உலிமிரி இராமலிங்கசுவாமி
மரணத்தின் காரணத்தை ஆராயும் மருத்துவர்
உலிமிரி இராமலிங்கசுவாமி (ஆகஸ்டு 8, 1921 – மே 28, 2001)[1][2] ஓர் இந்திய மருத்துவ அறிஞர் ஆவார். ஊட்டச்சத்து இயலில் இவர் செய்த முன்னோடி ஆய்வுகளின் காரணமாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய அறிவியல் கழகம், இலண்டன் அரச கழகம் ஆகிய அமைப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார் [3]
உலிமிரி இராமலிங்கசுவாமி | |
---|---|
பிறப்பு | 8 ஆகஸ்டு 1921 ஆந்திரப் பிரதேசம்,இந்தியா |
இறப்பு | 28 மே 2001 |
குடியுரிமை | இந்தியா |
துறை | Pathology |
பணியிடங்கள் | அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை, இந்திய தேசிய அறிவியல் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | ஆந்திர மருத்துவக் கல்லூரி |
புதுதில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநராகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
இந்திய அரசு இவருக்கு பத்ம சிறீ (1969), பத்ம பூசண், பத்ம விபூசண் ஆகிய விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Menon, M. G. K.; Tandon, P. N. (2008). "Vulimiri Ramalingaswami. 8 August 1921 -- 28 May 2001". Biographical Memoirs of Fellows of the Royal Society 54: 297. doi:10.1098/rsbm.2007.0033.
- ↑ Mittra, I. (2002). "Vulimiri Ramalingaswami". BMJ 324 (7331): 242f–. doi:10.1136/bmj.324.7331.242f.
- ↑ "Lists of Royal Society Fellows 1660-2007". London: The Royal Society. பார்க்கப்பட்ட நாள் 4 October 2010.