இந்திய தேசிய அறிவியல் கழகம்

இந்திய தேசிய அறிவியல் கழகம் (Indian National Science Academy-INSA) என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அனைத்து துறைகளிலும் உள்ள இந்திய அறிவியலாளர்களுக்காக புது தில்லியில் அமைந்துள்ள தேசிய அவையாகும் ஆகும்.[1] பேராசிரியர் அசுதோசு சர்மா இந்த அவையின் தற்போதைய தலைவர் ஆவார் (2023-முதல்).

இந்திய தேசிய அறிவியல் கழகம்
நிறுவப்பட்டது7 சனவரி 1935; 89 ஆண்டுகள் முன்னர் (1935-01-07)
நிறுவனர்லீவிசு லெய் பெர்மோரி
தலைமையகம்
ஆள்கூறுகள்28°37′43.8″N 77°14′26.7″E / 28.628833°N 77.240750°E / 28.628833; 77.240750
தலைவர்
அசுதோசு சர்மா
வலைத்தளம்insaindia.res.in
Map

வரலாறு

தொகு

இந்தியத் தேசிய அறிவியல் கழகம், புது தில்லி, அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமாகும். இந்தியாவின் கொல்கத்தாவில் 1935ஆம் ஆண்டு இந்தியத் தேசிய அறிவியல் நிறுவனம் (NISI) நிறுவப்பட்டதிலிருந்து இந்தியத் தேசிய அறிவியல் கழகம் தோன்றியதாக அறியப்படுகிறது. அறிவியல் மற்றும் அறிவியலாளர்களின் நலன்களை மேம்படுத்துதல், அறிவியலை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த அவை தொடங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தால் இது முதன்மையான தேசிய அறிவியல் சங்கமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த அவையின் தலைமையகம் 1951-ல் தில்லியில் உள்ள இதன் தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டது.[2] 1968ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் முடிவு காரணமாக அனைத்து பன்னாடு அறிவியல் மன்றங்களிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தினை கட்டாயமாக்கியது இந்திய அரசு. 1970-ல், இந்திய தேசிய அறிவியல் நிறுவனம் இந்தியத் தேசிய அறிவியல் கழகம் எனும் புதிய பெயருடன் செயல்படத் தொடங்கியது. 1951ஆம் ஆண்டு பகதூர் சா ஜாபர் பகுதியில் தொடங்கப்பட்ட இதன் வளாகம் 1980களின் பிற்பகுதியில் - 90களின் நடுப்பகுதியில் நன்கு விரிவுபடுத்தப்பட்டது. இன்று ஏழு தளங்களுடன் அழகான வடிவிலான பொன்விழாக் கட்டிடத்துடன் அறிவியல் சேவையினை ஆற்றிவருகின்றது. இந்த பொன்விழாக் கட்டடம் 1996-ல் கட்டி முடிக்கப்பட்டது.[3]

கண்ணோட்டம்

தொகு

இந்திய தேசிய அறிவியல் கழகம் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தேர்தல் மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர்.[4] இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் நோக்கங்களாக இந்தியாவில் அறிவியலை மேம்படுத்துதல், தேசிய நலனுக்கான பயன்பாடு, அறிவியலாளர்களின் நலன்களை பாதுகாத்தல், ஒத்துழைப்பை வளர்த்தல், பன்னாட்டு அறிவியல் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்துதல் மற்றும் தேசிய பிரச்சினைகளில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய கருத்தை வெளிப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிப்பதிலும், அங்கீகரிப்பதிலும், வெகுமதி அளிப்பதிலும் இந்தியத் தேசிய அறிவியல் கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 'அறிவியல் தொழில்நுட்ப' துறையில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், 4 பிரிவுகளில் 59 விருதுகளை இந்நிறுவனம் நிறுவியுள்ளது. இவை:

  • பன்னாடு விருதுகள்,
  • பொது விருது & விரிவுரை விருதுகள்,
  • துறைவாரியான பதக்கங்கள்/சொற்பொழிவுகள் மற்றும்
  • இளம் விஞ்ஞானிகளுக்கான விருதுகள் .

இந்தியத் தேசிய அறிவியல் கழகம் 2004-ல் அறிவியல் மற்றும் மனித நேய அறிவியலுக்கான பெர்லின் பிரகடனம் கையெழுத்திட்டது.[5]

தலைவர்கள்

தொகு

கழகத்தின் தலைவர்கள் பட்டியல்.[6]

இராகவேந்தர் கடேகர்
அஜய் கே. சூட்
தலைவர் முதல் வரை
லூயிஸ் லே ஃபெர்மர் 1935 1936
மேகநாத சாஃகா 1937 1938
ராம்நாத் சோப்ரா 1939 1940
பைனி பிரசாத் 1941 1942
ஞான சந்திர கோஷ் 1943 1944
தாராஷா நோஷெர்வான் வாடியா 1945 1946
சாந்தி சுவரூப் பட்நாகர் 1947 1948
சத்தியேந்திர நாத் போசு 1949 1950
சுந்தர் லால் கோரா 1951 1952
கரியமாணிக்கம் சிறீனிவாச கிருஷ்ணன் 1953 1954
அமுல்யா சந்திர உகில் 1955 1956
பிரசந்தா சந்திரா மகாலனோபிசு 1957 1958
சிசிர் குமார் மித்ரா 1959 1960
அஜுதியா நாத் கோஸ்லா 1961 1962
ஹோமி ஜஹாங்கீர் பாபா 1963 1964
வ. ரா. கனோல்கர் 1965 1966
திருவேங்கடம் ராஜேந்திரம் சேசாத்ரி 1967 1968
ஆத்மா ராம் 1969 1970
பாகேபல்லி ராமசந்திரச்சார் சேசாச்சர் 1971 1972
தவுலத் சிங் கோத்தாரி 1973 1974
பெஞ்சமின் பியாரி பால் 1975 1976
ராஜா ராமண்ணா 1977 1978
உலிமிரி இராமலிங்கசுவாமி 1979 1980
மாம்பிள்ளகலத்தில் கோவிந்த் குமார் மேனன் 1981 1982
அருண் குமார் சர்மா 1983 1984
சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ் 1985 1986
அத்துர் சிங் பைனிடால் 1987 1988
மன் மோகன் சர்மா 1989 1990
பிரகாஷ் நரேன் தாண்டன் 1991 1992
சிறீ கிருஷ்ண குமார் 1993 1995
சீனிவாசன் வரதராஜன் 1996 1998
கோவர்த்தன் மேத்தா 1999 2001
எம். எசு. வாலிதன் 2002 2004
ரகுநாத் அனந்த் மசேல்கர் 2005 2007
மாமன்னமன விசயன் 2008 2010
கிருஷ்ண லால் 2011 2013
இராகவேந்தர் கடேகார் 2014 2016
அஜய் கே. சூட் 2017 2019
சந்திரிமா சாகா 2020 2022
அசுதோசு சர்மா 2023 முதல்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Indian National Science Academy, New Delhi". Department of Science and Technology, India. 2016. பார்க்கப்பட்ட நாள் October 17, 2016.
  2. "Indian National Science Academy (INSA)". Inter Academies. 2016. Archived from the original on ஏப்ரல் 5, 2017. பார்க்கப்பட்ட நாள் October 17, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Brochure of INSA-2020
  4. "About INSA". Indian National Science Academy. 2016. Archived from the original on 6 June 2017. பார்க்கப்பட்ட நாள் 17 October 2016.
  5. "Signatories". openaccess.mpg.de. பார்க்கப்பட்ட நாள் 2016-04-01.
  6. "Past Presidents". Indian National Science Academy. 2016. Archived from the original on அக்டோபர் 12, 2016. பார்க்கப்பட்ட நாள் October 17, 2016.

வெளி இணைப்புகள்

தொகு