க. சீ. கிருட்டிணன்

சர், கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan, கே. எசு. கிருட்டிணன்), டிசம்பர் 4 1898சூன் 14 1961) ஒரு புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர் ஆவார். ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற சர். சி. வி. இராமன் உடன் இணைந்து இவரும் இக் கண்டுபிடிப்பில் பங்கு கொண்டார். ராமன் விளைவு சம்பந்தமாக கிருஷ்ணன் ராமனுடன் இணைந்து 1927-ம் ஆண்டு முதல் 1929 வரை ஒளி விலகல் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகளை ‘நேச்சர்’ (Nature) என்ற இதழில் (சுமார் 20 கட்டுரைகள்) எழுதியுள்ளார். காந்தப் படிகங்கள் பற்றியும், சின்தெடிக் இயற்பியல் அடிப்படை விதிகள் குறித்தும் ஆய்வுசெய்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார். அணு ஆயுதத்துக்கு எதிராக சமாதான நோக்கில் உருவாகிய பக்வாஸ் இயக்கம் போன்ற பல்வேறு தளங்களில் இவரது பங்களிப்பு இருந்தது.[1]

கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன்
பிறப்பு(1898-12-04)திசம்பர் 4, 1898
வத்திராயிருப்பு, விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
இறப்புசூன் 14, 1961(1961-06-14) (அகவை 62)
தேசியம்இந்தியா
துறைஇயற்பியல்
பணியிடங்கள்மதராசு கிறித்துவக் கல்லூரி
அறிவியல் வளர்ச்சிக்கான இந்திய குழுமம்
தாக்கா பல்கலைக்கழகம்
அல்லகாபாது பல்கலைக்கழகம்
தேசிய இயற்பியல் ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள்அமெரிக்கன் கல்லூரி, மதுரை
மதராசு கிறித்துவக் கல்லூரி
கொல்கத்தா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஇராமன் விளைவு
படிகத்திய காந்தவியல்
காந்தம்சார் வேதியியல்
காந்தப்பண்புடைய படிகங்களில் சீர்மாறும் காந்தத்தன்மையை அளவிடும் நுட்பங்கள்
விருதுகள்பத்ம பூசன்
ராயல் சொசைட்டி ஃவெல்லோ(FRS)
செவீரன்(Knighthood)
பட்னாகர் நினைவுப் பரிசு

வாழ்க்கை தொகு

கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன், பொதுவாக கே. எசு. கிருட்டிணன் (K. S. Krishnan) அல்லது கே.எசு.கே (KSK) என்றே அறியப்பட்டார். இவர் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு (Watrap)  அருகில் அமைந்துள்ள விழுப்பனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை வேளாண்மைத் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும் அறிவும் கொண்டிருந்தார். கிருட்டிணன், திருவில்லிப்புத்தூரில் இருந்த ஜி. எஸ். இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

இவர் 1940 இல் பிரித்தானியாவில் உள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்வு செய்யப்பட்டார். 1946 இல் செவ்வீரர் (சர், knight) என்று பெருமைப்படுத்தப்பட்டார். 1954 ஆம் ஆண்டும் இந்தியாவின் பத்ம பூசன் விருது பெற்றார்[2]. 1961 இல் ரசாயன விஞ்ஞானங்களுக்காக சாந்தி ஸ்வருப் பட்னாகர் நினைவுப் பரிசு பெற்றார்.

இவரை பெருமைப்படுத்தும் விதமாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் அரங்கத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டு, அந்த அரங்கத்தின் முன்பு இவர் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.[3] தலைநகர் டெல்லியில் ஒரு சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

வகித்த பதவிகள் தொகு

  • சர்வதேச பௌதிக ஆராய்ச்சி இந்திய தேசிய கமிட்டியின் தலைவர்.
  • தேசிய பௌதிக ஆராய்ச்சி கமிட்டியின் இயக்குனர்.
  • சுதந்திர இந்தியாவில் பிரதமரின் விஞ்ஞான ஆலோசகராக முதலில் நியமிக்கப்பட்டவர்.

கிருட்டிணன் தமிழில் எழுதிய கட்டுரைகள் தொகு

  • நான் விஞ்ஞானத்தில் ஈடுபட்டவிதம்.
  • பூமியின் வயது என்ன.
  • சூரிய சக்தி.
  • உலக புரட்சியாளர் ஐன்ஸ்டைன்.[4]

கிருட்டிணன் பற்றிய புகழ்ச்சொற்கள் தொகு

  • இந்திய தலைமை அமைச்சர் சவகர்லால் நேரு: "என்ன குறிப்பிடத்தகுந்தது என்றால், கிருட்டிணன் மிகச்சிறந்த அறிவியலர் மட்டுமல்ல, அதைக்காட்டிலும் மேலானவர். அவர் நிறைமையான குடிமகன், ஒருங்கிணைந்த நற்பண்புகள் கொண்ட நிறைமனிதர்".[5]

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._சீ._கிருட்டிணன்&oldid=3723877" இருந்து மீள்விக்கப்பட்டது