ஈராக்கிய குர்திஸ்தான்
ஈராக்கிய குர்திஸ்தான் (Iraqi Kurdistan) அல்லது குர்திஸ்தான் பிராந்தியம் (Kurdistan Region, குர்து: ههرێمی کوردستان, ஹெரேமி குர்திஸ்தான்), என்பது ஈராக்கின் ஒரு தன்னாட்சிப் பகுதியாகும்.[4] இதன் எல்லைகளாக கிழக்கே ஈரான், வடக்கே துருக்கி, மேற்கே சிரியா, தெற்கே ஈராக்கின் ஏனைய பகுதிகள் ஆகியன அமைந்துள்ளன. இப்பிராந்தியத்தின் தலைநகர் அர்பில். குர்திஸ்தான் பிராந்திய அரசு இதனை அதிகாரபூர்வமாக நிருவகித்து வருகிறது.
ஈராக்கிய குர்திஸ்தான் Iraqi Kurdistan Herêmî Kurdistan
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண்: Ey Reqîb (தமிழ்: "ஓ, எதிரி") |
||||||
ஈராக்கில் ஈராக்கிய குர்திஸ்தானின் (கருநீலம்) அமைவிடம்
|
||||||
தலைநகரம் | அர்பில் 36°11′N 44°00′E / 36.183°N 44.000°E | |||||
பெரிய நகர் | தலைநகர் | |||||
ஆட்சி மொழி(கள்) | குருதியம், அரபு[1] | |||||
வேறு மொழிகள் | நியோ-அரமாய மொழிகள் | |||||
மக்கள் | குர்து,[2] | |||||
அரசாங்கம் | நாடாளுமன்ற முறை | |||||
• | அரசுத்தலைவர் | மசூத் பர்சானி | ||||
• | பிரதமர் | நெச்சிர்வன் பர்சானி | ||||
தன்னாட்சிப் பகுதி ஈராக்கிய குர்திஸ்தான் | ||||||
• | தன்னாட்சிக்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்டது | மார்ச் 11, 1970 | ||||
• | நிகழ்வுநிலை விடுதலை பெற்றது | அக்டோபர், 1991 | ||||
• | குர்திஸ்தான் பிராந்திய அரசு (குபிஅ) உருவாக்கம் | சூலை 4, 1992 | ||||
• | குபிஅ இன் தன்னாட்சி அதிகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. | சனவரி 30, 2005 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 40,643 கிமீ2 15,692 சதுர மைல் |
||||
மக்கள் தொகை | ||||||
• | 2010 கணக்கெடுப்பு | 4,690,939[3] | ||||
நாணயம் | ஈராக்கிய தினார் (IQD) | |||||
நேர வலயம் | UTC +3 | |||||
வாகனம் செலுத்தல் | வலது | |||||
அழைப்புக்குறி | +964 | |||||
இணையக் குறி | .iq |
பல ஆண்டுகள் போரின் பின்னர் 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் குருதிய எதிர்க்கட்சிகளுக்கும் ஈராக்கிய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து குர்திஸ்தான் பிராந்தியம் உருவாக்கப்பட்டது. 1980களில் இடம்பெற்ற ஈரான் – ஈராக் போர், ஈராக்கிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அன்ஃபால் இனப்படுகொலைகள் போன்றவை இப்பிராந்திய மக்களையும் இதன் இயற்கையையும் மிகவும் பாதித்தது. சதாம் உசேனுக்கு எதிரான 1991 மக்கள் எழுச்சி நடத்ததை அடுத்து பெரும்பாலான குருதியர்கள் அண்டை நாடுகளான ஈரான், மற்றும் துருக்கியில் புகலிடத்திற்காக இடம்பெயர்ந்தனர். 1991 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வளைகுடாப் போரை அடுத்து குர்திய அகதிகள் மீண்டும் நாட்டுக்குள் திரும்பி வருவதற்காக வடக்கே வான்பரப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது. குர்தியர்கள் அரசுப் படையினருக்கு எதிராகத் தொடர்ந்து போரிட்டு வந்ததால், 1991 அக்டோபரில் ஈராக்கிய குர்திஸ்தான் என்று அப்பிராந்தியத்தில் நிகழ்வுநிலை அரசு அமைக்க வழிவகுத்தது. ஆனாலும் குருதியர்களின் முக்கிய இரு அரசியல் கட்சிகளும் தனிநாட்டை அறிவிக்கவில்லை, மாறாக ஈராக்கின் ஒரு பகுதியாகவே அது பார்க்கப்பட்டது. ஈராக் மீதான ஆக்கிரமிப்பு, 2003, மற்றும் அதன் பின்னரான அரசியல் நிகழ்வுகளை அடுத்து 2005 ஆம் ஆண்டில் ஈராக்கில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி ஈராக்கிய குர்திஸ்தான் ஈராக்கின் நடுவண் ஆட்சிக்குட்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்புள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது. அரபு மொழியும், குருதீசிய மொழியும் ஈராக்கின் இணைந்த ஆட்சி மொழிகளாக அறிவிக்கப்பட்டன. ஈராக்கிய குர்திஸ்தானின் பிராந்திய நாடாளுமன்றத்தில் 111 உறுப்பினர்கள் உள்ளனர்.[5]
இவற்றையும் பார்க்கவும்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-12-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Unknown parameter|https://web.archive.org/web/20101202061511/http://krg.org/articles/detail.asp?rnr=
ignored (உதவி); Unknown parameter|=
ignored (உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "CIA World Factbook: Iraq". 2018-12-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ [1] பரணிடப்பட்டது 2012-05-21 at the வந்தவழி இயந்திரம் Kurdistan Regional Government
- ↑ Viviano, Frank (January 2006). "The Kurds in Control". National Geographic Magazine (வாசிங்டன், டி. சி.). http://ngm.nationalgeographic.com/features/world/asia/iraq/iraqi-kurds-text. பார்த்த நாள்: 2008-06-05. "Since the aftermath of the 1991 gulf war, nearly four million Kurds have enjoyed complete autonomy in the region of Iraqi Kurdistan...".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2012-03-30 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-06-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)
வெளி இணைப்புகள்தொகு
- Travel Iraqi Kurdistan பரணிடப்பட்டது 2013-01-08 at the வந்தவழி இயந்திரம் Travel Information and forum for the region.
- Kurdistan Region Presidency
- Kurdistan Regional Government பரணிடப்பட்டது 2016-05-06 at the வந்தவழி இயந்திரம்