பிரோசாபாத்

பிரோசாபாத் (Firozabad , இந்தி: फ़ीरोज़ाबाद, உருது: فیروزآباد) இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரோசாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். இது ஆக்ராவிலிருந்து 40 கிமீ தொலைவிலும் தில்லியிலிருந்து 240 கிமீ தொலைவிலும் பிரோசாபாத் நகரம் அமைந்துள்ளது. இதன் தென் எல்லையில் யமுனை ஆறு ஓடுகிறது. வடக்கில் ஏட்டா மாவட்டமும் கிழக்கில் மைன்புரி மற்றும் எடவா மாவட்டங்களும் அமைந்துள்ளன.

பிரோசாபாத்
—  நகரம்  —
பிரோசாபாத்
இருப்பிடம்: பிரோசாபாத்

, உத்தரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 27°09′N 78°25′E / 27.15°N 78.42°E / 27.15; 78.42
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் பிரோசாபாத்
ஆளுநர் இராம் நாயக், ஆனந்திபென் படேல்
முதலமைச்சர் யோகி அதித்யாநாத்
மக்களவைத் தொகுதி பிரோசாபாத்
மக்கள் தொகை 2,78,801 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


364 மீட்டர்கள் (1,194 அடி)

குறியீடுகள்

பிரோசாபாத்தில் தயாரிக்கப்படும் கண்ணாடிப் பொருள்கள் மற்றும் வளையல்கள் மிகவும் புகழ்பெற்றவை.

மக்கள்தொகையியல்

தொகு

2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பிரோசாபாத்தின் மக்கள்தொகை 278,801 ஆகும். ஆண்கள் இதில் 53% ஆகவும் பெண்கள் 47% ஆகவும் உள்ளனர். இங்குள்ள படிப்பறிவு தேசிய சராசரியை 59.5% விட கூடுதலாக 67% ஆக உள்ளது. ஆண்களில் படிப்பறிவு உள்ளோர் 74% ஆகவும் பெண்களில் 53% ஆகவும் உள்ளது.ஆறு அகவைக்கும் குறைவானோர் மொத்த மக்கள்தொகையில் 16% ஆக உள்ளனர்.

கண்ணாடித் தொழில்

தொகு

பிரோசாபாத்தின் கண்ணாடித்தொழில் பழங்காலங்களில் மேற்காசியாவிலிருந்து படையெடுத்து வந்தவர்கள் விட்டுச் சென்ற உடைந்த கண்ணாடிப் பொருட்களை உருக்கி சிறு வளையல்களை உருவாக்குவதில் துவங்கியது. விறகு வைத்து இயக்கப்பட்ட இந்தச் எரிகலன்கள் (சூளைகள்) பைன்சன் பட்டி என அழைக்கப்பட்டன. இன்றும் இந்தப் பகுதிகளில் இத்தகைய சூளைகளில் சில காணலாம். நாளடைவில் இதில் தங்கள் கைவண்ணம் பதித்து இந்திய மணமகள் அணியும் அனைத்து வளையல்கள், கங்கணங்கள், சீக்கிய கடாக்கள் இங்கு தயாராகின்றன. இதனால் இந்த நகருக்கு மணமகளின் நகர் எனப் பொருள்படும் சுகாக் நகர் என்ற செல்லப்பெயரும் உண்டு.

1989ஆம் ஆண்டு முதல் பல வண்ணங்களில் கண்ணாடி சரவிளக்குகள், விளக்கு கூடுகள் ஆகியவற்றை தயாரிக்கத் துவங்கினர். பிரோசாபாத்தில் ஏறத்தாழ 400 கண்ணாடித் தொழிலகங்கள் பதிவு பெற்றுள்ளன. கரி,விறகுக்குப் பதிலாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. பல தொழிலகங்கள் வெளிநாட்டு ஏற்றுமதியில் கவனம் செலுத்துகின்றன. இதனால் இங்கு இதன் துணைத் தொழில்களாக வேதிப்பொருள் தொழிற்சாலைகள், பொதியல் பொருள் தயாரிப்பு தொழிலகங்கள், சேவைத்துறை நிறுவனங்கள் அமைந்துள்ளன.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரோசாபாத்&oldid=3528911" இலிருந்து மீள்விக்கப்பட்டது