாட்காட்டி | 3524 |
நிகழ்வுகள்
தொகுஆசியா
தொகு- சூலை 12 – மூன்றாம் சிலுவைப் போர்: ஏக்கர் நகர் மீதான இரண்டு-ஆண்டுகள் முற்றுகை முடிவுக்கு வந்தது. சலாகுத்தீனின் படைகள் சரணடைந்தன. எருசலேம் பேரரசின் கொடிகள் பறக்க விடப்பட்டன.[1]
- ஆகத்து 20 – மூன்றாம் சிலுவைப் போரின் போது கைப்பற்றப்பட்ட 2,600 முதல் 3,000 வரையான சலாகுத்தீனின் முசுலிம் இராணுவத்தினர் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- செப்டம்பர் 7 – மூன்றாம் சிலுவைப் போர்: பாலத்தீனத்தில், அர்சூப் நகரில் இடம்பெற்ற சமரில் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் சலாகுத்தீனைத் தோற்கடித்தார்.
- கெமர் பேரரசர் ஏழாம் ஜெயவர்மன் சம்பாவின் தலைநகரைச் சூறையாடினான்.
- முதல் தாரைன் போர்: ஆப்கானிய ஆக்கிரமிப்பாளரான கோரி முகமதின் படைகளுக்கும், இராசபுத்திர சௌகான் மரபைச் சேர்ந்த பிரித்திவிராச் சௌகானின் படைகளுக்கும் இடையில் நடந்த போரில் பிரித்திவிராச் வென்றார்.
ஐரோப்பா
தொகு- மே 12 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் பெரெங்காரியாவைத் திருமணம் செய்தார்.
- ஆறாம் என்றி புனித உரோமைப் பேரரசராக மூன்றாம் செலஸ்டீன் திருத்தந்தையால் முடி சூடப்பட்டார்.
- ஆகத்து – சிசிலியர்கள் பேரரசர் ஆறாம் என்றியின் முற்றுகையை முறியடித்தனர்.
அறிவியல்
தொகு- ஐரோப்பாவில் காற்றாலை பற்றிய முதல் குறிப்புகள் டீன் ஹெர்பர்ட் என்பவரால் எழுதப்பட்டது.
சமயம்
தொகு- ஏப்ரல் 14 – மூன்றாம் கிளெமெண்டிற்குப் பின்னர் மூன்றாம் செலஸ்டீன் 175-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறப்புகள்
தொகு- டொலுய், செங்கிசு கானின் மகன், குப்லாய் கானின் தந்தை (இ. 1232)
மேற்கோள்கள்
தொகு- ↑ King John by Warren. Published by University of California Press in 1961. p. 43