திசம்பர் 22
நாள்
(22 திசம்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 22 (December 22) கிரிகோரியன் ஆண்டின் 356 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 357 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒன்பது நாட்கள் உள்ளன
நிகழ்வுகள்
- 69 – பேரரசர் விட்டேலியசு ரோம் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
- 401 – முதலாம் இன்னசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 856 – பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 880 – தாங் சீனாவின் கிழக்குத் தலைநகர் இலுவோயங் கிளர்ச்சித் தலைவர் உவாங் சாவோவினால் கைப்பற்றப்பட்டது.
- 1135 – இசுட்டீவன் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.
- 1216 – தொமினிக்கன் சபையை திருத்தந்தை மூன்றாம் ஒனோரியசு அங்கீகரித்தார்.
- 1769 – சீன-பர்மியப் போர் (1765–69) முடிவுக்கு வந்தது.
- 1790 – துருக்கியின் இசுமாயில் நகரை உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் தலைமையிலான படையினர் கைப்பற்றினர்.
- 1807 – வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் அரசுத்தலைவர் ஜெபர்சனின் கோரிக்கைப் படி அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- 1845 – பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.
- 1849 – உருசிய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
- 1851 – இந்தியாவின் முதலாவது சரக்குத் தொடருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் ஓடவிடப்பட்டது.
- 1869 – எடின்பரோ கோமகன் இளவரசர் அல்பிரட் கல்கத்தா வந்தார்.[1]
- 1885 – இட்டோ இரோபுமி என்ற சாமுராய் சப்பானின் முதலாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1891 – புகைப்படம் மூலம் முதன் முதலாக '323 புரூசியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1915 – மலேசிய இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
- 1921 – சாந்திநிகேதன் கல்வி நிலையம் ஆரம்பமானது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வி-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய இட்லர் உத்தரவிட்டார்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: இந்தோசீனாவில் சப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
- 1948 – சாஃப்ருதீன் பிரவிரனேகரா மேற்கு சுமாத்திராவில் இந்தோனேசியக் குடியரசின் இடைக்கால அரசை அறிவித்தார்.
- 1963 – லக்கோனியா என்ற இடச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மதீராவில் மூழ்கியதில் 128 பேர் உயிரிழந்தனர்.
- 1964 – தனுஷ்கோடி புயல், 1964: தமிழ்நாடு, தனுஷ்கோடி, மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியையும் புயல் தாக்கியதில், 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 1974 – பிரான்சிடம் இருந்து பிரிந்து தனிநாடாக விருப்பம் தெரிவித்து கொமொரோசு மக்கள் வாக்களித்தனர். மயோட்டே பிரெஞ்சு நிருவாகத்தில் தொடர்ந்து இயங்க வாக்களித்தது.
- 1978 – மாவோ-கால இறுகிய கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைகளை சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் டங் சியாவுபிங் அறிமுகப்படுத்தினார்.
- 1978 – இலங்கையில் அப்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காக நடத்தப்பட்ட தேசிய வாக்கெடுப்பில் 54.66% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
- 1989 – உருமேனியாவின் கம்யூனிச அரசுத்தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இயோன் இலியெசுக்கு ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1989 – கிழக்கு செருமனியையும் மேற்கு செருமனியையும் பெர்லினில் பிரித்த பிரான்டென்போர்க் வாயில் 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.
- 1990 – லேக் வலேசா போலந்தின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1990 – மார்சல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன பொறுப்பாட்சி மன்றத்திடம் இருந்து விடுதலையடைந்தன.
- 2001 – வடக்குக் கூட்டணியின் தலைவர் புர்கானுத்தீன் ரப்பானி ஆப்கானித்தானின் ஆட்சியை ஹமித் கர்சாய் தலைமையிலான இடைக்கால அரசிடம் கையளித்தார்.
- 2018 – இந்தோனேசியாவில் சுண்டா நீரிணை ஆழிப்பேரலை ஏற்பட்டதில் 430 பேர் வரை உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1183 – சகதை கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1242)
- 1300 – குதுக்து கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1329)
- 1666 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு, கவிஞர் (இ. 1708)
- 1853 – சாரதா தேவி, இந்திய ஆன்மிகவாதி, மெய்யியலாளர் (இ. 1920)
- 1858 – ஜாக்கோமோ புச்சீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1924)
- 1887 – சீனிவாச இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920)
- 1885 – கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின், உருசிய வானியலாளர் (இ. 1946)
- 1892 – எர்மன் போட்டோச்னிக், குரோவாசிய-ஆத்திரியப் பொறியாளர் (இ. 1929)
- 1911 – குரோட் இரெபெர், கதிர்வீச்சு வானியலாளர் (இ. 2002)
- 1929 – சிலம்பொலி செல்லப்பன், தமிழக எழுத்தாளர் (இ. 2019)
- 1933 – சாலினி இளந்திரையன், தமிழறிஞர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (இ. 2000
- 1955 – தாமஸ் சி. சுதோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர்
- 1958 – ஜெயமாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 1419 – எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்
- 1936 – நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி, சோவியத் உருசிய எழுத்தாளர் (பி. 1904)
- 1942 – பிராண்ஸ் போவாஸ், செருமனிய-அமெரிக்க மொழியியலாளர் (பி. 1858)
- 1988 – சிகோ மெண்டிஸ், பிரேசில் தொழிற்சங்கத் தலைவர், செயற்பாட்டாளர் (பி. 1944)
- 2006 – வி. நவரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1910)
- 2008 – லன்சானா கொண்டே, கினியின் அரசுத் தலைவர் (பி. 1934)
- 2014 – ஜக்தேவ் சிங் ஜசோவால், பஞ்சாப் நூலாசிரியர், இலக்கியவாதி (பி. 1935)
- 2020 – அப்துல் ஜப்பார், தமிழக-இலங்கை ஊடகவியலாளர் (பி. 1939)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.