அர்பில்

ஈராக்கிய குர்திசு பிராந்தியத்தின் தலைநகரம்

அர்பில் அல்லது எர்பில் (Erbil, also known as Hewler) (குர்தியம்: Hewlêr, வார்ப்புரு:Lang-ckb; அரபு மொழி: أربيلArbīl) என்பது ஈராக்கிய குர்திஸ்தானின் தலைநகரமாகும். பகுதாதுவிற்கு வடமேற்காக இது அமைந்துள்ளது. 2011இன் மதிப்பீட்டின் அடிப்படையில் தற்கால ஈராக் நாட்டின் மேல் மெசொப்பொத்தேமியாவில் உள்ள அர்பில் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1.61 மில்லியன் ஆகும்.[1] மக்கள் தொடர்ந்து வாழும் பண்டைய நகரங்களில் ஒன்றாக அர்பில் நகரம் விளங்குகிறது. பண்டைய அர்பில் நகரத்தில் மனிதக் குடியிருப்புகள் கிமு 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது.[2]

அர்பில்
ھەولێر
எர்பில்
அர்பில் நகர்புரம், பழைய மினார், முபாரக் பென் அகமதுவின் சிலை மற்றும் அர்பில் அரண்மனை
அர்பில் நகர்புரம், பழைய மினார், முபாரக் பென் அகமதுவின் சிலை மற்றும் அர்பில் அரண்மனை
நாடு ஈராக்
பகுதி ஈராக்கிய குர்திஸ்தான்
மாகாணம்அர்பில் மாகாணம்
அரசு
 • ஆளுநர்நவ்சாட் கட்டி
ஏற்றம்
420 m (1,380 ft)
மக்கள்தொகை
 (2013 கணக்கெடுப்பு)
 • மொத்தம்1.5 மில்லியன்
நேர வலயம்UTC+3
 • கோடை (பசேநே)not observed

அர்பில் நகரத்தின் மையத்தில் பண்டைய அரண்மனை உள்ளது. சுமேரியாவின் மூன்றாவது ஊர் வம்ச மன்னர் சுல்க்கி என்பவர் (கிமு 2094 – கிமு 2047) இந்நகரத்தைப் பற்றி குறித்துள்ளார். இந்நகரத்தைப் பின்னர் பழைய அசிரியப் பேரரசினர் (கிமு 2025 -–கிமு 1378) கைப்பற்றினர்.[3][4]

கிமு 21-ஆம் நூற்றாண்டிலிருந்து, கிமு 7-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, அசிரியப் பேரரசின் முக்கிய நகரமாக அர்பில் நகரம் இருந்தது. அசிரிய வரலாற்றுப் பதிவேடுகளின் படி, கிமு எழாம் நூற்றாண்டில் இறுதியில் இந்நகரத்தை குடியன்கள் கைப்பற்றி ஆண்டனர். குடியன்களுக்குப் பின்னர் கிமு எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்நகரம் புது பாபிலோனியப் பேரரசின் (கிமு 626 - 539) கீழ் சென்றது. பின்னர் அர்பில் நகரம் மீடியாப் பேரரசு, அகாமனிசியப் பேரரசு, கிரேக்கப் பேரரசு, செலூக்கியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு, உரோமைப் பேரரசு, சாசானியப் பேரரசுகளின் கீழ் இருந்தது. கிபி எழாம் நூற்றாண்டு முதல் இசுலாமிய மதம் தோன்றி வளர்ந்த போது, உமையா கலீபகத்தின் கீழ் சென்றது. பின்னர் செல்யூக் பேரரசு (1037–1194) மற்றும் துருக்கிய உதுமானியப் பேரரசின் (1299–1922) கீழ் சென்றது.[5]

பண்டைய அண்மை கிழக்கு நகரத் தொல்லியல் மேடுகளில் கண்டெடுத்த தொல் பொருட்கள் அர்பில் நகர அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளது. சூலை 2014-இல் அர்பில் நகரத்து பண்டைய அரண்மனையை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஈராக்கிய குர்திஸ்தான் தலைமையிடமான அர்பில் நகரத்தில் குர்து மக்கள், அசிரிய மக்கள், இராக்கிய துருக்கியர்கள், இராக்கிய அரபுகள், யாசிதி மக்கள் மற்றும் ஆர்மீனியர்கள் வாழ்கின்றனர். மேலும் சன்னி முஸ்லீம்கள், சியா முஸ்லீம்கள், கிறித்தவர்கள், யாசிதிகள் வாழ்கின்றனர்.

அன்பு, காதல், அழகு, செழிப்பு, போர் மற்றும் வீரத்திற்கு அடையாளமான சுமேரியக் கடவுளான இஷ்தர் பெண் தேவதையின் வழிபாட்டு மையமாக அர்பில் நகரம் விளங்கியது.[6] தற்போது குர்து மக்கள் இந்நகரத்தை Hewlêr என்று அழைக்கின்றனர்.

வரலாறு

தொகு
 
அர்பில் அரண்மனை, குர்திஸ்தான், ஈராக்
 
சால்டியர் கிறித்தவ தேவாலயம், அர்பில்

பண்டைய வரலாறு

தொகு

சுமேரியாவின் வடக்கில் மேல் மெசொப்பொத்தேமியாவில் அமைந்த அர்பில் நகரத்தைப் பற்றிய குறிப்புகள், எப்லா இராச்சியத்தின் வரலாற்றுக் குறிப்புகள் ஆப்பெழுத்தில் எழுதப்பட்ட களிமண் பலகைகள் மூலம் அறியப் படுகிறது. அர்பில் நகரம் அக்காடியப் பேரரசின் (கிமு 2335 – 2154) கீழ் இருந்தது. கிமு 2150-இல் குடியன்கள் அர்பில் நகரத்தை கைப்பற்றினர்.[7]ஊரின் முதல் பாபிலோனியப் பேரரசர் அமர் - சின் என்வர் அர்பில் நகரத்தை கிமு 1975-இல் அழித்தார்.

கிமு 2050-இல் பழைய அசிரியப் பேரரசிலும் (கிமு 1975–1750), மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1392 – கிமு 9340) மற்றும் புது அசிரியப் பேரரசு (கிமு 935–605) வரை அசிரியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அர்பில் நகரம் இருந்தது. கிமு 612-519-இல் அசிரிய மற்றும் பாபிலோனியப் பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் அர்பில் நகரம் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு, செலூக்கியப் பேரரசு, உரோமைப் பேரரசு மற்றும் சாசானியப் பேரரசுகள் ஆண்டது.[8]

கிபி 636-க்கு பின்னர் இசுலாமிய எழுச்சியால் அர்பில் நகரம் உமையா கலீபகத்தின் கீழ் சென்றது. பின்னர் அப்பாசியக் கலீபகத்தின் கீழ் சென்றது. அர்பில் நகரத்து குர்து இன அய்யூப்பிய வம்சத்தினர் கிபி 1174 முதல் 1254 முடிய அர்பில் நகரத்தை தலைநகராகக் கொண்டு மெசொப்பொத்தேமியாவைக் கைப்பற்றி ஆண்டார்.[9] பின்னர் 1922 வரை உதுமானியப் பேரரசின் கீழ் அர்பில் நகரம் இருந்தது. 1237-இல் மங்கோலியர்கள் மத்திய கிழக்கு பகுதியை ஆக்கிரமித்து அர்பில் நகரத்தை சூறையாடினர்.

1397-இல் தைமூரின் படைகள் அர்பில் நகரத்தை கைப்பற்றி சூறையாடினார்.[10] அர்பில் நகரம் முதல் உலகப் போர் முடியும் வரை 400 ஆண்டுகள் துருக்கியின் உதுமானியப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியது. பின்னர் அர்பில் நகரம் பிரித்தானியாவின் காலனியாதிக்கத்தில் இருந்தது.

நவீன வரலாறு

தொகு

3அக்டோபர் 1932-இல் ஈராக் நாடு பிரித்தானியாவிடமிருந்து விடுதலைப் பெற்றது. பாக்தாத் மற்றும் மோசுல் நகரங்களுக்கிடையே அர்பில் நகரம் வணிக மையமாக விளங்கியது. தற்போதைய ஈராக் நாட்டின் வடக்கில் அமைந்த ஈராக்கிய குர்திஸ்தான் தன்னாட்சி பிரதேசத்தின் தலைமையிடமாக உள்ள அர்பில் நகரத்தில் இசுலாமிய குர்து மக்கள் பெரும்பான்மையினராகவும், அரேபியர்கள், அசிரிய மக்கள், யாசிதி மக்கள், கிறித்துவ ஆர்மீனியர்கள் சிறுபான்மையினராகவும் உள்ளனர்.

காலநிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், அர்பில்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 20
(68)
27
(81)
30
(86)
34
(93)
42
(108)
44
(111)
48
(118)
49
(120)
45
(113)
39
(102)
31
(88)
24
(75)
49
(120)
உயர் சராசரி °C (°F) 12.4
(54.3)
14.2
(57.6)
18.1
(64.6)
24
(75)
31.5
(88.7)
38.1
(100.6)
42
(108)
41.9
(107.4)
37.9
(100.2)
30.7
(87.3)
21.2
(70.2)
14.4
(57.9)
27.2
(80.96)
தினசரி சராசரி °C (°F) 7.4
(45.3)
8.9
(48)
12.4
(54.3)
17.5
(63.5)
24.1
(75.4)
29.7
(85.5)
33.4
(92.1)
33.1
(91.6)
29
(84)
22.6
(72.7)
15
(59)
9.1
(48.4)
20.18
(68.33)
தாழ் சராசரி °C (°F) 2.4
(36.3)
3.6
(38.5)
6.7
(44.1)
11.1
(52)
16.7
(62.1)
21.4
(70.5)
24.9
(76.8)
24.4
(75.9)
20.1
(68.2)
14.5
(58.1)
8.9
(48)
3.9
(39)
13.22
(55.79)
பதியப்பட்ட தாழ் °C (°F) -4
(25)
-6
(21)
-1
(30)
3
(37)
6
(43)
10
(50)
13
(55)
17
(63)
11
(52)
4
(39)
-2
(28)
-2
(28)
−6
(21)
பொழிவு mm (inches) 111
(4.37)
97
(3.82)
89
(3.5)
69
(2.72)
26
(1.02)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
12
(0.47)
56
(2.2)
80
(3.15)
540
(21.26)
ஈரப்பதம் 74.5 70 65 58.5 41.5 28.5 25 27.5 30.5 43.5 60.5 75.5 50.04
சராசரி பொழிவு நாட்கள் 9 9 10 9 4 1 1 3 6 10
சராசரி பனிபொழி நாட்கள் 1 0 0 0 0 0 0 0 0 0
Source #1: Climate-Data.org,[11] My Forecast for records, humidity, snow and precipitation days[12]
Source #2: What's the Weather Like.org,[13] Erbilia[14]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ministry of Planning".
  2. Novice, Karel (2008). "Research of the Arbil Citadel, Iraq, First Season". Památky Archaeological (XCIX): 259–302. 
  3. Villard 2001
  4. Hamblin, William J. (2006). Warfare in the Ancient Near East to 1600 BC. Routledge. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-25589-9.
  5. Georges Roux – Ancient Iraq
  6. Ishtar, MESOPOTAMIAN GODDESS
  7. Timeline பரணிடப்பட்டது 14 ஆகத்து 2014 at the வந்தவழி இயந்திரம்
  8. Erbil ANCIENT CITY, IRAQ
  9. V. Minorsky. Studies in Caucasian History III, Prehistory of Saladin. Cambridge University Press. 208 pp. 1953.
  10. Edwin Munsell Bliss, Turkey and the Armenian Atrocities, (Chicago 1896) p. 153
  11. "Climate: Arbil - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 13 August 2013.
  12. "Irbil, Iraq Climate". My Forecast. பார்க்கப்பட்ட நாள் 14 July 2013.
  13. "Erbil climate info". What's the Weather Like.org. பார்க்கப்பட்ட நாள் 14 July 2013.
  14. "Erbil Weather Forecast and Climate Information". Erbilia. Archived from the original on 9 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 14 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்பில்&oldid=3927243" இலிருந்து மீள்விக்கப்பட்டது