எம். ஜி. கே. மேனன்
எம். ஜி. கே. மேனன் (Mambillikalathil Govind Kumar Menon ஆகஸ்டு 28, 1928 - நவம்பர் 22, 2016) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த இயல்பியலாளர். இந்திய விண்வெளித்துறையின் ஆலோசகராகவும், கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார். 1945 இல் தோற்றுவிக்கப்பட்ட டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தை ஹோமி பாபாவுக்குப் பிறகு வளர்த்தெடுத்தவர். இங்கிலாந்து பிரிசுட்டால் பல்கலைக் கழகத்தில் 1953 இல் ஆய்வுப் பட்டம் பெற்ற மேனன் காசுமிக் கதீர்கள் பற்றிய ஆய்வுகள் செய்தவர்.[1]
வகித்த பதவிகள்
தொகு1972 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஆனார். 1982- 1989இல் நடுவணரசு திட்டக் குழுவில் உறுப்பினராக இருந்தார். இந்தியப் பிரதம அமைச்சருக்கு 1986-89 ஆண்டுகளில் அறிவியல் ஆலோசகராகவும் இருந்தார். 1989 -90 இல் அறிவியல் தொழில்நுட்ப மற்றும் கல்வித் துறையின் மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார். 1990-96 இல் தில்லி மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
சிறப்புகள்
தொகுபத்மசிறீ விருது (1961)
பத்ம பூசண் விருது (1968)
பத்ம விபூசண் விருது (1985)
ராயல் சொசைட்டி பெல்லோ (1970)
2008 ஆம் ஆண்டில் எம்.ஜி.கே.மேனனை கௌரவிக்கும் வகையில் நூண்கோள் ஒன்றுக்கு 7564கோகுமேனன் எனப் பெயர் சூட்டப்பட்டது.[2]