ஆகத்து 8
நாள்
<< | ஆகத்து 2025 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXV |
ஆகத்து 8 (August 8) கிரிகோரியன் ஆண்டின் 220 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 221 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 145 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1503 – இசுக்காட்லாந்து மன்னர் நான்காம் யேம்சு இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றியின் மகள் மார்கரெட்டை எடின்பரோவில் திருமணம் செய்தார்.
- 1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசராக சித்தூரில் முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது.
- 1588 – இங்கிலாந்தைக் கைப்பற்றும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
- 1648 – முதலாம் இப்ராகிமுக்குப் பின்னர் உதுமானியப் பேரரசராக நான்காம் மெகுமெது முடி சூடினார்.
- 1848 – மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டான்.
- 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கெட்டிசுபெர்க்கு சண்டையில் தோல்வியடைந்த இராணுவத் தளபதி ராபர்ட் ஈ. லீ தனது பதவியைத் துறப்பதாக அமெரிக்கக் கூட்டமைப்புத் தலைவர் ஜெபர்சன் டேவிசிற்குக் கடிதம் எழுதினார். தலைவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
- 1876 – தாமசு ஆல்வா எடிசன் மிமியோகிராஃப் என்ற பதிவு செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
- 1908 – வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் "லெ மான்ஸ்" என்ற இடத்தில் மேற்கொண்டார். இதுவே ரைட் சகோதரர்களின் முதலாவது வான் பயணமாகும்.
- 1919 – ஆப்கானித்தானுக்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே துராந்து எல்லைக்கோடு தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.[1]
- 1929 – கிராஃப் செப்பலின் என்ற செருமானிய போர்க் கப்பல் உலகைச் சுற்றும் தனது பயணத்தை ஆரம்பித்தது.
- 1942 – இந்திய தேசிய காங்கிரசு பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1945 – நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை நிர்ணயிக்க பிரான்சு, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகள் இலண்டனில் கூடின.
- 1947 – பாக்கித்தானின் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டது.
- 1963 – இங்கிலாந்தில் இடம்பெற்ற பெரும் தொடருந்துக் கொள்ளையில் 15 பேரடங்கிய கொள்ளையர் குழு £ 2.6 மில்லியன் பணத்தைக் கொள்ளையடித்தது.
- 1967 – தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) அமைப்பு இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய இணைந்து உருவாக்கப்பட்டது.
- 1973 – தென் கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அரசுத்தலைவர்) கிம் டாய் ஜுங் கடத்தப்பட்டார்.
- 1974 – வாட்டர்கேட் ஊழல்: அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சன் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி அடுத்த நாள் முதள் தனது பதவியைத் துறக்கவிருப்பதாக அறிவித்தார்.
- 1988 – பர்மாவில் ரங்கூன் நகரில் மக்களாட்சியை வலியுறுத்தி எழுச்சி நிகழ்ந்தது. செப்டம்பர் 18 இல் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததை அடுத்து இவ்வார்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
- 1989 – ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.
- 1990 – ஈராக் குவெய்த்தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. சில நாட்களில் வளைகுடாப் போர் ஆரம்பமானது.
- 1991 – அக்காலத்தில் மிக உயர்ந்த அமைப்பு வார்சாவா வானொலித் தொலைத்தொடர்பு கோபுரம் இடிந்து வீழ்ந்தது.
- 1992 – யாழ்ப்பாணம், அராலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.
- 1993 – குவாமில் இடம்பெற்ற 7.8 அளவு நிலநடுக்கத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது, 71 பேர் காயமடைந்தனர்.
- 1998 – ஆப்கானித்தான் மசார் ஈ சரீப் நகரில் ஈரான் தூதரகம் தாலிபான்களால் தாக்கப்பட்டதில் பத்து தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
- 2000 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் மூழ்கிய அமெரிக்க கூட்டமைப்பின் எச்.எல்.ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
- 2006 – திருகோணமலைக்கு வடக்கே வெல்வெறிப் பகுதியில் கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 2008 – சீனா, பெய்ஜிங் நகரில் 29-வது ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
- 2008 – போலந்தின் கிராக்கோவ்வில் இருந்து செக் குடியரசு பிராகா நோக்கிச் சென்ற யூரோசிட்டி விரைவுத் தொடர் வண்டி செக் குடியரசில் விபத்துக்குள்ளானதில் எட்டுப் பேர் உயிரிழந்தனர், 64 பேர் காயமடைந்தனர்.
- 2010 – சீனாவில் கான்சு மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு, மற்றும் மண்சரிவில் சிக்கி 1,400 பேர் உயிரிழந்தனர்.
- 2014 – மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு பன்னாட்டு அளவில் பொதுநல அவசரகால நிலையை அறிவித்தது.
- 2016 – பாக்கித்தான் குவெட்டாவில் அரச மருத்துவமனை ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 70 முதல் 94 பேர் வரை கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1170 – புனித தோமினிக், புனிதர், தொமினிக்கன் சபை நிறுவனர் (இ. 1221)
- 1705 – கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ், இலங்கையின் ஒல்லாந்த ஆளுனர் (இ. 1750)
- 1873 – அழகசுந்தரம், இலங்கைத் தமிழறிஞர் (இ. 1941)
- 1884 – சாரா டீஸ்டேல், அமெரிக்கக் கவிஞர், கல்வியாளர் (இ. 1933)
- 1901 – எர்னஸ்ட் லாரன்சு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1958)
- 1902 – பால் டிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1984)
- 1909 – சார்ல்ஸ் லிட்டில்டன், நியூசிலாந்தின் 9வது ஆளுநர், துடுப்பாட்ட வீரர் (இ. 1977)
- 1921 – உலிமிரி இராமலிங்கசுவாமி, இந்திய நோயியலாளர் (இ. 2001)
- 1924 – அ. ந. கந்தசாமி, ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் (இ. 1968)
- 1927 – வி. எஸ். துரைராஜா, இலங்கைக் கட்டிடக் கலைஞர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 2011)
- 1931 – உரோசர் பென்ரோசு, ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், மெய்யியலாளர்
- 1940 – திலீப் சர்தேசாய், அருச்சுனா விருது பெற்ற இந்தியத் துடுப்பாளர் (இ. 2007)
- 1941 – டிரோன் பர்னான்டோ, இலங்கை அரசியல்வாதி (இ. 2008)
- 1941 – கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத், இந்திய வணிகத்துறைப் பேராசிரியர் (இ. 2010)
- 1948 – சிவெத்லானா சவீத்சுக்கயா, உருசிய விண்வெளி வீராங்கனை
- 1951 – முகம்மது முர்சி, எகிப்தின் 5வது அரசுத்தலைவர்
- 1952 – சோ. தர்மன், தமிழக எழுத்தாளர்
- 1974 – மஞ்சுள் பார்கவா, கனடிய-அமெரிக்க கணிதவியலாளர்
- 1977 – முகம்மது வசீம், பாக்கித்தானித் துடுப்பாளர்
- 1981 – ரொஜர் பெடரர், சுவிட்சர்லாந்து டென்னிசு வீரர்
- 1990 – கேன் வில்லியம்சன், நியூசிலாந்துத் துடுப்பாளர்
இறப்புகள்
- 117 – திராயான், உரோமைப் பேரரசர் (பி. 53)
- 1909 – மேரி மக்கிலொப், ஆத்திரேலியக் கத்தோலிக்கப் புனிதர் (பி. 1842)
- 1916 – யமஹா, டொரகுசு, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1851)
- 1946 – உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1867)
- 1998 – அன்னா ஜேன் ஆரிசன், அமெரிக்க வேதியியலாளர் (பி. 1912)
- 2000 – எஸ். நிஜலிங்கப்பா, கர்நாடக அரசியல்வாதி (பி. 1902)
- 2000 – கா. கைலாசநாதக் குருக்கள், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1921)
- 2016 – ஜோதிலட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1948)
- 2024 – புத்ததேவ் பட்டாசார்யா, மேற்கு வங்கத்தின் 7வது முதலமைச்சர் (இ. 1944)
சிறப்பு நாள்
- தந்தையர் தினம் (மங்கோலியா, சீனக் குடியரசு)
- போர்நிறுத்த நாள் (ஈராக்கிய குர்திஸ்தான்)
- பன்னாட்டுப் பூனை நாள்
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
- "ஆகத்து 8 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.