திராயான்
திராயான் (Trajan, இலத்தீன்: Imperator Caesar Nerva Traianus Divi Nervae filius Augustus;[1] 18 செப்டம்பர் 53 – 8 ஆகத்து 117 கிபி) கிபி 98இலிருந்து தமது மரணம் வரை உரோமைப் பேரரசராக இருந்தவராவார். உரோமானிய செனட்டினால் மிகச் சிறந்த ஆட்சியாளர் (optimus princeps) என அறிவிக்கப்பட்டவர். இவரது ஆட்சிக்காலத்தில் உரோமை வரலாற்றிலேயே மிகப்பெரும் இராணுவ விரிவாக்கம் நடைபெற்றது; திராயான் உயிரிழக்கும்போது உரோமைப் பேரரசின் ஆட்சிக்கு கீழிருந்த நிலப்பகுதியே மிகக் கூடுதலானதாகும். தமது வள்ளல்தன்மைக்குப் பெயர்பெற்ற திராயான் பல பொதுக்கட்டிடங்களைக் கட்டினார்; பல சமூகநல கொள்கைகளை நடைமுறைப்படுத்தினார். இவற்றால் நிலநடுக்கடல் மண்டலத்தில் அமைதியும் வளமையும் மிக்க ஆட்சியைத் தந்த ஐந்து நல்ல பேரரசர்களில் இரண்டாவதாக புகழ் பெற்றுள்ளார்.[2]]
உரோமைப் பேரரசின் 13வது பேரரசர் | |||||
திராயானின் மார்புவரையானச் சிலை. | |||||
ஆட்சி | 28 சனவரி 98 – 8 ஆகத்து 117 | ||||
---|---|---|---|---|---|
முன்னிருந்தவர் | நெர்வா, தந்தையாக வரித்தவர் | ||||
பின்வந்தவர் | அத்ரியன் | ||||
மனைவி |
| ||||
| |||||
அரச குலம் | நெர்வா-அன்டானைன் | ||||
தந்தை | மார்கசு உல்பியசு டிராயனசு | ||||
தாய் | மார்சியா | ||||
பிறப்பு | இத்தாலிக்கா, இசுபானியா | 18 செப்டம்பர் 53||||
இறப்பு | 8 ஆகத்து 117 செலினசு, சிலிசியா | (அகவை 63)||||
அடக்கம் | உரோம் ( டிராஜானின் தூணடியில் அஸ்தி இருந்தது, தற்போது தொலைந்தது) |
அரசகுலம் இல்லாத இத்தாலியக் குடும்பத்தில் இசுபானியா பேடிகா மாநிலத்தில் திராயான் பிறந்தார்.[3] பேரரசர் டமிசியன் ஆட்சியில் முதன்மைக்கு வந்தார். கிபி 89இல் டமிசியனுக்கு எதிராக ரைன் ஆற்றை அடுத்து நிகழ்ந்த கலவரத்தை அடக்க இசுபானியா டரகோனென்சிசு மாநில அரசப்பிரதிநிதியாக (legatus legionis) இருந்த டிராஜான் உதவி புரிந்தார்.[4] செப்டம்பர் 96இல் டமிசியனுக்கு அடுத்ததாக மார்கசு கோக்கெசியசு நெர்வா என்ற மூத்த, குழந்தையற்ற செனட்டர் அரியணை ஏறினார். ஓராண்டு அதிகாரத்திலிருந்த நெர்வா பிரடோரியன் காவலர்களின் கிளர்ச்சியை அடக்கவியலாது மக்களாதரவைப் பெற்றிருந்த டிராஜானை மகனாகவும் வாரிசாகவும் வரித்துக் கொண்டார். சனவரி 27, 98இல் நெர்வா இறந்த பிறகு திராயான் அரியணை ஏறினார்.
உரோமை நகரத்தில் பல கட்டிட திட்டங்களை நிறைவேற்றியதற்காக பெரிதும் அறியப்படுகிறார். இன்றளவிலும் காணப்படுகின்ற டிராஜானின் மன்றம், டிராஜானின் சந்தை, திராயானின் தூண் ஆகியவற்றை நிர்மாணித்தார். போர்முனையில் சினாய் தீபகற்பத்திற்கும் அராபியத் தீபகற்பத்திற்கும் இடையேயமைந்திருந்த, நபடேயன் இராச்சியத்தை கையகப்படுத்தினார். தற்கால உருமேனியாவின் பகுதியாயுள்ள உரோமை டாசியாவை வென்றார். பெர்சிய பார்த்தியப் பேரரசுடனான போர் அதன் தலைநகரம் டெசிபோனின் வீழ்ச்சியுடன் முடிவுற்றது. இதனால் ஆர்மீனியாவையும் மெசொப்பொத்தேமியாவையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்தார். இவரது படை வெற்றிகளால் உரோமைப் பேரரசை அதன் வரலாற்றிலேயே மிகப் பரந்ததாக விரிவடைந்தது. கிபி 117இன் பிற்பகுதியில் உரோமைக்குத் திரும்பிப் போகையில் கப்பலில் நோய்வாய்ப்பபட்டார். பக்கவாதம் கண்ட டிராஜான் செலினியசில் மரணமடைந்தார். இவரை செனட் கடவுளாக்கியது; அவரது இறுதிச்சாம்பல் டிராஜானின் தூணின் கீழ் புதைக்கப்பட்டது. இவரையடுத்து இவரது தத்துப்பிள்ளை அத்ரியன் அரியணை ஏறினார்.
பேரரசராக, டிராஜானின் புகழ் இன்றளவும் நிலைத்துள்ளது — பத்தொன்பது நூற்றாண்டுகளாக புகழ்மங்கா பேரரசர்களில் இவரொருவர். இவரை அடுத்து முடிசூடிய ஒவ்வொரு பேரரசரும் செனட்டால் felicior Augusto, melior Traiano (" அகஸ்ட்டஸ் விட அதிர்டத்துடனும் டிராஜானை விட நன்றாகவும்") அரசாள வாழ்த்தப்பட்டனர். நடுக்கால கிறித்தவ சமயவியலாளர்கள், டிராஜானை ஓர் பேகனாக கருதினர். 18வது நூற்றாண்டு வரலாற்றாளர் எட்வார்ட் கிப்பன் ஐந்து நல்ல பேரரசர்கள் என்ற கருத்தியலைப் பரப்பினார்; இதில் இரண்டாவதாக டிராஜானை வைத்தார்.[5]
மேற்சான்றுகள்
தொகு- ↑ திராயானின் அரசப்பெயருக்கு இணையான பொருள்தரும் தமிழாக்கம் "தலைவர் சீசர் நெர்வா டிராஜான், தெய்வீக நெர்வாவின் மகன், பேரரசர்"
- ↑ Trajan ROMAN EMPEROR
- ↑ Julian Bennett, Trajan: Optimus Princeps, 2nd Edition, Routledge 2000, 12.
- ↑ Benett, Julian (1997). Trajan. Optimus Princeps. Routledge, pp. 30–31
- ↑ Nelson, Eric (2002). Idiots guide to the Roman Empire. Alpha Books. pp. 207–209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-864151-5.