இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை
இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் அல்லது இந்திய மருத்துவ ஆரய்ச்சி சபை (Indian Council of Medical Research - ICMR) என்பது உயிரியல் மருத்துவ ஆய்விற்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான உச்சபட்ச அதிகாரம் கொண்ட இந்திய நிறுவனம் ஆகும். இது உலகினுள்ள பழமையான மற்றும் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சிக் குழுக்களில் ஒன்றாகும். இந்த சபைக்கு தேவையான நிதியை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வழங்குகிறது.[1][2]
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) | |
---|---|
சுருக்கம் | ICMR |
துவங்கியது | 1911 ( IRFA); 1949 (ICMR எனப் பெயர்மாற்றம்) |
வகை | அரசு நிறுவனம் |
தலைமையகம் | புது தில்லி |
Region served | இந்தியா |
செயலர் & தலைமை இயக்குநர் | சௌம்யா சுவாமிநாதன் (அறிவியலாளர்) |
வலைத்தளம் | www.icmr.nic.in |
வரலாறு
தொகு1911 ஆம் ஆண்டில், இந்திய அரசால் இந்திய ஆராய்ச்சி நிதி சங்கம் (ஐஆர்ஏஏ) என்ற அமைப்பு நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியினை ஒருங்கிணைப்பதற்கான குறிப்பிட்ட நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 1949 ஆம் ஆண்டில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையாக (ஐ.சி.எம்.ஆர்) மாற்றியமைக்கப்பட்டது.
நிர்வாகக் குழு
தொகுசபையின் நிர்வாகக் குழு மத்திய சுகாதார அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சபையில் உயிர்மருத்துவத் துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்கள் உள்ளனர். எனவே தேவையானபோது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களில் உதவுகிறது. இந்தச் சபையின் வழிகாட்டுதலில் கீழ்க்கண்ட குழுக்கள் போன்றவை உள்ளன:
- அறிவியல் ஆலோசனை குழுக்கள்
- அறிவியல் ஆலோசனைக் குழுக்கள்
- நிபுணர் குழுக்கள்
- பணிக்குழுக்கள்
- திசைமாற்றக் குழுக்கள்
இது கவுன்சிலின் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளை மதிப்பீடு செய்து கண்காணிக்கும் பணியினை மேற்கொள்கிறது.
செயல்பாடுகள்
தொகுவிரிவான ஆராய்ச்சி மையங்கள், மேம்பட்ட ஆராய்ச்சிக்கான மையங்கள், சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை, மருத்துவ கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும்பிற ஐ.சி.எம்.ஆர் அல்லாத பிற ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் உருவாக்கப்பட்டு உள்ளன.
மேலும் இந்த சபையின் நிதி உதவியின் மூலமாக தெளிவாக வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன், குறிப்பிட்ட கால இடைவெளிகளுடன், தரப்படுத்தப்பட்ட மற்றும் சீரான ஆய்வுகள் மேர்கொள்ளப்படுகின்றன. ஐ.சி.எம்.ஆர் அல்லாத ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பல்வேறு விஞ்ஞானிகளிடமிருந்து பெறப்பட்ட மானிய-உதவி விண்ணப்பங்களின் அடிப்படையில் வெளிப்படையாக முடிவு எடுக்கப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. பல் மருத்துவ நிறுவனம், தில்லி மற்றும் NCRM ஆகியவற்றிற்கும் மற்ற நிறுவனங்களுடனும் கூட்டு ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.[3]
சான்றுகள்
தொகு- ↑ Dhar, Aarti; Joshi, Sandeep (2 June 2011). "No need to panic over WHO report on mobiles: ICMR". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/health/medicine-and-research/article2071344.ece.
- ↑ Bhargava, Pushpa M (12 November 2011). "Could they buy salt and spices, fuel and milk, and pay rent... with Rs. 2.33 a day?". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/opinion/open-page/article2622214.ece.
- ↑ "ICMR has signed a memorandum of understanding with the Nichi-In Centre for Regenerative Medicine - The Hindu News article". Chennai, India. 3 December 2007 இம் மூலத்தில் இருந்து 5 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071205164000/http://www.hindu.com/2007/12/03/stories/2007120359651100.htm.