குவெட்டா பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமாகும்.[1] இந்த நகரம் 1935 ஆம் ஆண்டில் குவெட்டா பூகம்பத்தில் பாரிய அளவில் சேதமாகியது. பின்பு மீளமைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 1,001,205 மக்கள் வசிக்கின்றனர்.[2] குவெட்டா மாவட்டத்தின் மக்கட் தொகை 2,275,699 ஆகும்.[3] குவெட்டா நகரம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1,680 மீற்றர் (5,510 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. பாக்கித்தானின் உயரமான ஒரே முக்கிய நகரமாக திகழ்கின்றது. இந்த நகரத்தை சூழ ஏராளமான பழத்தோட்டங்கள் காணப்படுவதாலும், பழங்களின் உற்பத்தி நடைப் பெறுவதாலும் பாக்கித்தானின் பழத்தோட்டம் என்று அழைக்கப்படுகின்றது.[4]

குவெட்டா
Quetta
کوئٹہ
 பொது விவரங்கள்
 நாடு பாகிஸ்தான்
 மாகாணங்கள் பலூசிஸ்தான்
 ஆள்கூறுகள் 30°21′36″N 67°01′12″E / 30.36000°N 67.02000°E / 30.36000; 67.02000
 ஏற்றம் 1,680 m (5,512 அடி) AMSL
 பரப்பளவு 2,653 km2 (1,024 sq mi)
 தொலைபேசி குறியீட்டு எண் 081
 நேர வலயம் பாநே (UTC+5)
 நகரங்களின் எண். 2
 மக்கள் தொகை 565,137 (1998)
 Estimate 759,894 (2006)
 அடர்த்தி 213/ச.கி.மீ (552/ச.மீ)
 அரசு
 No. of Union Councils 66[5]

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைக்கு அருகே வடக்கு பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா நகரம் இரு நாடுகளினதும் வர்த்தக மற்றும் தகவல் தொடர்பு மையமாகும். ஒரு காலத்தில் மத்திய ஆசியாவிலிருந்து தெற்காசியா வரையிலான முக்கிய நுழைவாயில்களில் ஒன்றாக இருந்த போலன் பாஸ் பாதைக்கு அருகில் இந்த நகரம் காணப்படுகின்றது. ஆப்கானிய போர்களின் போது பாக்கித்தான் இராணுவப் படைகளுக்கான முக்கிய தளமாக இந் நகரம் விளங்குகின்றது.

காலநிலை தொகு

குவெட்டா நகரம் கோப்பனின் காலநிலை வகைப்பாட்டிற்கு அமைய அரை வறண்ட காலநிலையை கொண்டது. கோடை மற்றும் குளிர்கால வெப்பநிலைகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க மாறுபாட்டைக் கொண்டுள்ளது. கோடைக் காலம் மே மாத இறுதியில் தொடங்கி செப்டம்பர் ஆரம்பம் வரை காணப்படும். கோடையின் சராசரி வெப்பநிலை 24–26 (C (75–79 °F) வரையில் பதிவாகும். 1998 ஆம் ஆண்டு சூலை 10 அன்று 42 °C (108 °F) வெப்பநிலை குவெட்டாவின் மிக உயர்ந்த வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டது.[6] இலையுதிர் காலம் செப்டம்பர் பிற்பகுதியில் தொடங்கி நவம்பர் நடுப்பகுதி வரை 12-18 °C என்ற சராசரி வெப்பநிலையுடன் தொடர்கின்றது. குளிர்காலம் நவம்பர் பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதியில் முடிவடைகிறது. குளிர்கால சராசரி வெப்பநிலை 4-5 °C (39–41 °F) க்கு அருகில் அமையும். குவெட்டாவின் மிகக் குறைந்த வெப்பநிலை -18.3 (C (.0.9 °F) ஆகும். இந்த வெப்பநிலை 1970 ஆம் ஆண்டு சனவரி 8 அன்று பதிவு செய்யப்பட்டது.[6] வசந்த காலம் ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கி மே மாத இறுதியில் முடிவடையும். வசந்த கால சராசரி வெப்பநிலை 15 °C (59 °F) ஆகும்.

குவெட்டாவில் பருவமழை அதிகமாக பெய்யாது. 24 மணி நேரத்தில் அதிக மழைவீழ்ச்சியாக 113 மில்லிமீற்றர் (4.4 அங்குலம்) மழைவீழ்ச்சி 2000 ஆம் ஆண்டு திசம்பர் 17 அன்று பதிவாகியது.

புள்ளிவிபரங்கள் தொகு

நகரத்தின் சனத்தொகை சுமார் ஒரு மில்லியன் ஆகும். 2016 ஆம் ஆண்டில் மக்கட்தொகை 1,140,000 என மதிப்பிடப்பட்டது.[7] ஆனால் 2017 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி 1,001,205 மக்கள் வசிப்பதாக கணக்கிடப்பட்டது. இந்த நகரம் பலுசிஸ்தான் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமாகவும், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. உருது தேசிய மொழியாகும். மேலும் அனைத்து குடியிருப்பாளர்களினாலும் பயன்படுத்தப்படுகின்றது.

ராய்ட்டர்ஸ் மற்றும் பிபிசி என்பன குவெட்டாவிலும், அதனை சூழவுள்ள பகுதிகளிலும் 500,000-600,000 வரையில் சியா ஹசராக்கள் வாழ்வதாக குறிப்பிடுகின்றன.[8][9]

நிர்வாகம் தொகு

இந்த நகரம் 66 வார்டு உறுப்பினர்கள் கொண்ட மாநகராட்சியினால் நிர்வகிக்கப்படுகின்றது.[10]

போக்குவரத்து தொகு

குவெட்டா பாக்கிஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் நாட்டின் பிற பகுதிகளுடன் சாலைகளினாலும், புகையிரதங்களினாலும் இணைக்கப்படுகின்றது.

கடல் மட்டத்திலிருந்து 1,605 மீற்றர் (5,266 அடி) உயரத்தில் அமைந்துள்ள குவெட்டா விமான நிலையம் பாகிஸ்தானின் இரண்டாவது மிக உயர்ந்த விமான நிலையமாகும்.[11] இஸ்லாமாபாத் , குவாடர் , கராச்சி , லாகூர் மற்றும் பெசாவர் உள்ளிட்ட பாகிஸ்தானின் பிற முக்கிய நகரங்களுக்கான விமா சேவையை பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் வழங்குகின்றது.

மேற்கோள்கள் தொகு

 1. "POPULATION SIZE AND GROWTH OF MAJOR CITIES". http://www.pbs.gov.pk/sites/default/files//tables/POPULATION%20SIZE%20AND%20GROWTH%20OF%20MAJOR%20CITIES.pdf. 
 2. "PROVISIONAL SUMMARY RESULTS OF 6TH POPULATION AND HOUSING CENSUS-2017 | Pakistan Bureau of Statistics". http://www.pbs.gov.pk/content/provisional-summary-results-6th-population-and-housing-census-2017-0. 
 3. "Wayback Machine". 2017-08-29. http://www.pbscensus.gov.pk/sites/default/files/DISTRICT_WISE_CENSUS_RESULTS_CENSUS_2017.pdf. 
 4. "My little world » The Fruit Garden of Pakistan - Quetta". http://www.asadasif.com/?itemid=8. 
 5. National Reconstruction Bureau of Pakistan, list of Zila, Tehsil & Town Councils Membership for Balochistan பரணிடப்பட்டது 2008-01-05 at the வந்தவழி இயந்திரம். URL accessed April 5th, 2006
 6. 6.0 6.1 "Wayback Machine". 2010-06-13. http://www.pakmet.com.pk/cdpc/Climate/Quetta_Climate_Data.txt. 
 7. "Quetta". http://www.demographia.com/db-worldua.pdf. 
 8. "Two killed in sectarian attack in southwestern Pakistan". https://www.reuters.com/article/us-pakistan-shooting/two-killed-in-sectarian-attack-in-southwestern-pakistan-idUSKBN1HT0N2. 
 9. ""The community caged in its own city"". https://www.bbc.co.uk/news/world-asia-42219669. 
 10. "Government Organization - Government of Balochistan". https://www.balochistan.gov.pk/index.php?option=com_content&view=article&id=836&Itemid=1087. 
 11. "Quetta airport". http://www.caapakistan.com.pk/quetta.aspx. "https://ta.wikipedia.org/w/index.php?title=குவெட்டா&oldid=3608581" இருந்து மீள்விக்கப்பட்டது